மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
உங்களிலிருந்து எவரேனும் மனைவிகளை விட்டுவிட்டு இறந்து விட்டால் (அம்மனைவியரான) அவர்கள் தமக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருப்பர். (இதற்கு மரண இத்தா என்று பெயர்) ஆதலால், அவர்கள் தங்களுடைய (‘இத்தா’வின்) தவணையை அடைந்து விட்டால், அப்பொழுது தங்களில் நியாயமான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்கின்றவற்றில் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்குணர்கின்றவன்.
And those of you who die and leave wives behind them, they (the wives) shall wait (as regards their marriage) for four months and ten days, then when they have fulfilled their term, there is no sin on you if they (the wives) dispose of themselves in a just and honourable manner (i.e. they can marry). And Allâh is Well-Acquainted with what you do.
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ ۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَـٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَـٰبُ أَجَلَهُۥ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ
(இத்தாவிலிருக்கும் யாதொரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் உங்களுக்குள்) பெண் பேசுவதை நீங்கள் (சைக்கினையாக) எடுத்துக் கூறுவதிலோ, அல்லது உங்கள் மனங்களில் நீங்கள் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள்மீது குற்றமில்லை. (ஏனெனில்,) நீங்கள் இத்தா முடிந்தபின் அவர்களை நிச்சயமாக நீங்கள் நினைவு கூர்வீர்களென்பதை அல்லாஹ் அறிந்திருக்கிறான்; எனினும், நீங்கள் கண்ணியமான முறையில் (சைக்கினையாக) கூறுவதைத் தவிர (‘இத்தா’வுடைய காலத்தில் திருமணத்தைப் பற்றி அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்யாதீர்கள். இன்னும் விதியாகப்பட்டது அதன் தவணையை அடையும்வரை (‘இத்தா’வின் தவணை முடிவதற்குள் அவர்களைத்) திருமணம் செய்து கொள்ள உறுதியும் செய்துவிடாதீர்கள். உங்கள் மனங்களிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் அறிந்து அவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கின்றவன். மிகுந்த சகிப்புத் தன்மையுடையவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
And there is no sin on you if you make a hint of betrothal or conceal it in yourself, Allâh knows that you will remember them, but do not make a promise of contract with them in secret except that you speak an honourable saying according to the Islâmic law.1 And do not consummate the marriage until the term prescribed is fulfilled. And know that Allâh knows what is in your minds, so fear Him. And know that Allâh is Oft-Forgiving, Most Forbearing.
e.g. you can say to her, "If one finds a wife like you, he will be happy".
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةً ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
(திருமணம் செய்த) பெண்களை நீங்கள் தீண்டாமலும், அல்லது (திருமணத்தின்போது) அவர்களின் மஹரை நிர்ணயம் செய்யாமலும் (அவர்களை) நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டால், உங்கள்மீது (அது) குற்றமில்லை. இன்னும், அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யுங்கள். வசதியுள்ளவர்களின்மீது அவருக்குரிய அளவும், வசதியற்றவர்மீது அவருக்குரிய அளவும், நியாயமான முறையில் அப்பெண்களுக்குக் கொடுத்துப் பயனடையச் செய்ய வேண்டும். இது (நல்லோர்) மீது கடமையாகும்.
There is no sin on you, if you divorce women while yet you have not touched (had sexual relation with) them, nor appointed unto them their Mahr (bridal-money given by the husband to his wife at the time of marriage). But bestow on them (a suitable gift), the rich according to his means, and the poor according to his means, a gift of reasonable amount is a duty on the doers of good.
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
மேலும், (திருமணம் செய்த பெண்களான) அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் அவர்களுடைய ‘மஹரை’ நீங்கள் குறிப்பிட்டு நிர்ணயம் செய்திருக்க நீங்கள் அவர்களை விவரகரத்து செய்து விட்டால், (அப்பெண்ணாகிய) அவர்கள் (விட்டுக் கொடுத்து) மன்னித்து விட்டாலோ, அல்லது யாருடைய கையில் திருமண பந்தமிருக்கின்றதோ, அவர் (விட்டுக்கொடுத்து) மன்னித்துவிட்டாலோ அன்றி, நீங்கள் நிர்ணயம் செய்ததில் பாதி (அப்பெண்களுக்கு) உண்டு. மேலும், நீங்கள் மன்னித்து விடுவது (விட்டுக் கொடுப்பது) பயபக்திக்கு மிக நெருங்கியதாகும். ஆகவே, உங்களுக்கிடையில் (உபகாரம் செய்து கொள்வதில்) தயாள குணத்துடன் நடப்பதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன்.
And if you divorce them before you have touched (had a sexual relation with) them, and you have appointed unto them the Mahr (bridal-money given by the husband to his wife at the time of marriage), then pay half of that (Mahr), unless they (the women) agree to forego it, or he (the husband), in whose hands is the marriage tie, agrees to forego and give her full appointed Mahr. And to forego and give (her the full Mahr) is nearer to At-Taqwa (piety, righteousness). And do not forget liberality between yourselves. Truly, Allâh is All-Seer of what you do.