9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 437

/ 604
Page 437

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

35. Fatirسورة فاطر

35:19

وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ

குருடனும், பார்வையுடையோனும் சமமாவதில்லை.

Not alike are the blind (disbelievers in Islâmic Monotheism) and the seeing (believers in Islâmic Monotheism).

35:20

وَلَا ٱلظُّلُمَـٰتُ وَلَا ٱلنُّورُ

(அவ்வாறே) இருள்களும், பிரகாசமும் (சமமாவது) இல்லை.

Nor are (alike) darkness (disbelief) and light (Belief in Islâmic Monotheism).

35:21

وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ

(அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாவது) இல்லை.

Nor are (alike) the shade and the sun’s heat.

35:22

وَمَا يَسْتَوِى ٱلْأَحْيَآءُ وَلَا ٱلْأَمْوَٰتُ ۚ إِنَّ ٱللَّهَ يُسْمِعُ مَن يَشَآءُ ۖ وَمَآ أَنتَ بِمُسْمِعٍ مَّن فِى ٱلْقُبُورِ

மேலும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்குமாறு செய்கின்றான், (நபியே!) “கப்ரு” (சமாதி)களில் உள்ளவர்களைச் செவியேற்கச் செய்பவராகவும் நீர் இல்லை.

Nor are (alike) the living (i.e. the believers) and the dead (i.e. the disbelievers). Verily, Allâh makes whom He wills to hear, but you cannot make hear those who are in graves.

35:23

إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர (வேறு) இல்லை.

You (O Muhammad صلى الله عليه وسلم) are only a warner (i.e. your duty is to convey Allâh’s Message to mankind but the guidance is Allâh’s).

35:24

إِنَّآ أَرْسَلْنَـٰكَ بِٱلْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ۚ وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சத்தியத்தைக் கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்; மேலும் எந்த சமுதாயத்தவரும் அ(ச்சமுதாயத்)தில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் சென்றே தவிர இப்புவியில் இல்லை.

Verily We have sent you with the truth, a bearer of glad tidings and a warner. And there never was a nation but a warner had passed among them.

35:25

وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلْكِتَـٰبِ ٱلْمُنِيرِ

(நபியே!) இன்னும், அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்துவார்களானால் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் (அத்தாட்சிகளில்) தெளிவானவைகளையும், (“ஜூபுரு” எனும்) ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.

And if they belie you, those before them also belied. Their Messengers came to them with clear signs, and with the Scriptures, and the book giving light.

35:26

ثُمَّ أَخَذْتُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ

பின்னர், நிராகரித்துக் கொண்டிருந்தோரை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, (அவர்களை அழிப்பதன் மூலம் என்னுடைய) மறுப்பு எப்படி இருந்தது? (என்பதை நீர் கவனித்தீரா?)

Then I took hold of those who disbelieved: and how terrible was My denial (punishment)!

35:27

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا ۚ وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌ

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? பின்னர், நாம்தாம் அதனைக்கொண்டு, அவற்றின் நிறங்களை மாறுபட்டவையான கனிகளை வெளியாக்கினோம், இன்னும், மலைகளிலிருந்து, அதன் நிறங்கள் மாறுபட்டவையான வெள்ளையும், சிவப்புமான பாதைகளும், சுத்தக்கறுப்பு நிறமுடையதும் உள்ளன.

See you not that Allâh sends down water (rain) from the sky, and We produce therewith fruits of various colours, and among the mountains are streaks white and red, of varying colours and (others) very black.

35:28

وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَـٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَـٰٓؤُا۟ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ

இன்னும், அவ்வாறே மனிதர்களிலும், பூமியிலும் ஊர்ந்து திரிபவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகளிலும் அதனுடைய நிறங்கள் மாறுபட்டிருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ்வை-அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்.

And likewise of men and Ad-Dawâbb [moving (living) creatures, beasts], and cattle, are of various colours. It is only those who have knowledge among His slaves that fear Allâh. Verily, Allâh is All-Mighty, Oft-Forgiving.

35:29

إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَـٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَـٰرَةً لَّن تَبُورَ

அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பரகசியமாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களே நிச்சயமாக அத்தகையோர்-என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள்.

Verily, those who recite the Book of Allâh (this Qur’ân), and perform As-Salât (Iqâmat-as-Salât), and spend (in charity) out of what We have provided for them, secretly and openly, they hope for a (sure) trade-gain that will never perish.

35:30

لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦٓ ۚ إِنَّهُۥ غَفُورٌ شَكُورٌ

காரணம்: (அல்லாஹ்வாகிய) அவன், அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகக் கொடுப்பதற்காகவும், தன்னுடைய பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவும்தான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்.

That He may pay them their wages in full, and give them (even) more, out of His Grace. Verily He is Oft-Forgiving, Most Ready to appreciate (good deeds and to recompense).