9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 456

/ 604
Page 456

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

38. Sadسورة ص

38:43

وَوَهَبْنَا لَهُۥٓ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ

மேலும், நம்மிடமிருந்து அருளாகவும், அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.

And We gave him (back) his family, and along with them the like thereof, as a Mercy from Us, and a Reminder for those who understand.

38:44

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَٱضْرِب بِّهِۦ وَلَا تَحْنَثْ ۗ إِنَّا وَجَدْنَـٰهُ صَابِرًا ۚ نِّعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ

மேலும், “புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து, அதனைக் கொண்டு (உம் மனைவியை) அடியும், நீர் (உம்முடைய) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம், (அவர்) மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (நம்பால்) அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.

"And take in your hand a bundle of thin grass and strike therewith (your wife), and break not your oath.1 Truly! We found him patient. How excellent a slave! Verily he was ever oft-returning in repentance (to Us)!

  1. During the ailment of Ayyûb (Job), his wife used to beg for him, and Satan told her a word of disbelief to say and she told her husband [Ayyûb (Job)]; so he became angry with her and took an oath to strike her one hundred lashes. So Allah ordered Ayyûb (Job) to fulfil his oath by striking her with the bundle of thin grass. (Tafsîr Al-Qurtubi,).

38:45

وَٱذْكُرْ عِبَـٰدَنَآ إِبْرَٰهِيمَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ أُو۟لِى ٱلْأَيْدِى وَٱلْأَبْصَـٰرِ

(நபியே! அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நுணுக்கங்களை விளங்கும்) பார்வைகளும் உடையவர்களாக இருந்த நமது அடியார்களான இப்றாஹீமையும், இஸ்ஹாக்கையும், யஃகூபையும் நினைவு கூர்வீராக!

And remember Our slaves, Ibrâhîm (Abraham), Ishâq (Isaac), and Ya‘qûb (Jacob), (all) owners of strength (in worshipping Us) and (also) of religious understanding.

38:46

إِنَّآ أَخْلَصْنَـٰهُم بِخَالِصَةٍ ذِكْرَى ٱلدَّارِ

நிச்சயமாக (மறுமை) வீட்டை நினைவுகூருவதை நோக்கமாகக் கொண்டு (செயல்படுபவர்களாக) அவர்களை நாம் பிரத்தியேகப்படுத்தினோம்.

Verily, We did choose them by granting them (a good thing, - i.e.) the remembrance of the Home [in the Hereafter and they used to make the people remember it, and also they used to invite the people to obey Allâh and to do good deeds for the Hereafter].

38:47

وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ ٱلْأَخْيَارِ

மேலும், நிச்சயமாக அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தோரில் உள்ளவர்களாவார்கள்.

And they are with Us, verily, of the chosen and the best!

38:48

وَٱذْكُرْ إِسْمَـٰعِيلَ وَٱلْيَسَعَ وَذَا ٱلْكِفْلِ ۖ وَكُلٌّ مِّنَ ٱلْأَخْيَارِ

(நபியே!) இன்னும் இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், துல்கிப்லுவையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் நல்லடியார்களில் உள்ளவர்களாவர்.

And remember Ismâ‘îl (Ishmael), Alyasa‘ (Elisha), and Dhul-Kifl (Isaiah), all are among the best.

38:49

هَـٰذَا ذِكْرٌ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَـَٔابٍ

இது (விசுவாசிகளுக்கு) நல்லுபதேசமாகும், நிச்சயமாக (இத்தகைய) பயபக்தியாளர்களுக்கு அழகான இருப்பிடமும் உண்டு.

This is a Reminder. And verily, for the Muttaqûn (the pious - See V.2:2) is a good final return (Paradise),

38:50

جَنَّـٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ ٱلْأَبْوَٰبُ

(அவ்விருப்பிடம் அத்னு எனும்) நிலையான சுவனபதிகளில் (இருக்கிறது,) அவர்களுக்காக (அதன்) வாயல்கள் (திறக்கப்பட்டவையாக இருக்கும்.

‘Adn (Eden) Paradise (everlasting Gardens), whose doors will be opened for them.

38:51

مُتَّكِـِٔينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَـٰكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ

அதில் (தலையணைகளின் மீது) சாய்ந்தவர்களாக, ஏராளமான கனிகளையும் (இன்பமான) பானங்களையும் கேட்(டு வங்கிப் புசித்து அருந்திக் கொண்டிருப்)பார்கள்.

Therein they will recline; therein they will call for fruits in abundance and drinks;

38:52

۞ وَعِندَهُمْ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ أَتْرَابٌ

மேலும், அவர்களிடத்தில், கீழ் நோக்கிய பார்வைகளயுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் (பலரும்) இருப்பார்கள்.

And beside them will be Qâsirât-at-Tarf [chaste females (wives) restraining their glances (desiring none except their husbands)], (and) of equal ages.

38:53

هَـٰذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ ٱلْحِسَابِ

இது, (கேள்வி) “கணக்கிற்குரிய நாளுக்கென நீங்கள் வாக்களிக்கப்பட்டவையாகும்.”

This it is what you (Al-Muttaqûn - the pious - see V.2:2) are promised for the Day of Reckoning!

38:54

إِنَّ هَـٰذَا لَرِزْقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ

“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும், இதற்கு முடிவே இல்லை” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)

(It will be said to them)! Verily, this is Our Provision which will never finish.

38:55

هَـٰذَا ۚ وَإِنَّ لِلطَّـٰغِينَ لَشَرَّ مَـَٔابٍ

இது(வே நல்லோரின் முடிவாகும்) மேலும் நிச்சயமாக, (அல்லாஹ்வின் கட்டளையை மீறிய) கெட்டவர்களுக்கு மிகக்கெட்ட தங்குமிடம் இருக்கிறது.

This is so! And for the Tâghûn (transgressors, the disobedient to Allâh and His Messenger - disbelievers in the Oneness of Allâh, criminals) will be an evil final return (Fire).

38:56

جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ ٱلْمِهَادُ

(அதுவே) நரகம்-அதில் அவர்கள் புகுவார்கள், தங்குமிடமான அது மிகக் கெட்டது.

Hell! Where they will burn, and worst (indeed) is that place to rest!

38:57

هَـٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ

இது (தீயோரின் முடிவாகும்), ஆகவே, இதை அவர்கள் சுவைத்துப் பார்க்கட்டும்- (இதுவே) கொதித்த நீரும், (நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) சீழ் ஜலமுமாகும்.

This is so! Then let them taste it - a boiling fluid and dirty wound discharges.

38:58

وَءَاخَرُ مِن شَكْلِهِۦٓ أَزْوَٰجٌ

இதைப்போன்ற வேறு பலவகை (வேதனை)களும் உண்டு.

And other (torments) of similar kind - all together!

38:59

هَـٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ ۖ لَا مَرْحَبًۢا بِهِمْ ۚ إِنَّهُمْ صَالُوا۟ ٱلنَّارِ

(இவர்களுடைய தலைவர்களிடம்) “இது உங்களுடன் (நரகத்தில்) புகும் படையாகும்” (என்று கூறப்படும் அதற்கு அவர்கள்,) ”இது அவர்களுக்கு நல்லவரவாகாது, நிச்சயமாக, அவர்கள் நரகத்தில் புகுந்து விட்டவர்களே!” (என்று கூறுவார்கள்).

This is a troop entering with you (in Hell), no welcome for them! Verily, they shall burn in the Fire!

38:60

قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ ۖ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا ۖ فَبِئْسَ ٱلْقَرَارُ

அதற்கு அ(த்தலைவர்களைப் பின்பற்றிய)வர்கள் (தலைவர்களிடம், “எங்களுக்கு) அன்று! நீங்களும்தான், உங்களுக்கு நல்வரவில்லை, நீங்கள்தாம் எங்களுக்கு இதனை முற்படுத்தித்தந்தீர்கள், ஆதலால், (நம்மிருசாராரின்) தங்குமிடம் மிகக் கெட்டது” என்று கூறுவார்கள்.

(The followers of the misleaders will say): "Nay, you (too)! No welcome for you! It is you (misleaders) who brought this upon us (because you misled us in the world), so evil is this place to stay in!"

38:61

قَالُوا۟ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَـٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى ٱلنَّارِ

எங்களிரட்சகனே! எவன் இதனை எங்களுக்கு முற்படுத்தி வைத்தானோ அவனுக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.

They will say: "Our Lord! Whoever brought this upon us, add to him a double torment in the Fire!"