8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 155

/ 604
Page 155

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

7. Al-A'rafسورة الأعراف

7:38

قَالَ ٱدْخُلُوا۟ فِىٓ أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ فِى ٱلنَّارِ ۖ كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌ لَّعَنَتْ أُخْتَهَا ۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُوا۟ فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَىٰهُمْ لِأُولَىٰهُمْ رَبَّنَا هَـٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ ٱلنَّارِ ۖ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَلَـٰكِن لَّا تَعْلَمُونَ

(அதற்கு அல்லாஹ் அவர்களிடம்) “ஜின்களிலும் மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட கூட்டத்தினர்களுடன் நீங்களும் சேர்ந்து நரக நெருப்பில் நுழையுங்கள்” என்று கூறுவான், அவர்களில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் (நரகத்திற்குள்) நுழையும் பொழுதெல்லாம் தனக்கு முன் அங்கு வந்துள்ள தங்கள் (இனத்தாரின் முன் சென்ற)சகக்கூட்டத்தினரை சபிப்பார்கள், முடிவாக அவர்கள் யாவரும் நரகத்தையடைந்த பொழுது (அவர்களில்) பிந்தியவர்கள் (பின்பற்றியவர்கள், பின்பற்றப்பட்ட தலைவர்களான) முந்தியவர்களைப் பற்றி “எங்கள் இரட்சகனே இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தவர்கள், ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) நரகத்தில் இரட்டிப்பான வேதனையைக் கொடுப்பாயாக” என்று கூறுவார்கள், அதற்கு அவன் “உங்களில் ஒவ்வொருவருக்குமே இரட்டிப்பு (வேதனை) உண்டு, எனினும், (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.

(Allâh) will say: "Enter you in the company of nations who passed away before you, of men and jinn, into the Fire." Every time a new nation enters, it curses its sister nation (that went before) until they will be gathered all together in the Fire. The last of them will say to the first of them: "Our Lord! These misled us, so give them a double torment of the Fire." He will say: "For each one there is double (torment), but you know not."

7:39

وَقَالَتْ أُولَىٰهُمْ لِأُخْرَىٰهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ

அவர்களில் முந்தியவர்கள் அவர்களில் பிந்தியவர்களிடம், “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்கள் சம்பாதித்துக் கொண்ட (தீ)வினையின் காரணமாக (நீங்களும் இரட்டிப்பு) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.

The first of them will say to the last of them: "You were not better than us, so taste the torment for what you used to earn."

7:40

إِنَّ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدْخُلُونَ ٱلْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلْجَمَلُ فِى سَمِّ ٱلْخِيَاطِ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُجْرِمِينَ

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது, மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

Verily, those who belie Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations) and treat them with arrogance, for them the gates of heaven will not be opened, and they will not enter Paradise until the camel goes through the eye of the needle (which is impossible). Thus do We recompense the Mujrimûn (criminals, polytheists and sinners).

7:41

لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلظَّـٰلِمِينَ

அவர்களுக்கு நரகத்திலிருந்து (நெருப்பு) விரிப்புகளும், அவர்களுக்கு மேலிருந்து (போர்த்திக் கொள்ள நெருப்புப்) போர்வைகளும் உண்டு, இன்னும் இவ்வாறே அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

Theirs will be a bed of Hell (Fire), and over them coverings (of Hell-fire). Thus do We recompense the Zâlimûn (polytheists and wrong-doers).

7:42

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

இன்னும், விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குத் தக்கவாரல்லாது நாம் சிரமப்படுத்தமாட்டோம்-அவர்கள்தான் சுவனவாசிகள், அதில் அவர்கள் நிந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.

But those who believed (in the Oneness of Allâh - Islâmic Monotheism), and worked righteousness - We tax not any person beyond his scope - such are the dwellers of Paradise. They will abide therein.

7:43

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَـٰرُ ۖ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَـٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ ۖ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ ۖ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தை நாம் நீக்கி விடுவோம், அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், இன்னும் அவர்கள், “இ(ந்தக் சுவனபதியை அடைவ)தற்குரிய நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிடில், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை அடைந்தவர்களாக ஆகி இருக்கவே மாட்டோம், எங்கள் இரட்சகனின் தூதர்கள் (சந்தேகமின்றி) சத்திய (மார்க்க)த்தையே நிச்சயமாக (எங்களுக்கு)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள், அந்த சொர்க்கம், நீங்கள் (பூமியில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் (மூலம் அல்லாஹ்வின் அருளைப்பெற்று அதன்) காரணமாகவே அதனை நீங்கள் வாரிசாக்கப்பட்டுள்ளீர்கள் என்று (சப்தமிட்டு) அழைக்கப்படுவார்கள்.

And We shall remove from their breasts any (mutual) hatred or sense of injury (which they had, if at all, in the life of this world); rivers flowing under them, and they will say: "All the praises and thanks be to Allâh, Who has guided us to this, and never could we have found guidance, were it not that Allâh had guided us! Indeed, the Messengers of our Lord did come with the truth." And it will be cried out to them: "This is the Paradise which you have inherited for what you used to do."