9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 417

/ 604
Page 417

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

32. As-Sajdahسورة السجدة

32:21

وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلْعَذَابِ ٱلْأَدْنَىٰ دُونَ ٱلْعَذَابِ ٱلْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிவிடுவதற்காக (மறுமையில் கிடைக்கவிருக்கும்) மிகப்பெரிய வேதனையின்றி (அதற்கு முன்னர்) குறைந்த (இம்மை) வேதனையிலிருந்து அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்.

And verily, We will make them taste of the near torment (i.e. the torment in the life of this world, i.e. disasters, calamities, etc.) prior to the supreme torment (in the Hereafter), in order that they may (repent and) return (i.e. accept Islâm).

32:22

وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَـٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعْرَضَ عَنْهَآ ۚ إِنَّا مِنَ ٱلْمُجْرِمِينَ مُنتَقِمُونَ

மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, அதன் பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனை விட மிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக, நாம் (இத்தகைய) குற்றவாளிகளை (அவர்களின் முந்திய பாவத்திற்காக) தண்டிக்கக்கூடியவர்களாவோம்.

And who does more wrong than he who is reminded of the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of his Lord, then turns aside therefrom? Verily, We shall exact retribution from the Mujrimûn (criminals, disbelievers, polytheists, sinners).

32:23

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ فَلَا تَكُن فِى مِرْيَةٍ مِّن لِّقَآئِهِۦ ۖ وَجَعَلْنَـٰهُ هُدًى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ

நிச்சயமாக நாம், மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தையும் கொடுத்திருந்தோம். எனவே, (நபியே!) அவர் அதனைப் பெற்றதைப்பற்றி நீர் சந்தேகத்தில் ஆகிவிடவேண்டாம், நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதனை, இஸ்ராயீலின் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.

And indeed We gave Mûsa (Moses) the Scripture [the Taurât (Torah)] So be not you in doubt of meeting him [i.e. when you met Mûsa (Moses) during the night of Al-Isrâ’ and Al-Mi‘râj 1 over the heavens]. And We made it [the Taurât (Torah)] a guide to the Children of Israel.

  1. [Al-Mi‘râj المعراج - See the footnote of (V.53:12), Hadîth No.429].

32:24

وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا۟ ۖ وَكَانُوا۟ بِـَٔايَـٰتِنَا يُوقِنُونَ

மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த பொழுது, நம்முடைய கட்டளையைக் கொண்டு நேர்வழி நடப்பவர்களான தலைவர்களையும் அவர்களிலிருந்து நாம் ஆக்கினோம், அவர்கள் நம்முடைய வசனங்களை உறுதி கொள்பவர்களாகவும் இருந்தனர்.

And We made from among them (Children of Israel), leaders, giving guidance under Our Command, when they were patient and used to believe with certainty in Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.).

32:25

إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ

அவர்கள் எ(வ்விஷயத்)தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அ(வ்விஷயத்)தில், மறுமை நாளில் நிச்சயமாக உமதிரட்சகன்-அவனே அவர்களுக்குகிடையில் தீர்ப்பளிப்பான்.

Verily, your Lord will judge between them, on the Day of Resurrection, concerning that wherein they used to differ.

32:26

أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَـٰكِنِهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ ۖ أَفَلَا يَسْمَعُونَ

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம், அவர்கள் வசித்திருந்த இடங்களில் (பிரயாணித்து) இவர்கள் நடக்கிறார்கள். (இவ்வாறு அவர்களின் குடியிருப்புத்தலங்கள் பாழடைந்து கிடப்பதைப்பார்த்து) இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நிச்சயமாக இதில் அத்தாட்சிகளிருக்கின்றன, (இதற்கு) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

Is it not a guidance for them: how many generations We have destroyed before them in whose dwellings they do walk about? Verily, therein indeed are signs. Would they not then listen?

32:27

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَسُوقُ ٱلْمَآءَ إِلَى ٱلْأَرْضِ ٱلْجُرُزِ فَنُخْرِجُ بِهِۦ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَـٰمُهُمْ وَأَنفُسُهُمْ ۖ أَفَلَا يُبْصِرُونَ

நிச்சயமாக நாமே, வறண்ட பூமியின் பக்கம் மழையை இழுத்துவந்து, (பொழியச் செய்து,) பின்னர் அதன்மூலம் பயிர்களை நாம் வெளிப்படுத்துகின்றோம், இவர்களுடைய கால்நடைகளும், இவர்களும் அதிலிருந்து உண்ணுகிறார்கள் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதனை) அவர்கள் பார்க்க வேண்டாமா?

Have they not seen how We drive water to the dry land that has no vegetation, and therewith bring forth crops providing food for their cattle and themselves? Will they not then see?

32:28

وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْفَتْحُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

மேலும், “(வாக்களிக்கப்பட்ட) இந்த வெற்றி (நாள்) எப்பொழுது (வரும்)? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அது பற்றிக்கூறுங்கள்)” என அவர்கள் கேட்கின்றனர்.

They say: "When will this Fath (Decision) be (between us and you, i.e. the Day of Resurrection), if you are telling the truth?"

32:29

قُلْ يَوْمَ ٱلْفَتْحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِيمَـٰنُهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ

(அதற்கு) நீர் கூறுவீராக:” அந்த வெற்றி நாளின் பொழுது நிராகரிப்போர் விசுவாசங்கொள்வது, அவர்களுக்குப் பயனளிக்காது, அவர்கள் தவணை கொடுக்கப்படவுமாட்டார்கள்.

Say: "On the Day of Al-Fath (Decision), no profit will it be to those who disbelieve if they (then) believe! Nor will they be granted a respite."

32:30

فَأَعْرِضْ عَنْهُمْ وَٱنتَظِرْ إِنَّهُم مُّنتَظِرُونَ

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அந்நாளை) எதிர்ப்பார்த்துமிருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கிறவர்கள்தாம்!

So turn aside from them (O Muhammad صلى الله عليه وسلم) and await: verily, they (too) are awaiting.

33. Al-Ahzabسورة الأحزاب