9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 414

/ 604
Page 414

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

31. Luqmanسورة لقمان

31:29

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّ يَجْرِىٓ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகவைக்கிறான், பகலை இரவில் புகவைக்கிறான் என்பதையும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருக்கிறான் என்பதையும் நீர் பார்க்கவில்லையா? (இவற்றில்) ஒவ்வொன்றும் குறிப்பிடபட்ட தவணையின்பால் நடக்கின்றன, இன்னும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.

See you not (O Muhammad صلى الله عليه وسلم) that Allâh merges the night into the day (i.e. the decrease in the hours of the night are added to the hours of the day), and merges the day into the night (i.e. the decrease in the hours of day are added to the hours of night), and has subjected the sun and the moon, each running its course for a term appointed; and that Allâh is All-Aware of what you do.

31:30

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ ٱلْبَـٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ

அது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்-அவனே மெய்யானவனாவான், அவனைத் தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும், மேலும், நிச்சயமாக அல்லாஹ்-அவனே (சகலரையும்விட) உயர்வுடையவன், மிகப்பெரியவன் என்ற காரணத்திலாகும்.

That is because Allâh, He is the Truth, and that which they invoke besides Him1 is Al-Bâtil (falsehood, Satan and all other false deities); and that Allâh, He is the Most High, the Most Great.

  1. See the footnote of (V.2:165).

31:31

أَلَمْ تَرَ أَنَّ ٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِنِعْمَتِ ٱللَّهِ لِيُرِيَكُم مِّنْ ءَايَـٰتِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அவன் காண்பிப்பதற்காக வேண்டி அல்லாஹ்வின் அருட்கொடையைக் கொண்டு, கடலில் நிச்சயமாக கப்பல் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில், அதிகமாகப் பொறுமையுடையோர் - நன்றியுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

See you not that the ships sail through the sea by Allâh’s Grace that He may show you of His Signs? Verily, in this are signs for every patient, grateful (person).

31:32

وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَٱلظُّلَلِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَـٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ

(கடலில் பிரயாணிக்கும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள், மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில் அல்லாஹ்வை-அவனுக்கே மார்க்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக-அவர்கள் அழை(த்து பிரார்த்தி)க்கின்றனர், அவன், அவர்களைக் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டால், அப்போது அவர்களில் (அல்லாஹ்வை விசுவாசங் கொள்ளும்) நீதமானவரும் உண்டு, இன்னும் மிக நன்றிகெட்ட பெரும் சதிகாரர்களைத் தவிர, (மற்றெவரும்) நம்முடைய அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.

And when a wave covers them like shades (i.e. like clouds or the mountains of sea-water), they invoke Allâh, making their invocations for Him only. But when He brings them safe to land, there are among them those that stop in between (Belief and disbelief). But none denies Our Signs except every perfidious ingrate.1

  1. See the footnote of (V.17:67).

31:33

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ وَٱخْشَوْا۟ يَوْمًا لَّا يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيْـًٔا ۚ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

மனிதர்களே! உங்கள் இரட்சகனுக்கு பயந்து கொள்ளுங்கள், இன்னும், ஒரு நாளை பயப்படுங்கள், (அந்நாளில்,) எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு உதவமாட்டான், எந்தப் பிள்ளையும் தன் தந்தைக்கு எத்தகைய உதவியும் செய்பவனாக இல்லை. நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி, உண்மையானதாகும், ஆகவே, நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவனும், அல்லாஹ்வைப்பற்றி உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

O mankind! Be afraid of your Lord (by keeping your duty to Him and avoiding all evil), and fear a Day when no father can avail aught for his son, nor a son avail aught for his father. Verily, the Promise of Allâh is true: let not then this (worldly) present life deceive you, nor let the chief deceiver (Satan) deceive you about Allâh.

31:34

إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى ٱلْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِى نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِى نَفْسٌۢ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۢ

நிச்சயமாக அல்லாஹ்-அவனிடம்தான் மறுமைநாள் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையையும் இறக்கிவைக்கிறான், அவனே கர்ப்பங்களில் உள்ளவைகளையும் அறிகிறான், எந்த ஆத்மாவும், நாளை அது எதைச் சம்பாதிக்கும் என அறியாது. மேலும், எந்த ஆத்மாவும் எந்தப் பூமியில் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதையும் அறியாது, நிச்சயமாக அல்லாஹ் (அவனே) நன்கறிகிறவன், (செய்திகளை) நன்குணர்பவன்.

Verily Allâh, with Him (Alone) is the knowledge of the Hour, He sends down the rain, and knows that which is in the wombs. No person knows what he will earn tomorrow, and no person knows in what land he will die. Verily, Allâh is All-Knower, All-Aware (of things).1

  1. See the footnote of (V.7:187).

32. As-Sajdahسورة السجدة