9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 470

/ 604
Page 470

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

40. Ghafirسورة غافر

40:26

وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِىٓ أَقْتُلْ مُوسَىٰ وَلْيَدْعُ رَبَّهُۥٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِى ٱلْأَرْضِ ٱلْفَسَادَ

ஃபிர் அவ்ன் (தன் ஜனங்களிடம்) “என்னை விட்டுவிடுங்கள், மூஸாவை நான் கொலை செய்துவிடுவேன், மேலும், அவர் (தன்னைக்காத்துக்கொள்ள) தன் இரட்சகனை அழைக்கட்டும், அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றிவிடுவார், அல்லது, பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக, நான் பயப்படுகிறேன்” என்றும் கூறினான்.

Fir‘aun (Pharaoh) said: "Leave me to kill Mûsâ (Moses), and let him call his Lord (to stop me from killing him)! I fear that he may change your religion, or that he may cause mischief to appear in the land!"

40:27

وَقَالَ مُوسَىٰٓ إِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ ٱلْحِسَابِ

அதற்கு மூஸா (அவனிடம், “கேள்வி) கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பிக்கை கொள்ளாத கர்வங்கொண்ட (தீயவர்களாகிய உங்கள்) ஒவ்வொருவரையும் விட்டு, என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அவனிடமே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறினார்.

Mûsâ (Moses) said: "Verily I seek refuge in my Lord and your Lord from every arrogant who believes not in the Day of Reckoning!"

40:28

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَـٰنَهُۥٓ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّىَ ٱللَّهُ وَقَدْ جَآءَكُم بِٱلْبَيِّنَـٰتِ مِن رَّبِّكُمْ ۖ وَإِن يَكُ كَـٰذِبًا فَعَلَيْهِ كَذِبُهُۥ ۖ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ ٱلَّذِى يَعِدُكُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ

மேலும், “ஃபிர் அவ்னுடைய குடும்பத்தினரில் தன் ஈமானை மறைத்து வைத்திருந்த விசுவாசியான ஒரு மனிதர், (அச்சமயம் அவர்களிடம்,) ஒரு மனிதரை-அவர் அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகன் என்று கூறியதற்காக, நீங்கள் கொலை செய்துவிடுவீர்களா? அவரோ உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளைத் திட்டமாக உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார், அவர் பொய்யராக இருந்தால், அவருடைய பொய் அவரின் மீதே (கேடாக) ஆகும், (ஆனால், வேதனை வருமென்பதில்) அவர் உண்மையாளராகவும் இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிப்பவற்றில் சில உங்களை வந்தடைந்துவிடும். யார் வரம்பு மீறுகிறவரோ, பெரும் பொய்யரோ அவரை நிச்சயமாக அல்லாஹ், நேர் வழியில் செலுத்தமாட்டான்” என்று கூறினார்.

And a believing man of Fir‘aun’s (Pharaoh) family, who hid his faith said: "Would you kill a man because he says: My Lord is Allâh, and he has come to you with clear signs (proofs) from your Lord? And if he is a liar, upon him will be (the sin of) his lie; but if he is telling the truth, then some of that (calamity) wherewith he threatens you will befall on you." Verily, Allâh guides not one who is a Musrif (a polytheist, or a murderer who shed blood without a right, or those who commit great sins, oppressor, transgressor), a liar!

40:29

يَـٰقَوْمِ لَكُمُ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ظَـٰهِرِينَ فِى ٱلْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأْسِ ٱللَّهِ إِن جَآءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَآ أُرِيكُمْ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ

“என்னுடைய சமூகத்தாரே! இந்த பூமியில் (நீங்களே) மிகைத்தவர்களாக இருக்க இன்றையத்தினம் ஆட்சி உங்களிடம்தான் இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து - அது நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?” (என்றும் கூறினார், அதற்கு) ஃபிர் அவ்ன் (தன் சமூகத்தாரிடம்,) “நான் (சரி என்று) கண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை, நேரான வழியையே தவிர (மற்றெதனையும்) உங்களுக்கு நான் காட்டவில்லை” என்று கூறினான்.

"O my people! Yours is the kingdom today, you being dominant in the land. But who will save us from the Torment of Allâh, should it befall us?" Fir‘aun (Pharaoh) said: "I show you only that which I see (correct), and I guide you only to the path of right policy!"

40:30

وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَـٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ

மேலும், விசுவாசங்கொண்டிருந்தாரே அவர்- “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள் போன்றது உங்கள் மீதும் (வந்துவிடுமென்று) நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்.

And he who believed said: "O my people! Verily, I fear for you a fate like that day (of disaster) of the Confederates (of old)!

40:31

مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًا لِّلْعِبَادِ

“(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய சமூகத்தார், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் நிலைமை போன்ற (ஆபத்)து (உங்களுக்கும் வந்துவிடுமென்று நான் பயப்படுகிறேன்), மேலும், அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயத்தை நாடமாட்டான் (என்று கூறினார்).

"Like the fate of the people of Nûh (Noah), and ‘Âd, and Thamûd and those who came after them. And Allâh wills no injustice for (His) slaves.

40:32

وَيَـٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ ٱلتَّنَادِ

மேலும், “என்னுடைய சமூகத்தாரே! அழைக்கப்படும் (மறுமை) நாளைப்பற்றியும் உங்கள் மீது நிச்சயமாக நான் பயப்படுகிறேன்(என்றும்),

"And, O my people! Verily, I fear for you the Day when there will be mutual calling (between the people of Hell and of Paradise)."

40:33

يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

“நீங்கள் (தண்டனைக்கு பயந்து) புறங்காட்டியவர்களாக ஓடும் நாளை (பயப்படுகிறேன், அந்நாளில்) அல்லாஹ்விடமிருந்து காப்பற்றக்கூடியவர் உங்களுக்கு எவருமில்லை, அல்லாஹ் எவரைத் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவரை நேர்வழியில் செலுத்தக்கூடியவனும் இல்லை.

A Day when you will turn your backs and flee having no protector from Allâh. And whomsoever Allâh sends astray, for him there is no guide.