9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 462

/ 604
Page 462

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

39. Az-Zumarسورة الزمر

39:32

۞ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدْقِ إِذْ جَآءَهُۥٓ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْكَـٰفِرِينَ

ஆகவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, இன்னும் உண்மையை(யாகிய வேதத்தை)-அது தன்னிடம் வந்தபோது பொய்யாக்கியவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?

Then, who does more wrong than one who utters a lie against Allâh,1 and denies the truth [this Qur’ân, the Prophet (Muhammad صلى الله عليه وسلم) and the Islâmic Monotheism] when it comes to him! Is there not in Hell an abode for the disbelievers?

  1. See the footnote of (V.6:101).

39:33

وَٱلَّذِى جَآءَ بِٱلصِّدْقِ وَصَدَّقَ بِهِۦٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ

மேலும், உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே (ஒப்புக்கொண்டு) ஏற்பவர்களும் (ஆகிய அத்தகையவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.

And he (Muhammad صلى الله عليه وسلم) who has brought the truth (this Qur’ân and Islâmic Monotheism) and (those who) believed therein (i.e. the true believers of Islâmic Monotheism), those are Al-Muttaqûn (the pious - See V.2:2).

39:34

لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ

அவர்களுக்கு தங்களின் இரட்சகனிடத்தில் அவர்கள் நாடியவை உண்டு. அது நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய (தகுதியான) கூலியாகும்.

They shall have all that they will desire with their Lord. That is the reward of Muhsinûn (good-doers - see the footnote of V.9:120).

39:35

لِيُكَفِّرَ ٱللَّهُ عَنْهُمْ أَسْوَأَ ٱلَّذِى عَمِلُوا۟ وَيَجْزِيَهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ

ஏனெனில், அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயதை அல்லாஹ் அவர்களை விட்டும் நீக்கி (மன்னித்து) விட்டு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு மிக அழகானவற்றையும் (நற்) கூலியாக அவர்களுக்குக் கொடுப்பான்.

So that Allâh may expiate from them the evil of what they did and give them the reward, according to the best of what they used to do.1

  1. See the footnote of (V.9:121).

39:36

أَلَيْسَ ٱللَّهُ بِكَافٍ عَبْدَهُۥ ۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே சகலவற்றிற்கும்) போதுமானவனாக இல்லையா? இன்னும், (நபியே!) அவர்கள் அவனல்லாத (அவர்களின் தெய்வங்களான)வற்றைக் கொண்டு உம்மை பயமுறுத்துகின்றனர், இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவரை, நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

Is not Allâh Sufficient for His slave? Yet they try to frighten you with those (whom they worship) besides Him! And whom Allâh sends astray, for him there will be no guide.

39:37

وَمَن يَهْدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِعَزِيزٍ ذِى ٱنتِقَامٍ

எவரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துகின்றானோ அவரை, வழிகெடுத்துவிடக் கூடியவன் எவனுமில்லை, அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தண்டித்தலை உடையவனாக இல்லையா?

And whomsoever Allâh guides, for him there will be no misleader. Is not Allâh All-Mighty, Possessor of Retribution?

39:38

وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ لَيَقُولُنَّ ٱللَّهُ ۚ قُلْ أَفَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنْ أَرَادَنِىَ ٱللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَـٰشِفَـٰتُ ضُرِّهِۦٓ أَوْ أَرَادَنِى بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَـٰتُ رَحْمَتِهِۦ ۚ قُلْ حَسْبِىَ ٱللَّهُ ۖ عَلَيْهِ يَتَوَكَّلُ ٱلْمُتَوَكِّلُونَ

மேலும், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று (நபியே!)) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (பின்னும் நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால், அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால், அவனுடைய அருளை அவை தடுத்துவிடக்கூடியவையா?” என்று நீர் கேட்பீராக!” அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுவீராக!

And verily, if you ask them: "Who created the heavens and the earth?" Surely they will say: "Allâh (has created them)." Say: "Tell me then, the things that you invoke besides Allâh - if Allâh intended some harm for me, could they remove His harm? Or if He (Allâh) intended some mercy for me, could they withhold His Mercy?" Say: "Sufficient for me is Allâh; in Him those who trust (i.e. believers) must put their trust.1"

  1. See the footnote of (V.12:67).

39:39

قُلْ يَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَـٰمِلٌ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ

“என்னுடைய சமூகத்தாரே! உங்களுடைய வழி முறையின் மீதே நீங்கள் (செய்யக்கூடியதை) நீங்கள் செய்துகொண்டிருங்கள். (என்னுடைய வழியின் மீது) நிச்சயமாக நான்) செய்து வருபவன், ஆகவே, (எவருடைய செயல் சரியானது என்பதை அடுத்து) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Say: (O Muhammad صلى الله عليه وسلم) "O My people! Work according to your way, I am working (according to my way). Then you will come to know

39:40

مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيمٌ

“தன்னை இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும்? என்பதையும், இன்னும் நிலையான வேதனை யார் மீது இறங்கும் என்பதையும் (நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.)”

"To whom comes a disgracing torment, and on whom descends an everlasting torment."