மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ يُوَآدُّونَ مَنْ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوْ كَانُوٓا۟ ءَابَآءَهُمْ أَوْ أَبْنَآءَهُمْ أَوْ إِخْوَٰنَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُو۟لَـٰٓئِكَ كَتَبَ فِى قُلُوبِهِمُ ٱلْإِيمَـٰنَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ رَضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ أُو۟لَـٰٓئِكَ حِزْبُ ٱللَّهِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱللَّهِ هُمُ ٱلْمُفْلِحُونَ
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினரை, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர், அவர்கள் தங்களின் பெற்றோர்களாயினும், அல்லது தங்களின் ஆண்மக்களாயினும், அல்லது தங்களின் சகோதரர்களாயினும் அல்லது தங்கள் குடும்பத்தவராயினும் சரியே! (காரணம்) அத்தகையோர்- அவர்களின் இதயங்களில் ஈமானை (விசுவாசத்தை அல்லாஹ்வாகிய) அவன் எழுதிவிட்டான், மேலும் தன்னிடமிருந்து (வெற்றி எனும்) ரூஹைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறான், இன்னும் அவர்களைச் சுவனங்களில் நுழையச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ் அவர்களை பொருத்திக் கொண்டான், அவனை அவர்களும் பொருத்திக் கொண்டார்கள், அவர்கள் தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்-அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
You (O Muhammad صلى الله عليه وسلم) will not find any people who believe in Allâh and the Last Day, making friendship with those who oppose Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم), even though they were their fathers or their sons or their brothers or their kindred (people). For such He has written Faith in their hearts, and strengthened them with Rûh (proofs, light and true guidance) from Himself. And He will admit them to Gardens (Paradise) under which rivers flow to dwell therein (forever). Allâh is pleased with them, and they with Him. They are the Party of Allâh. Verily, it is the Party of Allâh that will be the successful.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
سَبَّحَ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன, அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Whatsoever is in the heavens and whatsoever is on the earth glorifies Allâh. And He is the All-Mighty, the All-Wise.
هُوَ ٱلَّذِىٓ أَخْرَجَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ مِن دِيَـٰرِهِمْ لِأَوَّلِ ٱلْحَشْرِ ۚ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا۟ ۖ وَظَنُّوٓا۟ أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ ۖ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ ۚ يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِى ٱلْمُؤْمِنِينَ فَٱعْتَبِرُوا۟ يَـٰٓأُو۟لِى ٱلْأَبْصَـٰرِ
அவன் எத்தகையவனென்றால், வேதத்தையுடையோரில் நிராகரித்தார்களே அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து (மதீனாவிலிருந்து ஷாம் தேசத்தின் பால்) முதல் வெளியேற்றதிற்காகவேண்டி வெளியேற்றினான், அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளியேறிவிடுவார்களென்று நீங்கள் எண்ணவில்லை, மேலும், அவர்கள் தங்களுடைய கோட்டைகள், அல்லாஹ்வை விட்டுத் தங்களைத் தடுத்துகொள்பவை என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் எண்ணிப்பார்த்திராதவிதத்தில் அல்லாஹ் அவர்களிடம் (தனது வேதனையைக்கொண்டு) வந்துவிட்டான், மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப்போட்டான், (அதனால்) அவர்கள் தம் கரங்களாலும், விசுவாசிகளின் கரங்களாலும் தம் வீடுகளைப் பாழ்படுத்திக் கொண்டனர், பார்வை (விளக்கங்)கள் உடையோரே, (இதன்மூலம் உபதேசம் பெற்று) நீங்கள் படிப்பினை பெறுவீர்களாக!
He it is Who drove out the disbelievers among the people of the Scripture (i.e. the Jews of the tribe of Banû An-Nadîr) from their homes at the first gathering. You did not think that they would get out. And they thought that their fortresses would defend them from Allâh! But Allâh’s (Torment) reached them from a place whereof they expected it not, and He cast terror into their hearts so that they destroyed their own dwellings with their own hands and the hands of the believers. Then take admonition, O you with eyes (to see).
وَلَوْلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيْهِمُ ٱلْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِى ٱلدُّنْيَا ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابُ ٱلنَّارِ
மேலும், அல்லாஹ் அவர்களின்மீது (அவர்கள் குடும்ப சகிதம் அவர்களுடைய ஊரிலிருந்து) வெளியேறுவதை விதித்திருக்காவிடில், இவ்வுலகத்திலேயே அவன் அவர்களை வேதனை செய்திருப்பான், அன்றியும் மறுமையில் அவர்களுக்கு (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
And had it not been that Allâh had decreed exile for them, He would certainly have punished them in this world; and in the Hereafter theirs shall be the torment of the Fire.