மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ مِنَ ٱلْكِتَـٰبِ هُوَ ٱلْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرٌۢ بَصِيرٌ
மேலும், (நபியே!) நாம் உமக்கு வேதத்தால் எதை (வஹீ மூலம்) அறிவித்திருக்கின்றோமோ அதுதான்- (வேதங்களில்) தனக்கு முன்னிருந்ததை உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில் - சத்தியமானதாக இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்கிறவன், பார்க்கிறவன்.
And what We have revealed to you (O Muhammad صلى الله عليه وسلم), of the Book (the Qur’ân), it is the (very) truth [that you (Muhammad صلى الله عليه وسلم) and your followers must act on its instructions], confirming that which was (revealed) before it. Verily! Allâh is indeed All-Aware, and All-Seer of His slaves.
ثُمَّ أَوْرَثْنَا ٱلْكِتَـٰبَ ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌۢ بِٱلْخَيْرَٰتِ بِإِذْنِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
பின்னர், நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்தோமே அத்தகையோரை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கி வைத்தோம், ஆகவே, அவர்களில் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நடு நிலையான வழியில் சென்றவர்களும் உள்ளனர்; அவர்களில், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு நன்மையானவற்றில் முந்திக் கொண்டோரும் உள்ளனர்; இதுவே மிகப்பெரும் பேரருளாகும்.
Then We gave the Book (the Qur’ân) as inheritance to such of Our slaves whom We chose (the followers of Muhammad صلى الله عليه وسلم). Then of them are some who wrong their ownselves, and of them are some who follow a middle course, and of them are some who are, by Allâh’s Leave, foremost in good deeds. That (inheritance of the Qur’ân) - that is indeed a great grace.
جَنَّـٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
(அது) நிலையான சுவனபதிகள்- அவற்றில் அவர்கள் நுழைவார்கள், அவற்றில் அவர்கள் பொன்னாலான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள், முத்துக்களையும் (அணிவிக்கப்படுவார்கள்) இன்னும் அவற்றில் அவர்களுடைய ஆடை பட்டாகும்.
‘Adn (Eden) Paradise (everlasting Gardens) will they enter, therein will they be adorned with bracelets of gold and pearls, and their garments therein will be of silk.
وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
இன்னும், அவர்கள் “எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும், நிச்சயமாக எங்கள் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்” என்று (புகழ்ந்து) கூறுவார்கள்.
And they will say: "All the praises and thanks be to Allâh Who has removed from us (all) grief. Verily, our Lord is indeed Oft-Forgiving, Most Ready to appreciate (good deeds and to recompense).
ٱلَّذِىٓ أَحَلَّنَا دَارَ ٱلْمُقَامَةِ مِن فَضْلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ
“அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய பேரருளால் என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இறக்கிவைத்தான், அதில் எவ்வித சிரமும் எங்களைத் தொடாது; யாதொரு சடைவும் எங்களை அதில் தொடாது (என்றும் கூறுவார்கள்).
Who, out of His Grace, has lodged us in a home that will last forever, where toil will touch us not nor weariness will touch us."
وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍ
இன்னும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்-அவர்களுக்கு நரக நெருப்பு உண்டு. அவர்களுக்கு (இறப்பு ஏற்படவேண்டுமென) தீர்ப்புச் செய்யப்படமாட்டாது, (அவ்வாறு தீர்ப்புச் செய்யப்பட்டால்தானே) அவர்கள் இறப்பெய்துவார்கள், அதன் வேதனையிலிருந்து அவர்களுக்கு (ஒரு சிறிதும்) குறைக்கப்படவுமாட்டாது; இவ்வாறே ஒவ்வொரு நிராகரிப்போருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
But those who disbelieve (in the Oneness of Allâh - Islâmic Monotheism), for them will be the Fire of Hell. Neither will it have a complete killing effect on them so that they die, nor shall its torment be lightened for them. Thus do We requite every disbeliever!
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَـٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ ۖ فَذُوقُوا۟ فَمَا لِلظَّـٰلِمِينَ مِن نَّصِيرٍ
அ(ந்நரகத்)தில் அவர்கள், “எங்கள் இரட்சகனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு, (இனி) நாங்கள் செய்து கொண்டிருந்ததல்லாத நற்செயலையே செய்வோம்” என்று பெரும் சப்தமிடுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான நீண்ட காலம் வரை, நாம் அதில் உங்களை (வாழ) விட்டுவைத்திருக்கவில்லையா? மேலும், (இது பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருந்தார், ஆதலால் (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக்கொண்டிருங்கள், அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளருமில்லை” (என்று கூறுவான்).
Therein they will cry: "Our Lord! Bring us out, we shall do righteous good deeds, not (the evil deeds) that we used to do." (Allâh will reply): "Did We not give you lives long enough, so that whosoever would receive admonition could receive it? And the warner came to you. So taste you (the evil of your deeds). For the Zâlimûn (polytheists and wrong-doers) there is no helper."
إِنَّ ٱللَّهَ عَـٰلِمُ غَيْبِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும், பூமியில் மறைந்திருப்பதை அறிகிறவன், நிச்சயமாக அவன், இதயங்களில் இருப்பவற்றை நன்கறிகிறவன்.
Verily, Allâh is the All-Knower of the Unseen of the heavens and the earth. Verily! He is the All-Knower of that is in the breasts.