9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 484

/ 604
Page 484

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

42. Ash-Shuraaسورة الشورى

42:11

فَاطِرُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَمِنَ ٱلْأَنْعَـٰمِ أَزْوَٰجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

(அவனே) வானங்களையும், பூமியையும் புதிதாகப் படைத்தவன், உங்களுக்காக உங்களிலிருந்தே ஜோடி(களான மனைவி)களையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் அவன் ஆக்கி அதைக்கொண்டு (இன உற்பத்திகளை இவ்வாறே பெருக்கி) உங்களை அவன் அதில் பரவச் செய்கிறான், அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.

The Creator of the heavens and the earth. He has made for you mates from yourselves, and for the cattle (also) mates. By this means He creates you (in the wombs). There is nothing like Him; and He is the All-Hearer, the All-Seer.

42:12

لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனுக்கே உரியதாகும். அவன் நாடியவர்களுக்கு உணவை (சம்பத்தை) விரிவாக்குகின்றான், அளவோடும் கொடுக்கிறான். நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.

To Him belong the keys of the heavens and the earth. He enlarges provision for whom He wills, and straitens (it for whom He wills). Verily He is the All-Knower of everything.

42:13

۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ ۖ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ ۚ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ

(விசுவாசிகளே!) மார்க்கத்திலிருந்து நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கு அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான், ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீமூலம் அறிவித்ததும், இப்றாஹீம் , மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால்) “நீங்கள் (ஏகதெய்வக் கொள்கையுடைய சத்திய) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்தும்விடாதீர்கள் (என்பதேயாகும்), ஆகவே இணைவைத்துக்கொண்டிருப்போர்களுக்கு, அவர்களை எதன் பால் நீர் அழைக்கின்றீரோ அது பளுவாகத் தெரிகிறது. அல்லாஹ் தான் நாடியவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான், அவன் பக்கம் மீள்வோருக்கு நேர் வழியும் காட்டுகிறான்.

He (Allâh) has ordained for you the same religion (Islâmic Monotheism) which He ordained for Nûh (Noah), and that which We have revealed to you (O Muhammad صلى الله عليه و سلم), and that which We ordained for Ibrâhîm (Abraham), Mûsâ (Moses) and ‘Îsâ (Jesus) saying you should establish religion (i.e. to do what it orders you to do practically), and make no divisions1 in it (religion) (i.e. various sects in religion). Intolerable for the Mushrikûn,2 is that (Islamic Monotheism) to which you (O Muhammad صلى الله عليه و سلم) call them. Allâh chooses for Himself whom He wills, and guides unto Himself who turns to Him in repentance and in obedience.

  1. See the footnote of (V.3:103).

  2. Mushrikun: Polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah, those who worship others along with Allah or set up rivals or partners to Allah.

42:14

وَمَا تَفَرَّقُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُوا۟ ٱلْكِتَـٰبَ مِنۢ بَعْدِهِمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையால் தங்களிடம் (வேத) அறிவு வந்த பின்னரே தவிர, (இம்மார்க்கத்தில்) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குரிய தீர்ப்பு) ஒரு குறிப்பிடப்பட்ட தவணைவரைதான் என்று உமதிரட்சகனுடைய வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்களுக்கிடையில் (இதுவரை) தீர்ப்பளிக்கபட்டிருக்கும், இன்னும் நிச்சயமாக அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்திற்கு அனந்தரகாரர்களாக ஆக்கப்பட்டார்களே, அத்தகையோர் அ(வ்வேதத்)திலிருந்து அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

And they divided not till after knowledge had come to them, through (selfish) transgression between themselves. And had it not been for a Word that went forth before from your Lord for an appointed term, the matter would have been settled between them. And verily, those who were made to inherit the Scripture [i.e. the Taurâh (Torah) and the Injeel (Gospel)] after them (i.e. Jews and Christians) are in grave doubt concerning it (i.e. Allâh’s true religion - Islâm or the Qur’ân).

42:15

فَلِذَٰلِكَ فَٱدْعُ ۖ وَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ ۖ وَقُلْ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَـٰبٍ ۖ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمُ ۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۖ لَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ ۖ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ ۖ ٱللَّهُ يَجْمَعُ بَيْنَنَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ

ஆகவே, அதற்காக(-சத்தியமார்க்கத்தின்பால் அவர்களை) நீர் அழைப்பீராக! நீர் ஏவப்பட்ட பிரகாரம் நிலைத்தும் நிற்பீராக! அவர்களுடைய மனோ இச்சைகளையும் நீர் பின்பற்றாதீர், இன்னும், (அவர்களிடம்) நீர் கூறுவீராக “அல்லாஹ் வேதத்திலிருந்து எதனை இறக்கி வைத்தானோ, அதனையே நான் விசுவாசிக்கின்றேன், உங்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன், அல்லாஹ் (தான்) எங்கள் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான், எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்களோ உங்களுக்கு, எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் யாதொரு தர்க்கமும் இல்லை, நம்மிடையே (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான், அவன்பக்கமே (நாம் யாவரும்) திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.

So unto this (religion of Islâm alone and this Qur’ân) then invite (people) (O Muhammad صلى الله عليه و سلم), and stand firm [on Islâmic Monotheism by performing all that is ordained by Allâh (good deeds), and by abstaining from all that is forbidden by Allâh (sins and evil deeds)], as you are commanded, and follow not their desires but say: "I believe in whatsoever Allâh has sent down of the Book [all the holy Books, - this Qur’ân and the Books of the old from the Taurât (Torah), or the Injeel (Gospel) or the Pages of Ibrâhîm (Abraham)] and I am commanded to do justice among you. Allâh is our Lord and your Lord. For us our deeds and for you your deeds. There is no dispute between us and you. Allâh will assemble us (all), and to Him is the final return."