9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 457

/ 604
Page 457

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

38. Sadسورة ص

38:62

وَقَالُوا۟ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلْأَشْرَارِ

இன்னும், “எங்களுகென்ன நேர்ந்தது? எவர்களை தீயவர்களில் உள்ளவர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக்கொண்டிருந்தோமோ அந்த மனிதர்களை (நரகத்தில்) காணவில்லையே!“ என்று கூறுவார்கள்.

And they will say: "What is the matter with us that we see not men whom we used to count among the bad ones?"

38:63

أَتَّخَذْنَـٰهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ ٱلْأَبْصَـٰرُ

“அவர்களைப் பரிகாசமாக நாம் எடுத்துக்கொண்டிருந்தோமோ? அல்லது (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய பார்வைகள் தாம் சாய்ந்துவிட்டனவா!” (என்றும் கூறுவார்கள்).

Did we take them as an object of mockery, or have (our) eyes failed to perceive them?"

38:64

إِنَّ ذَٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ أَهْلِ ٱلنَّارِ

நிச்சயமாக நரகவாசிகள் (இவ்வாறு) தர்க்கித்துக் கொள்ளும் இது திட்டமாக உண்மையாகும்.

Verily, that is the very truth - the mutual dispute of the people of the Fire!

38:65

قُلْ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٌ ۖ وَمَا مِنْ إِلَـٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

“நிச்சயமாக நான் (இதனைப்பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவனே, (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை” என்றும் (நபியே!) நீர் கூர்வீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم): "I am only a warner and there is no Ilâh (God) except Allâh (none has the right to be worshipped but Allâh) the One, the Irresistible,

38:66

رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلْعَزِيزُ ٱلْغَفَّـٰرُ

(அவன் தான்) வானங்கள் மற்றும் பூமி இன்னும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கு இரட்சகன், (அவன் யாவற்றையும்) மிகைத்தோன், மிக்க மன்னிப்புடையோன்.

"The Lord of the heavens and the earth and all that is between them, the All-Mighty, the Oft-Forgiving."

38:67

قُلْ هُوَ نَبَؤٌا۟ عَظِيمٌ

“(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது, மிக மகத்தான செய்தியாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக:

Say: "That (this Qur’ân) is a great news,

38:68

أَنتُمْ عَنْهُ مُعْرِضُونَ

(ஆனால்) நீங்கள் அதனைப் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கிறீர்கள்.

"From which you turn away!

38:69

مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۭ بِٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰٓ إِذْ يَخْتَصِمُونَ

“(ஆதமை அல்லாஹ் படைத்தபோது,) மிக மேலான கூட்டத்தார் (ஆகிய மலக்குகள் தங்களுக்குள்) தர்க்கித்துக்கொண்டது பற்றி (அல்லாஹ் அறிவித்ததே தவிர) எனகொன்றும் தெரியாது (என்றும்),

"I had no knowledge of the chiefs (angels) on high when they were disputing and discussing (about the creation of Adam).

38:70

إِن يُوحَىٰٓ إِلَىَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٌ مُّبِينٌ

“நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன், என்பதைத்தவிர (வேறு எதையும்) எனக்கு (வஹீமூலம்) அறிவிக்கப்படவில்லை” (என்றும் கூறுவீராக!)

"Only this has been revealed to me, that I am a plain warner."

38:71

إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى خَـٰلِقٌۢ بَشَرًا مِّن طِينٍ

உமதிரட்சகன் மலக்குகளிடம் நிச்சயமாக “நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப்போகிறேன்” என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக!)

(Remember) when your Lord said to the angels: "Truly I am going to create man from clay".

38:72

فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَـٰجِدِينَ

பிறகு நான் அவரை (அவருடைய தோற்றத்தை உருவாக்கி)ச்சரிப்படுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதியபோது, அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் (எனக் கூறியதும்).

So when I have fashioned him and breathed into him (his) soul created by Me, then you fall down prostrate to him."

38:73

فَسَجَدَ ٱلْمَلَـٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ

(அது சமயம்) மலக்குகள்-அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சிரம்பணிந்தார்கள்-

So the angels prostrated themselves, all of them:

38:74

إِلَّآ إِبْلِيسَ ٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَـٰفِرِينَ

இப்லீஸைத்தவிர-அவன் கர்வங்கொண்டான், நிராகரிப்பவர்களிலும் ஆகிவிட்டான்.

Except Iblîs (Satan): he was proud1 and was one of the disbelievers.

  1. See the footnote of (V.22:9).

38:75

قَالَ يَـٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ

(அதற்கு அல்லாஹ்,) ”இப்லீஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வங்கொண்டுவிட்டாயா? அல்லது, நீ உயர்ந்த (பதவியுடைய)வர்களில் ஆகிவிட்டாயா?” என்றான்.

(Allâh) said: "O Iblîs (Satan)! What prevents you from prostrating yourself to one whom I have created with Both My Hands1. Are you too proud (to fall prostrate to Adam) or are you one of the high exalted?"

  1. See F.N. of (V.3:73).

38:76

قَالَ أَنَا۠ خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِى مِن نَّارٍ وَخَلَقْتَهُۥ مِن طِينٍ

அ(தற்க)வன், ‘நான் அவரை விட மிக்க மேலானவன், என்னை, நெருப்பிலிருந்து நீ படைத்தாய், இன்னும், அவரைக் களிமண்ணிலிருந்து நீ படைத்தாய்” என்றான்.

[Iblîs (Satan)] said: "I am better than he. You created me from fire, and You created him from clay."

38:77

قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ

(அதற்கு அல்லாஹ், “அவ்வாறாயின்,) நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்” என்று கூறினான்.

(Allâh) said: "Then get out from here; for verily you are outcast.

38:78

وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِىٓ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ

“என்னுடைய சாபமும் தீர்ப்பு நாள்வரை நிச்சயமாக உன்மீது இருக்கும்”, (என்று கூறினான்.)

"And verily My Curse is on you till the Day of Recompense."

38:79

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

அ(தற்க)வன், “என் இரட்சகனே! (இறந்தோர்) எழுப்பப்படும் நாள்வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று கூறினான்.

[Iblîs (Satan)] said: "My Lord! Give me then respite till the Day the (dead) are resurrected."

38:80

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ

(அதற்கு அல்லாஹ்,) “நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளாய்” என்று கூறினான்.

(Allâh) said: "Verily! You are of those allowed respite."

38:81

إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ

குறிப்பிட்ட நேரத்தின் நாள்வரையில் (உன் தவணை உண்டு என்று கூறினான்).

"Till the Day of the time appointed."

38:82

قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

(அப்போது) அவன், “உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுத்துவிடுவேன்” என்றான்.

[Iblîs (Satan)] said: "By Your Might, then I will surely mislead them all,

38:83

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ

“அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர”.

"Except Your chosen slaves amongst them (i.e. faithful, obedient, true believers of Islâmic Monotheism)."