الٓمٓ
அலிஃப் லாம் மீம்.
Alif-Lâm-Mîm.
9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
الٓمٓ
அலிஃப் லாம் மீம்.
Alif-Lâm-Mîm.
تَنزِيلُ ٱلْكِتَـٰبِ لَا رَيْبَ فِيهِ مِن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ
(நபியே! உம்மீது) அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இவ்) வேதம் இறக்கியருளப்பட்டது, அதில் யாதொரு சந்தேகமுமில்லை.
The revelation of the Book (this Qur’ân) in which there is no doubt is from the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)!
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۚ بَلْ هُوَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
மாறாக, “இதனை(த் தாமாகவே) கற்பனை செய்துகொண்டார்” என்று (உம்மைப்பற்றி) அவர்கள் கூறுகின்றார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையோ, அந்த சமூகத்தினருக்கு அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அது உம்முடைய இரட்சகனிடமிருந்து (அருளப்பட்ட) உண்மையா(ன வேதமா)கும்.
Or say they: "He (Muhammad صلى الله عليه وسلم) has fabricated it?" Nay, it is the truth from your Lord, so that you may warn a people to whom no warner has come before you (O Muhammad صلى الله عليه وسلم): in order that they may be guided.
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
அல்லாஹ் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும், இவையிரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனைத்தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ, அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ (வேறொருவரும்) இல்லை, (இதனை) நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?
Allâh it is He Who has created the heavens and the earth, and all that is between them in six Days. Then He rose over (Istawâ ) the Throne (in a manner that suits His Majesty). You (mankind) have none, besides Him, as a Walî (protector or helper) or an intercessor. Will you not then remember (or receive admonition)?
يُدَبِّرُ ٱلْأَمْرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥٓ أَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ
வானத்திலிருந்து பூமிவரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான், பின்னர் (நிர்வகிக்கப்பட்ட காரியமான) அது நீங்கள் எண்ணுகின்ற (உங்கள்) கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடைய அளவு இருக்கும் (அந்)நாளில் அவன் பக்கம் உயரும்.
He manages and regulates (every) affair from the heavens to the earth; then it (affair) will go up to Him, in one Day, the space whereof is a thousand years of your reckoning (i.e. reckoning of our present world’s time).
ذَٰلِكَ عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
(மேற் கூறப்பட்ட தகுதிகளுக்குரிய) அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன், (அன்றி யாவற்றையும், அவனே மிகைத்தோன், பெருங்கிருபையுடையவன்.
That is He: the All-Knower of the unseen and the seen, the All-Mighty, the Most Merciful.
ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥ ۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَـٰنِ مِن طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால், எதனை அவன் படைத்தானோ அந்த ஒவ்வொரு பொருளையும், (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான், மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
Who made everything He has created good and He began the creation of man from clay.
ثُمَّ جَعَلَ نَسْلَهُۥ مِن سُلَـٰلَةٍ مِّن مَّآءٍ مَّهِينٍ
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (-இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை (உருவகித்து) உண்டாக்கினான்.
Then He made his offspring from semen of despised water (male and female sexual discharge).
ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦ ۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
பின்னர், அதனைச் சரியாக உருவாக்கி, தன்னுடைய “ரூஹ்” (ஆன்மா)விலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான், இன்னும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை(ப்புலன்)களையும், இதயங்களையும் அவனே அமைத்தான். (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக்குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Then He fashioned him in due proportion, and breathed into him the soul (created by Allâh for that person); and He gave you hearing (ears), sight (eyes) and hearts. Little is the thanks you give!
وَقَالُوٓا۟ أَءِذَا ضَلَلْنَا فِى ٱلْأَرْضِ أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍۭ ۚ بَلْ هُم بِلِقَآءِ رَبِّهِمْ كَـٰفِرُونَ
“(நாங்கள் இறந்து) பூமியில் மறைந்து (அழிந்து) போன பின்னர், நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பில் ஆவோமோ?” என்று அவர்கள் கூறுகின்றனர். அ(வ்வாற)ல்ல! அவர்கள் தங்கள் இரட்சகனின் சந்திப்பையே நிராகரிப்போராக இருக்கின்றனர்.
And they say: "When we are (dead and become) lost in the earth, shall we indeed be created anew?" Nay, but they deny the Meeting with their Lord!
۞ قُلْ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلْمَوْتِ ٱلَّذِى وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
ஆகவே (நபியே!) நீர் கூறுவீராக: உங்களுக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் மலக்குல் மவ்த் (ஆகிய வானவர் தான்) உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார், பின்னர் (மீண்டும் உயிர்க்கொடுக்கப்பட்டு), உங்கள் இரட்சகனிடமே நீங்கள் திருப்பிக்கொண்டு வரப்படுவீர்கள்.
Say: "The angel of death, who is set over you, will take your souls. Then you shall be brought to your Lord."