மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِى ٱلْأَرْضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ ٱلْجِبَالَ بُيُوتًا ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
“ஆது (கூட்டத்தாரு)க்குப் பின்னர் உங்களை அவன் பின்தோன்றல்களாக்கி வைத்ததையும், பூமியில் உங்களை வசிக்கச் செய்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், நீங்கள் அதன் இலகுவான பூமியில் மாளிகைகளைக் கட்டிக் கொள்கின்றீர்கள், மலைகளை வீடுகளாகக் குடைந்து அமைத்துக் கொள்கின்றீர்கள், ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள், அன்றியும் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள் என்று கூறினார்.
And remember when He made you successors after ‘Âd (people) and gave you habitations in the land, you build for yourselves palaces in plains, and carve out homes in the mountains. So remember the graces (bestowed upon you) from Allâh, and do not go about making mischief on the earth."
قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَـٰلِحًا مُّرْسَلٌ مِّن رَّبِّهِۦ ۚ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ
(அதற்கு,) அவருடைய சமூகத்தாரில் கர்வங்கொண்டிருந்த பிரதானிகள், தங்களைவிட பலவீனமானவர்களென எண்ணப்பட்டிருந்த அவர்களில் விசுவாசங்கொண்டோரிடம் “நிச்சயமாக (இந்த) ஸாலிஹ் அவர் இரட்சகனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களா? என்று கேட்டார்கள், அ(தற்கவர்)கள், “நிச்சயமாக நாங்கள் எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(த்தூ)தை விசுவாசம் கொள்ளக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
The leaders of those who were arrogant among his people said to those who were counted weak - to such of them as believed: "Know you that Sâlih is one sent from his Lord." They said: "We indeed believe in that with which he has been sent."
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا بِٱلَّذِىٓ ءَامَنتُم بِهِۦ كَـٰفِرُونَ
(அதற்கு) கர்வங்கொண்டிருந்தார்களே அவர்கள் (அவ்விசுவாசிகளிடம்) “நீங்கள் எதை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்
Those who were arrogant said: "Verily, we disbelieve in that which you believe in."
فَعَقَرُوا۟ ٱلنَّاقَةَ وَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا۟ يَـٰصَـٰلِحُ ٱئْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلْمُرْسَلِينَ
பின்னர், அந்த ஒட்டகத்தை அறுத்துவிட்டார்கள், தங்கள் இரட்சகனின் கட்டளையை மீறியும் விட்டனர், இன்னும் (அவர்கள் ஸாலிஹிடம்) “ஸாலிஹே! நீர் (அல்லாஹ்வுடைய) தூதர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
So they killed the she-camel and insolently defied the Commandment of their Lord, and said: "O Sâlih! Bring about your threats if you are indeed one of the Messengers (of Allâh)."
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَـٰثِمِينَ
ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் (இறந்து) குப்புற வீழ்ந்து கிடக்க காலைப்பொழுதை அடைந்தனர்.
So the earthquake seized them, and they lay (dead), prostrate in their homes.
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ وَلَـٰكِن لَّا تُحِبُّونَ ٱلنَّـٰصِحِينَ
(அந்நேரத்தில் ஸாலீஹ் நபி) அவர்களை விட்டும் திரும்பிக் கொண்டார், மேலும், (அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இரட்சகனின் தூதையே எத்தி வைத்தேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன், எனினும், நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
Then he [Sâlih] turned from them, and said: "O my people! I have indeed conveyed to you the Message of my Lord, and have given you good advice but you like not good advisers."
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَتَأْتُونَ ٱلْفَـٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ ٱلْعَـٰلَمِينَ
“லூத்”தையும் (நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தார்க்கு நாம் அனுப்பி வைத்தோம்) அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா? அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூருங்கள்.)
And (remember) Lût (Lot), when he said to his people: "Do you commit the worst sin such as none preceding you has committed in the ‘Âlamîn (mankind and jinn)?
إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
“நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக (அதைத் தணித்துக் கொள்ள) வருகின்றீர்கள், மாறாக நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தவராகவே இருக்கின்றீர்கள்” (என்று கூறினார்).
"Verily, you practise your lusts on men instead of women. Nay, but you are a people transgressing beyond bounds (by committing great sins)."