மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّ فَضْلَهُۥ كَانَ عَلَيْكَ كَبِيرًا
உமதிரட்சகனின் அருளாகவே தவிர (அதை நாம் விட்டு வைத்திருக்கவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய பேரருள் மிகப் பெரிதாகவே இருக்கிறது.
Except as a Mercy from your Lord. Verily His Grace unto you (O Muhammad صلى الله عليه و سلم) is ever great.
قُل لَّئِنِ ٱجْتَمَعَتِ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَىٰٓ أَن يَأْتُوا۟ بِمِثْلِ هَـٰذَا ٱلْقُرْءَانِ لَا يَأْتُونَ بِمِثْلِهِۦ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
“இந்தக் குர் ஆனைப் போன்று கொண்டு வருவதற்கு மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் இதனைப் போன்று அவர்கள் கொண்டுவர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Say: "If the mankind and the jinn were together to produce the like of this Qur’ân, they could not produce the like thereof, even if they helped one another."
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِى هَـٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًا
மேலும், இந்தக் குர் ஆனில், சகல உதாரணங்களையும் மனிதர்களுக்கு நாம் (திருப்பித் திருப்பி) விவரித்துத் தெளிவாக்கியுள்ளோம், ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நிராகரிப்பதைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.
And indeed We have fully explained to mankind, in this Qur’ân, every kind of similitude, but most of mankind refuse (the truth and accept nothing) but disbelief.
وَقَالُوا۟ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ ٱلْأَرْضِ يَنۢبُوعًا
இன்னும், “(நபியே! இப்)பூமியிலிருந்து, நீர் ஒரு நீரூற்றை எங்களுக்காக பீறிட்டு ஓடச் செய்யும் வரை உம்மை நாங்கள் விசுவாசிக்கவே மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
And they say: "We shall not believe in you (O Muhammad صلى الله عليه و سلم), until you cause a spring to gush forth from the earth for us;
أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ ٱلْأَنْهَـٰرَ خِلَـٰلَهَا تَفْجِيرًا
–அல்லது பேரீச்சை திராட்சை (மரங்களை)யுடைய ஒரு தோட்டம் உமக்கு இருந்து அவைகளுக்கிடையில் ஆறுகளை (ஏற்படுத்தி) நீர் ஓடச் செய்யும்வரை –
"Or you have a garden of date-palms and grapes, and cause rivers to gush forth in their midst abundantly;
أَوْ تُسْقِطَ ٱلسَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِىَ بِٱللَّهِ وَٱلْمَلَـٰٓئِكَةِ قَبِيلًا
– அல்லது நீர் எண்ணியது போன்று எங்களின்மீது வானத்திலிருந்து துண்டுகளை விழச்செய்யும்வரை – அல்லது அல்லாஹ்வையும், மலக்குகளையும் (நம்) முன்பாக நீர் கொண்டு வரும்வரை –
"Or you cause the heaven to fall upon us in pieces, as you have pretended, or you bring Allâh and the angels before (us) face to face;
أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِى ٱلسَّمَآءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَـٰبًا نَّقْرَؤُهُۥ ۗ قُلْ سُبْحَانَ رَبِّى هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا
–அல்லது (மிக்க அழகான) பொன்னாலாகிய ஒரு (மாளிகை) வீடு உமக்கு ஆகும்வரை, அல்லது வானத்தில் நீர் உயர்ந்து செல்லும்வரை (உம்மை விசுவாசிக்க மாட்டோம்.) இன்னும், நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை நீர் (நேராக) நம் மீது இறக்கி வைக்கும் வரை (நீர் வானத்தில்) ஏறியதை நம்பவே மாட்டோம் (என்றும் கூறுகின்றனர், அதற்கு) “என் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நான் (அல்லாஹ்வின்) தூதனாகிய ஒரு மனிதனாகவே தவிர இருக்கின்றேனா?” என்று நீர் கூறுவீராக!
"Or you have a house of Zukhruf (like silver and pure gold), or you ascend up into the sky, and even then we will put no faith in your ascension until you bring down for us a Book that we would read." Say (O Muhammad صلى الله عليه و سلم): "Glorified (and Exalted) be my Lord [(Allâh) above all that evil they (polytheists) associate with Him]! Am I anything but a man, sent as a Messenger?"
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤْمِنُوٓا۟ إِذْ جَآءَهُمُ ٱلْهُدَىٰٓ إِلَّآ أَن قَالُوٓا۟ أَبَعَثَ ٱللَّهُ بَشَرًا رَّسُولًا
மனிதர்களை – அவர்களிடம் நேர் வழி வந்த சமயத்தில், “அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்) தூதராக அனுப்பி வைத்தான்” என்று அவர்கள் கூறுவதைத் தவிர - அவர்கள் விசுவாசங்கொள்வதை (வேறெதுவும்) தடுக்கவில்லை.
And nothing prevented men from believing when the guidance came to them, except that they said: "Has Allâh sent a man as (His) Messenger?"
قُل لَّوْ كَانَ فِى ٱلْأَرْضِ مَلَـٰٓئِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكًا رَّسُولًا
(அதற்கு) நீர் கூறுவீராக! “பூமியில் மலக்குகள் (வசித்து) இருந்து, (அதில் அவர்கள் நிம்மதியுடையோராக நடந்து திரிந்து கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் வானத்திலிருந்து ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் இறக்கி வைத்திருப்போம், (எனினும், அவர்கள் மனிதர்களாக இருப்பதனால் ஒரு மனிதரே தவிர அவர்களுக்குத் தூதராக வர மாட்டார்.)
Say: "If there were on the earth, angels walking about in peace and security, We should certainly have sent down for them from the heaven an angel as a Messenger."
قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ ۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
(இன்னும்) நீர் கூறுவீராக! “எனக்கும் உங்களுக்குமிடையிலும் (உண்மையை நிலைநிறுத்த) சாட்சியாக அல்லாஹ் ஒருவனே போதுமானவன், (ஏனென்றால்,) நிச்சயமாக அவன் தன் அடியார்களைப்பற்றி நன்குணர்பவனாக, (சாட்சியாக இருக்க, யாவற்றையும்) பார்ப்பவனாக இருக்கின்றான்.
Say: "Sufficient is Allâh for a witness between me and you. Verily He is Ever the All-Knower, the All-Seer of His slaves."