மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَـٰجَيْتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَةً ۚ ذَٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَأَطْهَرُ ۚ فَإِن لَّمْ تَجِدُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (நம்முடைய) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியப்பேச்சிற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள், இது உங்களுக்கு மிகச்சிறந்ததும், மிகப்பரிசுத்தமானதுமாகும், (தர்மம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையானால், (அது குற்றமல்ல,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடைவன்.
O you who believe! When you (want to) consult the Messenger (Muhammad صلى الله عليه وسلم) in private, spend something in charity before your private consultation. That will be better and purer for you. But if you find not (the means for it), then verily, Allâh is Oft-Forgiving, Most Merciful.
ءَأَشْفَقْتُمْ أَن تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَـٰتٍ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا۟ وَتَابَ ٱللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
நீங்கள் உங்களுடைய இரகசியப்பேச்சிற்கு முன்னர், தர்மங்களை முற்படுத்த வேண்டுமென்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? எனவே, அச்சமயம் நீங்கள் செய்யாதபோது, அல்லாஹ் உங்களை மன்னித்தும் விட்டான், ஆகவே, தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள் ஜகாத்தையும் கொடுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடந்து கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்குணர்பவன்.
Are you afraid of spending in charity before your private consultation (with him)? If then you do it not, and Allâh has forgiven you, then (at least) perform Salât (Iqâmat-as-Salât ) and give Zakât and obey Allâh (i.e. do all that Allâh and His Messenger صلى الله عليه وسلم order you to do). And Allâh is All-Aware of what you do.
۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوْا۟ قَوْمًا غَضِبَ ٱللَّهُ عَلَيْهِم مَّا هُم مِّنكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى ٱلْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ
(நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டுவிட்டானோ, அக்கூட்டத்தினரை சிநேகிதர்களாக ஆக்கிகொண்டார்களே அத்தகையோர் பக்கம் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் உங்களில் உள்ளவர்களல்லர், (நீங்கள்) அவர்களிலும் உள்ளவர்களல்லர், அவர்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் (உங்களைச் சேர்ந்தவர்களென) பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர்.
Have you (O Muhammad صلى الله عليه وسلم) not seen those (hypocrites) who take as friends a people upon whom is the Wrath of Allâh (i.e. Jews)? They are neither of you (Muslims) nor of them (Jews), and they swear to a lie while they know.
أَعَدَّ ٱللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا ۖ إِنَّهُمْ سَآءَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையை தயாராக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள்- அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக்கெட்டது.
Allâh has prepared for them a severe torment. Evil indeed is that which they used to do.
ٱتَّخَذُوٓا۟ أَيْمَـٰنَهُمْ جُنَّةً فَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ
அவர்கள் தங்களுடைய (பொய்யான) சத்தியங்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், ஆகவே (மனிதர்களை) அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து விட்டனர். எனவே, அவர்களுக்கு இழிவுடைய வேதனையுண்டு.
They have made their oaths a screen (for their evil actions). Thus they hinder (men) from the Path of Allâh: so they shall have a humiliating torment.
لَّن تُغْنِىَ عَنْهُمْ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَـٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும், அவர்களை விட்டுத் தடுத்துவிடவே மாட்டாது, அத்தகையவர்கள் நரகவாசிகள் அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
Their children and their wealth will avail them nothing against Allâh. They will be the dwellers of the Fire to dwell therein forever.
يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًا فَيَحْلِفُونَ لَهُۥ كَمَا يَحْلِفُونَ لَكُمْ ۖ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَىٰ شَىْءٍ ۚ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْكَـٰذِبُونَ
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்புகின்ற (மறுமை) நாளில், அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்ததைப்போன்று, அவனிடத்திலும் (பொய்ச்) சத்தியம் செய்வார்கள், நிச்சயமாக தாங்கள் (உண்மையான) ஏதோ ஒன்றின்மீது இருப்பதாகவும் எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவர்கள்-அவர்கள் தாம் பொய்யர்கள்.
On the Day when Allâh will resurrect them all together (for their account); then they will swear to Him as they swear to you (O Muslims). And they think that they have something (to stand upon). Verily, they are liars!
ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَـٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِ ۚ أُو۟لَـٰٓئِكَ حِزْبُ ٱلشَّيْطَـٰنِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱلشَّيْطَـٰنِ هُمُ ٱلْخَـٰسِرُونَ
ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான், ஆகவே, அல்லாஹ்வைப்பற்றிய நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்துவிட்டான், இவர்கள் ஷைத்தானுடைய கூட்டத்தினர், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக ஷைத்தானுடைய கூட்டத்தினர்-அவர்கள் தான் நஷ்டமடைந்தோர்.
Shaitân (Satan) has overpowered them. So he has made them forget the remembrance of Allâh. They are the party of Shaitân (Satan). Verily, it is the party of Shaitan (Satan) that will be the losers!
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَـٰٓئِكَ فِى ٱلْأَذَلِّينَ
நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (அவர்களின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதன் மூலம்) விரோதிக்கின்றார்களே அத்தகையோர்-அவர்களே இழிவுகுள்ளானவர்களில் இருப்பர்.
Those who oppose Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم) they will be among the lowest (most humiliated).
كَتَبَ ٱللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا۠ وَرُسُلِىٓ ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ
“நிச்சயமாக நானும், என் தூதர்களும் மிகைத்து (வெற்றி பெற்று) விடுவோம்” என அல்லாஹ் எழுதிவிட்டான், நிச்சயமாக அல்லாஹ் பல மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
Allâh has decreed: "Verily, it is I and My Messengers who shall be the victorious." Verily, Allâh is All-Powerful, All-Mighty.