8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

33. Al-Ahzab

The Confederates · அல்-அஹ்ஜாப்

Madani73 versesJuz 21

الأحزاب

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

33:1

يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلْكَـٰفِرِينَ وَٱلْمُنَـٰفِقِينَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

நபியே! நீர் அல்லாஹ்வை பயந்துகொள்வீராக! நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் கீழ்ப்படியாதிருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.

O Prophet (Muhammad صلى الله عليه وسلم)! Keep your duty to Allâh, and obey not the disbelievers and the hypocrites (i.e., do not follow their advice). Verily, Allâh is Ever All-Knower, All-Wise.

33:2

وَٱتَّبِعْ مَا يُوحَىٰٓ إِلَيْكَ مِن رَّبِّكَ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

இன்னும், (நபியே!) உமதிரட்சகனிடமிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கிறான்.

And follow that which is revealed to you from your Lord. Verily, Allâh is Well-Acquainted with what you do.

33:3

وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

மேலும், நீர் அல்லாஹ்வின் மீது (அவனிடமே சகல பொறுப்பையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (உமது காரியங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்கிறவனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.

And put your trust in Allâh, and Sufficient is Allâh as a Wakîl (Trustee, or Disposer of affairs).

33:4

مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِى جَوْفِهِۦ ۚ وَمَا جَعَلَ أَزْوَٰجَكُمُ ٱلَّـٰٓـِٔى تُظَـٰهِرُونَ مِنْهُنَّ أُمَّهَـٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ ۖ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ

எம்மனிதனுக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை, இன்னும், உங்கள் மனைவியரை-அவர்களிலிருந்து (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுகிறவர்களை- உங்களுடைய (உண்மைத்) தாய்மார்களாகவும் அவன் ஆக்கவில்லை. (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை. இவை (யாவும்), உங்கள் வாய்களால் கூறும் உங்கள் வார்த்தைகளே (தவிர உண்மையல்ல.) மேலும், அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான், அவனே (நேர்) வழியையும் காட்டுகிறான்.

Allâh has not made for any man two hearts inside his body. Neither has He made your wives whom you declare to be like your mothers’ backs, your real mothers. [az-Zihâr is the saying of a husband to his wife, "You are to me like the back of my mother" i.e. You are unlawful for me to approach],1 nor has He made your adopted sons your real sons. That is but your saying with your mouths. But Allâh says the truth, and He guides to the (Right) Way.

  1. See the Qur’ân (V58:3 & 4).

33:5

ٱدْعُوهُمْ لِـَٔابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ وَمَوَٰلِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَآ أَخْطَأْتُم بِهِۦ وَلَـٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

ஆகவே, நீங்கள் (வளர்த்த) அவர்களை, அவர்களுடைய தந்தைகளுக்கே (அவர்களின் பெயர்களைக் கூறியே) அழையுங்கள், அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதமாகும், ஆனால், அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியவில்லையாயின், அப்பொழுது மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்கள் சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர், (இதற்கு முன்னர்) எதில் நீங்கள் தவறுசெய்தீர்களோ (அதைப் பற்றி) உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை, எனினும், உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று எண்ணுவதே (குற்றமாகும்), மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.

Call them (adopted sons) by (the names of) their fathers: that is more just with Allâh. But if you know not their father’s (names, call them) your brothers in faith and Mawâlîkum (your freed slaves). And there is no sin on you concerning that in which you made a mistake1, except in regard to what your hearts deliberately intend. And Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.

  1. See the footnote of (V.18:73).

33:6

ٱلنَّبِىُّ أَوْلَىٰ بِٱلْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَـٰتُهُمْ ۗ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَـٰبِ ٱللَّهِ مِنَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُهَـٰجِرِينَ إِلَّآ أَن تَفْعَلُوٓا۟ إِلَىٰٓ أَوْلِيَآئِكُم مَّعْرُوفًا ۚ كَانَ ذَٰلِكَ فِى ٱلْكِتَـٰبِ مَسْطُورًا

விசுவாசிகளுக்கு, அவர்களுடைய உயிர்களைவிட இந்த நபி மிக முன்னுரிமைக்குரியவராவார், இன்னும், அவருடைய மனைவியர்கள் அவர்களுடைய தாய்மார்களாவார்கள், மேலும், விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத் செய்தவர்களை விடவும் சொந்தபந்துக்களே அவர்களில் சிலர் சிலரைவிட அல்லாஹ்வுடைய வேதத்திலுள்ள பிரகாரம் (ஒரு முஸ்லிமுடைய சொத்தையடைய) மிக உரியவர்களாகவும், (என்றாலும்) உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையைச் செய்ய நாடினால் தவிர (அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு). இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.

The Prophet is closer to the believers than their ownselves,1 and his wives are their (believers’) mothers (as regards respect and marriage). And blood relations among each other have closer personal ties in the Decree of Allâh (regarding inheritance) than (the brotherhood of) the believers and the Muhâjirûn (emigrants from Makkah), except that you do kindness to those brothers (when the Prophet صلى الله عليه وسلم joined them in brotherhood ties). This has been written in the (Allâh’s Book of Divine) Decrees - (Al-Lauh Al-Mahfûz)."

  1. Narrated ‘Abdullâh bin Hishâm رضي الله عنه: We were with the Prophet صلى الله عليه وسلم and he was holding the hand of ‘Umar bin Al-Khattâb. ‘Umar said to Him. "O Allâh’s Messenger! You are dearer to me than everything except my ownself." The Prophet صلى الله… Show more

    Narrated ‘Abdullâh bin Hishâm رضي الله عنه: We were with the Prophet صلى الله عليه وسلم and he was holding the hand of ‘Umar bin Al-Khattâb. ‘Umar said to Him. "O Allâh’s Messenger! You are dearer to me than everything except my ownself." The Prophet صلى الله عليه وسلم said, "No, by Him in Whose Hand my soul is, (you will not have complete Faith) till I am dearer to you than your ownself." Then ‘Umar said to him, now, by Allâh, you are dearer to me than my ownself." The Prophet said, " Now, O ‘Umar, (now you are a believer)." Sahih Al-Bukhari, Vol.8, Hadîth No.682).

33:7

وَإِذْ أَخَذْنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَـٰقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ ۖ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَـٰقًا غَلِيظًا

மேலும், நபிமார்களிடமிருந்தும்-உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியையே நாம் எடுத்த சமயத்தில்-அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! ஏனெனில்.)

And (remember) when We took from the Prophets their covenant, and from you (O Muhammad صلى الله عليه وسلم), and from Nûh (Noah), Ibrâhîm (Abraham), Mûsâ (Moses), and ‘Îsâ (Jesus) son of Maryam (Mary). We took from them a strong covenant.1

  1. There are many Prophets and Messengers of Allâh. About twenty-five of them are mentioned in the Qur’an; out of these twenty-five, only five are of strong will: namely (Muhammad صلى الله عليه وسلم, Nûh (Noah), Ibrâhîm (Abraham), Mûsâ (Moses) and ‘Îsâ (Jesus), son of Maryam (Mary) عليهم السلام).

33:8

لِّيَسْـَٔلَ ٱلصَّـٰدِقِينَ عَن صِدْقِهِمْ ۚ وَأَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًا أَلِيمًا

(தூதர்களான) உண்மையாளர்களிடம், அவர்களுடைய (தூதின்) உண்மையைப் பற்றி அவன் கேட்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தான்), நிராகரித்தோர்க்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தும் வைத்திருக்கிறான்.

That He may ask the truthful (Allâh’s Messengers and His Prophets) about their truth (i.e. the conveyance of Allâh’s Message that which they were charged with). And He has prepared for the disbelievers a painful torment (Hell-fire).

33:9

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَآءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَّمْ تَرَوْهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

விசுவாசங்கொண்டோரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், உங்கள் மீது (எதிரிகளின்) படைகள் வந்த சமயத்தில் (புயற்) காற்றையும், நீங்கள் அதைப்பார்க்கவில்லையே அத்தகைய படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம், மேலும், நீங்கள் செய்பவகளை அல்லாஹ் பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.

O you who believe! Remember Allâh’s Favour to you, when there came against you hosts, and We sent against them a wind and forces that you saw not [i.e. troops of angels during the battle of Al-Ahzâb (the Confederates)]. And Allâh is Ever All-Seer of what you do.

33:10

إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَـٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠

உங்களுக்கு மேற்புறமிருந்தும், உங்களுக்குக் கீழ் புறமிருந்தும் அவர்கள் (படையெடுத்து) உங்களிடம் வந்த சமயத்தில், இன்னும் (உங்களுடைய) பார்வைகள் (மாறிச்) சாய்ந்தும், (உங்களுடைய) இதயங்கள் உங்கள் தொண்டை(க்குழி)களை அடைந்துமிருந்த சமயத்தில் (உங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.) மேலும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாக) பலவாறான எண்ணங்களை எண்ணிய சமயத்தில் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த பேரருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.)

When they came upon you from above you and from below you, and when the eyes grew wild and the hearts reached to the throats, and you were harbouring doubts about Allâh.

33:11

هُنَالِكَ ٱبْتُلِىَ ٱلْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا۟ زِلْزَالًا شَدِيدًا

அந்த இடத்தில், விசுவாசிகள் (பெரும்) சோதனைக்குள்ளாக்கப்பட்டு மிக்க கடினமான அலைக்கழித்தலாக அலைக்கழிக்கப்பட்டும் விட்டனர்.

There, the believers were tried and shaken with a mighty shaking.

33:12

وَإِذْ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورًا

மேலும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் எமக்கு வாக்களிக்கவில்லை” என்று கூறியதையும்- (நினைவு கூர்வீராக!)

And when the hypocrites and those in whose hearts is a disease (of doubts) said: "Allâh and His Messenger (صلى الله عليه وسلم) promised us nothing but delusion!"

33:13

وَإِذْ قَالَت طَّآئِفَةٌ مِّنْهُمْ يَـٰٓأَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَٱرْجِعُوا۟ ۚ وَيَسْتَـْٔذِنُ فَرِيقٌ مِّنْهُمُ ٱلنَّبِىَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِىَ بِعَوْرَةٍ ۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا

மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தினர், (மதீனா வாசிகளிடம்,) “யஸ்ரிப் வாசிகளே! (யுத்தகளத்தில்) உங்களுக்குத் தங்குதல் இல்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினரோ, “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன” என்று கூறி, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாமலிருந்தும், (அங்கிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள், (அங்கிருந்து) வெருண்டோடுவததைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் நாடவில்லை.

And when a party of them said: "O people of Yathrib (Al-Madinah)! There is no stand (possible) for you (against the enemy attack!) Therefore go back!" And a band of them ask for permission of the Prophet (صلى الله عليه وسلم) saying: "Truly, our homes lie open (to the enemy)." And they lay not open. They but wished to flee.

33:14

وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا۟ ٱلْفِتْنَةَ لَـَٔاتَوْهَا وَمَا تَلَبَّثُوا۟ بِهَآ إِلَّا يَسِيرًا

மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பின்னர் குழப்பம் செய்யுமாறு அவர்களைக் கேட்கப்பட்டிருந்தால் அவர்கள் அதனைச் செய்திருப்பார்கள். சொற்பமேயன்றி அவர்கள் அதில் தங்கவுமாட்டார்கள்.

And if the enemy had entered from all sides (of the city), and they had been exhorted to Al-Fitnah (i.e. to renegade from Islâm to polytheism), they would surely have committed it and would have hesitated thereupon but little.

33:15

وَلَقَدْ كَانُوا۟ عَـٰهَدُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ ٱلْأَدْبَـٰرَ ۚ وَكَانَ عَهْدُ ٱللَّهِ مَسْـُٔولًا

அவர்கள் (போரில்) புறமுதுகிட்டு ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் திட்டமாக வாக்குறுதியும் செய்திருந்தார்கள், மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படுவதாக உள்ளது.

And indeed they had already made a covenant with Allâh not to turn their backs, and a covenant with Allâh must be answered for.

33:16

قُل لَّن يَنفَعَكُمُ ٱلْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ ٱلْمَوْتِ أَوِ ٱلْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا

(நபியே!) நீர் கூறுவீராக, “மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் வெருண்டோடுவீர்களாயின், அவ்வாறு வெருண்டோடுவது உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது, மேலும், அது சமயம் வெகு சொற்பமேயன்றி நீங்கள் சுகம் கொடுக்கப்பட மாட்டீர்கள்!”

Say (O Muhammad صلى الله عليه وسلم to these hypocrites who ask your permission to run away from you): "Flight will not avail you if you flee from death or killing and then you will enjoy no more than a little while!"

33:17

قُلْ مَن ذَا ٱلَّذِى يَعْصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوٓءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً ۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்விடமிருந்து-அவன் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால்- உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் அருள் புரிய நாடினால் (உங்களை விட்டு அதனை தடுத்துவிடுபவர் யார்?) அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலரையும், உதவி செய்பவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.”

Say: "Who is he who can protect you from Allâh if He intends to harm you, or intends mercy on you?" And they will not find, besides Allâh, for themselves any Walî (protector, supporter) or any helper.

33:18

۞ قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلْمُعَوِّقِينَ مِنكُمْ وَٱلْقَآئِلِينَ لِإِخْوَٰنِهِمْ هَلُمَّ إِلَيْنَا ۖ وَلَا يَأْتُونَ ٱلْبَأْسَ إِلَّا قَلِيلًا

உங்களில் (போர்செய்யச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தங்கள் சகோதரர்களிடம், “நீங்கள் நம்மிடம் வந்துவிடுங்கள்” என்று கூறுவோரையும் நிச்சயமாக அல்லாஹ் அறிவான், மேலும், (அவர்களில்) சொற்பமானவர்களன்றி (பெரும்பாலோர்) யுத்தத்திற்கு வரமாட்டார்கள்.

Allâh already knows those among you who keep back (men) from fighting in Allâh’s Cause, and those who say to their brethren "Come here towards us," while they (themselves) come not to the battle except a little,

33:19

أَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَإِذَا جَآءَ ٱلْخَوْفُ رَأَيْتَهُمْ يَنظُرُونَ إِلَيْكَ تَدُورُ أَعْيُنُهُمْ كَٱلَّذِى يُغْشَىٰ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ ۖ فَإِذَا ذَهَبَ ٱلْخَوْفُ سَلَقُوكُم بِأَلْسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلْخَيْرِ ۚ أُو۟لَـٰٓئِكَ لَمْ يُؤْمِنُوا۟ فَأَحْبَطَ ٱللَّهُ أَعْمَـٰلَهُمْ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

(போர்க்களத்தில் கிடைத்த பொருட்களில் அவர்கள்) உங்கள் மீது கஞ்சத்தனமாக இருக்கின்றனர், அப்பொழுது, (எதிரிகளைப் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்கப்பட்டவரைப் போன்று அவர்கள் கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்த வண்ணமாயிருப்பதை நீர் காண்பீர். அபயம் நீங்கி (விசுவாசிகளுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ நன்மையின் மீது (யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மீது) பேராசைக் கொண்டு கூறிய நாவுகளால் (கொடிய வார்த்தைகளைக் கூறி) உங்களை(க் கடிந்து) இம்சிக்கின்றனர். இத்தகையோர் (உண்மையாக) விசுவாசங்கொள்ளவில்லை, ஆகவே, அவர்களின் (நற்)செயல்களை அல்லாஹ் அழித்துவிட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.

Being miserly towards you (as regards help and aid in Allâh’s Cause). Then when fear comes, you will see them looking to you, their eyes revolving like (those of) one over whom hovers death; but when the fear departs, they will smite you with sharp tongues, miserly towards (spending anything in any) good (and only covetous of booty and wealth). Such have not believed. Therefore Allâh makes their deeds fruitless and that is ever easy for Allâh.

33:20

يَحْسَبُونَ ٱلْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا۟ ۖ وَإِن يَأْتِ ٱلْأَحْزَابُ يَوَدُّوا۟ لَوْ أَنَّهُم بَادُونَ فِى ٱلْأَعْرَابِ يَسْـَٔلُونَ عَنْ أَنۢبَآئِكُمْ ۖ وَلَوْ كَانُوا۟ فِيكُم مَّا قَـٰتَلُوٓا۟ إِلَّا قَلِيلًا

(எதிர்ப்பு) அணியினர் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணுவார்கள், (அந்த எதிர்ப்பு) அணியினர் (திரும்ப) வந்துவிட்டால் கிராமப்புறங்களில் அவர்கள் நிச்சயமாக வெளியேறிச்சென்று, உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள், அவர்கள் உங்களுடன் இருந்திருப்பினும் சொற்பமேயன்றி (அதிகமாக) அவர்கள் யுத்தம் புரிய மாட்டார்கள்.

They think that Al-Ahzâb (the Confederates) have not yet withdrawn; and if Al-Ahzâb (the Confederates) should come (again), they would wish they were in the deserts (wandering) among the bedouins, seeking news about you (from a far place); and if they (happen) to be among you, they would not fight but little.

33:21

لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًا

(உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

Indeed in the Messenger of Allâh (Muhammad صلى الله عليه وسلم) you have a good example to follow for him who hopes for (the Meeting with) Allâh and the Last Day, and remembers Allâh much.

33:22

وَلَمَّا رَءَا ٱلْمُؤْمِنُونَ ٱلْأَحْزَابَ قَالُوا۟ هَـٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥ ۚ وَمَا زَادَهُمْ إِلَّآ إِيمَـٰنًا وَتَسْلِيمًا

மேலும், விசுவாசிகள் (எதிர்ப்பு) அணியினரைக் கண்டபொழுது, “இது, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்ததாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று கூறினார்கள், அவர்களுடைய விசுவாசத்தையும், வழிப்படுதலையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்திடவில்லை.

And when the believers saw Al-Ahzâb (the Confederates), they said: "This is what Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم) had promised us; and Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم) had spoken the truth. And it only added to their Faith and to their submissiveness (to Allâh).

33:23

مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا۟ مَا عَـٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا

விசுவாசிகளில் சில ஆடவர்கள் இருக்கின்றனர், எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை உண்மையாக்கி வைத்தார்கள், ஆகவே, அவர்களில் தங்கள் இலட்சியத்தை (வீரமரணத்தை) அடைந்துவிட்டவரும் இருக்கின்றனர், அவர்களில் (அதற்காக) எதிர்ப்பார்ப்பவரும் இருக்கின்றனர், (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் மாறிவிடவே இல்லை.

Among the believers are men who have been true to their covenant with Allâh [i.e. they have gone out for Jihâd (holy fighting), and showed not their backs to the disbelievers]; of them some have fulfilled their obligations (i.e. have been martyred); and some of them are still waiting, but they have never changed [i.e. they never proved treacherous to their covenant which they concluded with Allâh] in the least.1

  1. Narrated Anas رضي الله عنه: My uncle Anas bin An-Nadr was absent from the battle of Badr. He said, "O Allâh’s Messenger (صلى الله عليه وسلم)! I was absent from the first battle you fought against the pagans. (By Allah) if Allah gives me a chance to fight the… Show more

    Narrated Anas رضي الله عنه: My uncle Anas bin An-Nadr was absent from the battle of Badr. He said, "O Allâh’s Messenger (صلى الله عليه وسلم)! I was absent from the first battle you fought against the pagans. (By Allah) if Allah gives me a chance to fight the pagans, no doubt, Allah will see how (bravely) I will fight." On the day of Uhud when the Muslims turned their backs and fled, he said, "O Allah! I apologise to You for what these (i.e. his companions) have done, and I denounce what these (i.e. the pagans) have done." Then he advanced and Sa‘d bin Mu‘âdh met him. He said, "O Sa‘d bin Mu‘âdh! By the Lord of An-Nadr, Paradise! I am smelling its aroma coming from before (the mountain of) Uhud," Later on, Sa‘d said, "O Allah’s Messenger! I cannot achieve or do what he (i.e. Anas bin An-Nadr) did. We found more than eighty wounds by swords and arrows on his body. We found him dead and his body mutilated so badly that none except his sister could recognise him by his fingers." We used to think that the following Verse was revealed concerning him and other men of his sort: "Among the believers are men who have been true to their covenant with Allah."(V.33:23).

    His sister Ar-Rubaiyi‘ broke a front tooth of a woman and Allâh’s Messenger صلى الله عليه وسلم ordered for retaliation. On that Anas bin An-Nadr, said, "O Allâh’s Messenger! By Him Who has sent you with the truth, my sister’s tooth shall not be broken, then the opponents of Anas’s sister accepted the compensation and gave up the claim of retaliation. So Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "There are some people amongst Allâh’s slaves whose oaths are fulfilled by Allah when they take them." (Sahih Al-Bukhari, Vol.4, Hadîth No.61).

33:24

لِّيَجْزِىَ ٱللَّهُ ٱلصَّـٰدِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ ٱلْمُنَـٰفِقِينَ إِن شَآءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மையின் காரணத்தால், அல்லாஹ் (நற்)கூலி வழங்குவதற்காகவும், அவன் நாடினால் முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை) வேதனை செய்வதற்காகவும், அல்லது அவர்களின் தவ்பாவை அங்கீகரிப்பதற்காகவும் (அடியார்களை இவ்வாறு சோதிக்கிறான்), நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.

That Allâh may reward the men of truth for their truth (i.e. for their patience at the accomplishment of that which they covenanted with Allâh), and punish the hypocrites, if He wills, or accept their repentance by turning to them (in Mercy). Verily, Allâh is Oft-Forgiving, Most Merciful.

33:25

وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا۟ خَيْرًا ۚ وَكَفَى ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ ٱلْقِتَالَ ۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزًا

மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை-அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான்.

And Allâh drove back those who disbelieved in their rage: they gained no advantage (booty). Allâh sufficed for the believers in the fighting (by sending against the disbelievers a severe wind and troops of angels). And Allâh is Ever All-Strong, All-Mighty.

33:26

وَأَنزَلَ ٱلَّذِينَ ظَـٰهَرُوهُم مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا

இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள்.

And those of the people of the Scripture who backed them (the disbelievers), Allâh brought them down from their forts and cast terror into their hearts, (so that) a group (of them) you killed, and a group (of them) you made captives.

33:27

وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَـٰرَهُمْ وَأَمْوَٰلَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَـُٔوهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا

இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

And He caused you to inherit their lands, and their houses, and their riches, and a land which you had not trodden (before). And Allâh is Able to do all things.

33:28

يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا

நபியே! உம்முடைய மனைவியருக்கு நீர் கூறுவீராக “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு (வாழ்க்கைகுரியதைக் கொடுத்து) சுகத்தை அளிக்கிறேன், அழகிய விடுவித்தலாக (விவாக பந்தத்தை) விடுவித்தும் விடுகிறேன்.”

O Prophet (Muhammad صلى الله عليه وسلم)! Say to your wives: "If you desire the life of this world, and its glitter, then come! I will make a provision for you and set you free in a handsome manner (divorce).1

  1. a) Narrated ‘Âishah رضي الله عنها, the wife of the Prophet صلى الله عليه وسلم: When Allâh’s Messenger صلى الله عليه وسلم was ordered to give option to his wives, he started with me, saying, "I am going to mention to you something, but you shall not hasten (to… Show more

    a) Narrated ‘Âishah رضي الله عنها, the wife of the Prophet صلى الله عليه وسلم: When Allâh’s Messenger صلى الله عليه وسلم was ordered to give option to his wives, he started with me, saying, "I am going to mention to you something, but you shall not hasten (to give your reply) unless you consult your parents." The Prophet صلى الله عليه وسلم knew that my parents would not order me to leave him. Then he said, "Allâh says: "O Prophet (Muhammad صلى الله عليه وسلم)! Say to your wives: ‘If you desire the life of this world and its glitter... an enormous reward.’ " (V.33:29).

    I said, "Then why consult I my parents? Verily, I desire Allah, His Messenger and the Home of the Hereafter." Then all the other wives of the Prophet did the same as I did.

    (Sahih Al-Bukhari, Vol.6, Hadith No.309).

    b) Narrated ‘Âishah رضي الله عنها: Allâh’s Messenger صلى الله عليه وسلم gave us the option (to remain with him or to be divorced) and we chose Allâh and His Messenger. So that option was not regarded as divorce. (Sahih Al-Bukhâri, Vol.7, Hadîth No.188).

33:29

وَإِن كُنتُنَّ تُرِدْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَـٰتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا

“அன்றியும் நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும். இறுதி வீட்டையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் உங்களில் (இத்தகைய) நன்மையுடையோருக்கு மகத்தான கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான்.”

"But if you desire Allâh and His Messenger, and the home of the Hereafter, then verily, Allâh has prepared for Al-Muhsinât (good-doers) amongst you an enormous reward."

33:30

يَـٰنِسَآءَ ٱلنَّبِىِّ مَن يَأْتِ مِنكُنَّ بِفَـٰحِشَةٍ مُّبَيِّنَةٍ يُضَـٰعَفْ لَهَا ٱلْعَذَابُ ضِعْفَيْنِ ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

நபியுடைய மனைவியரே! உங்களில் எவர் பகிரங்கமான மானக்கேடான ஒரு காரியத்தைச் செய்வாரோ, அவருக்கு இரு மடங்காக வேதனை இரட்டிப்பாக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதாகவே இருக்கிறது.

O wives of the Prophet! Whoever of you commits an open illegal sexual intercourse, the torment for her will be doubled, and that is ever easy for Allâh.

33:31

۞ وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعْمَلْ صَـٰلِحًا نُّؤْتِهَآ أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا

அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ, அவருக்குரிய (நற்)கூலியை அவருக்கு நாம் இரு முறை தருவோம், இன்னும் அவருக்கு (சுவனத்தில்) மிக்க கண்ணியமான உணவை நாம் தயார் படுத்தி வைத்திருக்கின்றோம்.

And whosoever of you is obedient to Allâh and His Messenger (صلى الله عليه وسلم), and does righteous good deeds, We shall give her, her reward twice over, and We have prepared for her Rizq Karim (a noble provision - Paradise).

33:32

يَـٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِ ۚ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

நபியுடைய மனைவியரே! நீங்கள் (இதர) பெண்களில் எந்த ஒருவரைப் போன்றவர்களுமல்லர், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள், ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான், மேலும், நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.

O wives of the Prophet! You are not like any other women. If you keep your duty (to Allâh), then be not soft in speech, lest he in whose heart is a disease (of hypocrisy, or evil desire for adultery) should be moved with desire, but speak in an honourable manner.

33:33

وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَـٰهِلِيَّةِ ٱلْأُولَىٰ ۖ وَأَقِمْنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ ۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள், மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான்.

And stay in your houses, and do not display yourselves like that of the times of ignorance, and perform As-Salât (Iqamât-as-Salât), and give Zakât and obey Allâh and His Messenger. Allâh wishes only to remove Ar-Rijs (evil deeds and sins) from you, O members of the family (of the Prophet صلى الله عليه وسلم), and to purify you with a thorough purification.

33:34

وَٱذْكُرْنَ مَا يُتْلَىٰ فِى بُيُوتِكُنَّ مِنْ ءَايَـٰتِ ٱللَّهِ وَٱلْحِكْمَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا

மேலும், உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் (எனும் சுன்னத்தை)தையும் நினைவு கூறுங்கள், (அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக (யாவையும்) நன்கறிந்தோனாக இருக்கிறான்.

And remember (O you the members of the Prophet’s family, the Graces of your Lord), that which is recited in your houses of the Verses of Allâh and Al-Hikmah (i.e. Prophet’s Sunnah - legal ways, so give your thanks to Allâh and glorify His Praises for this Qur’ân and the Sunnah ). Verily, Allâh is Ever Most Courteous, Well-Acquainted with all things.

33:35

إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَـٰتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَٱلْقَـٰنِتِينَ وَٱلْقَـٰنِتَـٰتِ وَٱلصَّـٰدِقِينَ وَٱلصَّـٰدِقَـٰتِ وَٱلصَّـٰبِرِينَ وَٱلصَّـٰبِرَٰتِ وَٱلْخَـٰشِعِينَ وَٱلْخَـٰشِعَـٰتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَـٰتِ وَٱلصَّـٰٓئِمِينَ وَٱلصَّـٰٓئِمَـٰتِ وَٱلْحَـٰفِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَـٰفِظَـٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்-(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.

Verily, the Muslims (those who submit to Allâh in Islâm) men and women, the believers men and women (who believe in Islâmic Monotheism), the men and the women who are obedient (to Allâh), the men and women who are truthful (in their speech and deeds), the men and the women who are patient (in performing all the duties which Allâh has ordered and in abstaining from all that Allâh has forbidden), the men and the women who are humble (before their Lord - Allâh), the men and the women who give Sadaqât (i.e. Zakât, and alms), the men and the women who observe Saum (fast) (the obligatory fasting during the month of Ramadân, and the optional Nawâfil fasting), the men and the women who guard their chastity (from illegal sexual acts) and the men and the women who remember Allâh much with their hearts and tongues 1 Allâh has prepared for them forgiveness and a great reward (i.e. Paradise).

  1. a) "Remember Allâh" (while sitting, standing, lying for more than 300 times extra over the remembrance of Allâh during the five compulsory congregational prayer) or praying extra additional nawâfil prayers of night in the last part of night.) b) See the… Show more

    a) "Remember Allâh" (while sitting, standing, lying for more than 300 times extra over the remembrance of Allâh during the five compulsory congregational prayer) or praying extra additional nawâfil prayers of night in the last part of night.)

    b) See the footnote of (V.13:28).

    c) Narrated Abû Huraira رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "Allâh has some angels who look for those who remember (glorify the Praises of) Allâh on the roads and paths. And when they find some people remembering (glorifying the Praises of) Allâh, they call each others, saying, ‘Come to the object of your pursuit’." He added, "Then the angels encircle them with their wings up to the nearest Heaven to us." He added, "[After those people remembered (glorified the Praises of) Allâh, and the angels go back to Allâh, their Lord عز وجلasks them (those angels) - though He knows better than them - ‘What do My slaves say?’ The angels reply, ‘They say: Subhân Allâh, Allâh Akbar, and Alham-du-lillâh’ Allâh then says, ‘Did they see Me?’ The angels reply, ‘No! By Allâh, they didn’t see You.’ Allâh says, ‘How it would have been if they saw Me?’ The angels reply, ‘If they saw You, they would worship You more devoutly and remember You (glorify Your Praises) more deeply, and declare Your freedom from any resemblance to any thing more often,’ Allâh says (to the angels), ‘What do they ask Me for?’ The angels reply, ‘They ask You for Paradise.’ Allâh says (to the angels), ‘Did they see it?’ The angels say, ‘No! By Allâh, O Lord They didn’t see it.’ Allâh says: ‘How it would have been if they saw it?’ The angels say, ‘If they saw it, they would have greater covetousness for it and would seek it for greater zeal and would have greater desire for it.’ Allâh says, ‘From what do they seek refuge?’ The angels reply, ‘They seek refuge from the (Hell) Fire.’ Allâh says, ‘Did they see it?’ The angels say, ‘No! By Allâh, O Lord! They didn’t see it.’ Allâh says, ‘How it would have been if they saw it?’ The angels say, ‘If they saw it, they would flee from it with the extreme fleeing and would have extreme fear from it.’ Then Allâh says, ‘I make you witness that I have forgiven them’." Allâh’s Messenger صلى الله عليه وسلم added, "One of the angels would say, ‘There was so-and-so amongst them, and he was not one of them, but he had just come for some need.’ Allâh would say, ‘These are those people whose companions will not be reduced to misery’." (Sahih Al-Bukhari, Vol.8, Hadîth No.417).

33:36

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَـٰلًا مُّبِينًا

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்பவதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார்.

It is not for a believer, man or woman, when Allâh and His Messenger have decreed a matter that they should have any option in their decision. And whoever disobeys Allâh and His Messenger, he has indeed strayed into a plain error.

33:37

وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَـٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًا ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا

அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்-(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்-அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது.

And (remember) when you said to him (Zaid bin Hârithah رضي الله عنه - the freed-slave of the Prophet صلى الله عليه وسلم) on whom Allâh has bestowed Grace (by guiding him to Islâm) and you (O Muhammad صلى الله عليه وسلم too) have done favour (by manumitting him): "Keep your wife to yourself, and fear Allâh." But you did hide in yourself (i.e. what Allâh has already made known to you that He will give her to you in marriage) that which Allâh will make manifest, you did fear the people (i.e., their saying that Muhammad صلى الله عليه وسلم married the divorced wife of his manumitted slave) whereas Allâh had a better right that you should fear Him. So when Zaid had accomplished his desire from her (i.e. divorced her), We gave her to you in marriage, so that (in future) there may be no difficulty to the believers in respect of (the marriage of) the wives of their adopted sons when the latter have no desire to keep them (i.e. they have divorced them). And Allâh’s Command must be fulfilled.

33:38

مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥ ۖ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًا مَّقْدُورًا

(ஜைனபை மணமுடிக்கும் விஷயத்தில்) நபியின் மீது அல்லாஹ் அவருக்காக விதியாக்கியதில் எவ்வித குற்றமும் இல்லை, இதற்கு முன் சென்றுவிட்டவர்(களாகிய நபிமார்)களுக்கு (அல்லாஹ் ஏற்படுத்திய) வழியும் இதுவே; இன்னும் அல்லாஹ்வுடைய கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது.

There is no blame on the Prophet (صلى الله عليه وسلم) in that which Allâh has made legal for him. That has been Allâh’s Way with those who have passed away of (the Prophets of) old. And the Command of Allâh is a decree determined.

33:39

ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَـٰلَـٰتِ ٱللَّهِ وَيَخْشَوْنَهُۥ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا ٱللَّهَ ۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا

(முன் சென்றுவிட்ட) அவர்கள் எத்தகயோரென்றால் அல்லாஹ்வுடைய (இத்தகைய) தூதுச் செய்திகளை (மக்களுக்குக் கூடுதல் குறைவின்றி) எத்திவைப்பார்கள், இன்னும் அவர்கள் அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள், கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

Those who convey the Message of Allâh and fear Him, and fear none save Allâh. And Sufficient is Allâh as a Reckoner.

33:40

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَـٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَ ۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது தகப்பனாக இருக்கவில்லை, எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தோனாக இருக்கிறான்.

Muhammad (صلى الله عليه وسلم) is not the father of any of your men, but he is the Messenger of Allâh and the last (end) of the Prophets.1 And Allâh is Ever All-Aware of everything.

  1. See the footnote (B) of (V.2:252).

Next part: Verses 41–73 →

The Noble Qur'an — Al-Ahzab