மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
(நபியே!) நீர் கூறுவீராக “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மையைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசங் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை”
Say (O Muhammad صلى الله عليه وسلم): "I possess no power over benefit or harm to myself except as Allâh wills. If I had the knowledge of the Ghaib (Unseen), I should have secured for myself an abundance of wealth, and no evil should have touched me. I am but a warner, and a bringer of glad tidings unto people who believe."
۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَـٰلِحًا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ
அவன் எத்தகையவனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்து அதிலிருந்து அதற்குரிய ஜோடி(யான மனைவி)யை அவளுடன் கூடி வசிப்பதற்காகவும் உண்டாக்கினான், அவளை அவர் மூடிக் கொண்டபோது அவள் இலேசான சுமை சுமந்தாள், பின்னர் அதனை(ச்சுமந்து)க் கொண்டு திரிந்தாள், அது கனமானபோது, “நீ எங்களுக்கு (சந்ததியில்) நல்லதை அளித்தால், நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துவோரில் இருப்போம்” என்று அவ்விருவருடைய இரட்சகனாகிய அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தார்கள்.
It is He Who has created you from a single person (Adam), and (then) He has created from him his wife [Hawwâ’ (Eve)], in order that he might enjoy the pleasure of living with her. When he (a polytheist from Adam’s offspring - as stated by Ibn Kathir in his Tafsir) had sexual relation with her (the polytheist’s wife), she became pregnant and she carried it about lightly. Then when it became heavy, they both invoked Allâh, their Lord (saying): "If You give us a Sâlih (good in every aspect) child, we shall indeed be among the grateful."
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَـٰلِحًا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَـٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ
அவ்விருவருக்கும் நல்ல (சந்ததியான)தை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அவ்விருவரும் இணையாளர்களை ஆக்கினார்கள், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் உயர்வானவன்.
But when He gave them (the polytheist and his wife) a Sâlih (good in every aspect) child, they ascribed partners to Him (Allâh) in that which He has given to them. High be Allâh, Exalted above all that they ascribe as partners to Him. (Tafsir Ibn Kathir).
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ
எப்பொருளையும் படைக்காதவற்றை அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றனரா? அவர்களும் (அவனால்) படைக்கப்பட்டவர்களே!
Do they attribute as partners to Allâh those who created nothing but they themselves are created?
وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
மேலும், அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்யச் சக்தி பெற மாட்டார்கள், தங்களுக்குத் தாங்களே (ஏதும்) உதவி செய்து கொள்ளவும் (சக்தி பெற) மாட்டார்கள்.
No help can they give them, nor can they help themselves.
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَـٰمِتُونَ
நீங்கள் அவர்களை நேர் வழியின்பால் அழைத்தபோதிலும் உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள், நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டவர்களாக இருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
And if you call them to guidance, they follow you not. It is the same for you whether you call them or you keep silent.
إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் (தெய்வங்களென அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே, (உங்களுக்குப் பயனளிப்பார்கள் என்ற கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.
Verily, those whom you call upon besides Allâh are slaves like you. So call upon them and let them answer you if you are truthful.
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
(இணை வைப்போரே! நீங்கள் வணங்கும்) அவர்களுக்கு எவற்றைக்கொண்டு அவர்கள் நடப்பார்களோ அத்தகைய கால்கள் உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பிடிப்பார்களோ அத்தகைய கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பார்ப்பார்களோ அத்தகைய கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக் கொண்டு அவர்கள் செவியுறுவார்களோ அத்தகைய செவிகள் அவர்களுக்கு உண்டா? (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு (எனக்கு இடையூறு செய்ய) சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Have they feet wherewith they walk? Or have they hands wherewith they hold? Or have they eyes wherewith they see? Or have they ears wherewith they hear? Say (O Muhammad صلى الله عليه وسلم): "Call your (so-called) partners (of Allâh) and then plot against me, and give me no respite!