மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍ وَخَلَقْتَهُۥ مِن طِينٍ
(ஆகவே, அல்லாஹ் இப்லீஸிடம்) “நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது?” என்று கேட்டான், அதற்கு “நான் அவரைவிட மேலானவன், (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரையோ களிமண்ணால் படைத்தாய்” என்று (இறுமாப்புடன் இப்லீஸாகிய) அவன் கூறினான்.
(Allâh) said: "What prevented you (O Iblîs) that you did not prostrate yourself, when I commanded you?" Iblîs said: "I am better than him (Adam), You created me from fire, and him You created from clay."
قَالَ فَٱهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخْرُجْ إِنَّكَ مِنَ ٱلصَّـٰغِرِينَ
“இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ இதில் பெருமை கொள்வதற்கு உனக்குத் தகுதியில்லை, ஆதலால், நீ வெளியேறிவிடு, (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப் பட்டோரில் இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
(Allâh) said: "(O Iblîs) get down from this (Paradise), it is not for you to be arrogant here. Get out, for you are of those humiliated and disgraced."
قَالَ أَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
(அதற்கு இப்லீஸாகிய) அவன்,) “இறந்தோர் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று கேட்டான்.
(Iblîs) said: "Allow me respite till the Day they are raised up (i.e. the Day of Resurrection)."
قَالَ إِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ
“நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசமளிக்கப்பட்டோரில் (ஒருவனாக) இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
(Allâh) said: "You are of those respited."
قَالَ فَبِمَآ أَغْوَيْتَنِى لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَٰطَكَ ٱلْمُسْتَقِيمَ
“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்” என்றும் (இப்லீஸாகிய) அவன் கூறினான்.)
(Iblîs) said: "Because You have sent me astray, surely I will sit in wait against them (human beings) on Your Straight Path.
ثُمَّ لَـَٔاتِيَنَّهُم مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَـٰنِهِمْ وَعَن شَمَآئِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَـٰكِرِينَ
“பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங்களிலும், அவர்களின் இடப்புறங்களிலும் அவர்களிடம் நான் வந்து (அவர்களை வழி கெடுத்துக் கொண்டேயிருப்பேன், மேலும், அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாக நீ காணமாட்டாய்”
"Then I will come to them from before them and behind them, from their right and from their left, and You will not find most of them as thankful ones (i.e. they will not be dutiful to You)."
قَالَ ٱخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَّدْحُورًا ۖ لَّمَن تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكُمْ أَجْمَعِينَ
இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக (உன்னையும்) அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களையும் சேர்த்து உங்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நரகத்தை நான் நிரப்புவேன்” என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
(Allâh) said (to Iblîs): "Get out from this (Paradise), disgraced and expelled. Whoever of them (mankind) will follow you, then surely I will fill Hell with you all."
وَيَـٰٓـَٔادَمُ ٱسْكُنْ أَنتَ وَزَوْجُكَ ٱلْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَـٰذِهِ ٱلشَّجَرَةَ فَتَكُونَا مِنَ ٱلظَّـٰلِمِينَ
மேலும், “ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவர்க்கத்தில் வசித்திருங்கள், பின்னர், நீங்கள் இருவரும் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் சென்று நாடியவாறு புசியுங்கள் , இன்னும், இம்மரத்திற்கு அருகில் நீங்களிருவரும் நெருங்காதீர்கள், (அவ்வாறு சென்றால்) நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்றும் அல்லாஹ் கூறினான்.
"And O Adam! Dwell you and your wife in Paradise, and eat thereof as you both wish, but approach not this tree otherwise you both will be of the Zâlimûn (unjust and wrong-doers)."
فَوَسْوَسَ لَهُمَا ٱلشَّيْطَـٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وُۥرِىَ عَنْهُمَا مِن سَوْءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنْ هَـٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ ٱلْخَـٰلِدِينَ
பின்னர் அவ்விருவருக்கும், மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் (அவர்களிடம் இரசியமாகப் பேசி தவறான எண்ணத்தை) ஊசாட்டத்தை அவ்விருவருக்கும் உண்டாக்கினான், மேலும், “(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள், அல்லது நிரந்தரமாக இருப்பவர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இரட்சகன் அம்மரத்தைவிட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Then Shaitân (Satan) whispered suggestions to them both in order to uncover that which was hidden from them of their private parts (before); he said: "Your Lord did not forbid you this tree save that you should become angels or become of the immortals."
وَقَاسَمَهُمَآ إِنِّى لَكُمَا لَمِنَ ٱلنَّـٰصِحِينَ
“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கின்றேன்” என்று அவ்விருவரிடம் (இப்லீஸாகிய அவன்) சத்தியமும் செய்தான்.
And he [Shaitân (Satan)] swore by Allâh to them both (saying): "Verily, I am one of the sincere well-wishers for you both."
فَدَلَّىٰهُمَا بِغُرُورٍ ۚ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ ۖ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيْطَـٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
(பின்னர்) அவ்விருவரை ஏமாற்றி (படிப்படியாக தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கச் செய்தான், எனவே, அவ்விருவரும் அம்மரத்தை அதன் கனியை)ச் சுவைக்கவே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் அவ்விருவருக்கும் வெளியாகித் தெரியலாயிற்று, அச்சுவனத்தில் இலைகளைக் கொண்டு அவ்விருவரும் தங்களை மூடிக் கொள்ளவும் ஆரம்பித்தனர், மேலும், (அது சமயம்) அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரையும் அழைத்து “இம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா?” நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று அவ்விருவரையும் கேட்டான்.
So he misled them with deception. Then when they tasted of the tree, that which was hidden from them of their shame (private parts) became manifest to them and they began to cover themselves with the leaves of Paradise (in order to cover their shame). And their Lord called out to them (saying): "Did I not forbid you that tree and tell you: Verily, Shaitân (Satan) is an open enemy unto you?"