மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
ذَٰلِكَ أَن لَّمْ يَكُن رَّبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا غَـٰفِلُونَ
(நபியே!) இவ்வாறு நபிமார்களை அனுப்புவ)து எவ்வூராரையும் அவர்கள் பாராமுகமானவர்களாக இருக்கும் சமயத்தில் (அவர்களுக்கு எச்சரிக்கை செய்யாமல்) அநியாயமாக அவர்களை அழிப்பவனாக உமதிரட்சகன் இருக்கவில்லை என்பதால்தான்.
This is because your Lord would not destroy the (populations of) towns for their wrong-doing (i.e. associating others in worship along with Allâh) while their people were unaware (so the Messengers were sent).
وَلِكُلٍّ دَرَجَـٰتٌ مِّمَّا عَمِلُوا۟ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ
(நபியே!) அவர்கள்) ஒவ்வொருவருக்கும், அவர்களின் செயல்களுக்குத் தக்க பதில்களும் உண்டு, அவர்கள் செயல்களைப்பற்றி உம்முடைய இரட்சகன் பாராமுகமானவனாகவும் இல்லை.
For all there will be degrees (or ranks) according to what they did. And your Lord is not unaware of what they do.
وَرَبُّكَ ٱلْغَنِىُّ ذُو ٱلرَّحْمَةِ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنۢ بَعْدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ ءَاخَرِينَ
மேலும், (நபியே!) உமதிரட்சகன் (படைப்புகளைவிட்டும்) தேவையற்றவன், நிகரற்ற அருளுடையவன், (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களை அவன் போக்கிவிடுவான், மேலும், வேறு சமூகத்தவர்களின் சந்ததியிலிருந்து உங்களை அவன் உற்பத்தி செய்தது போன்று தான் நாடியவரை (உங்களுடைய இடத்தில்) உங்களுக்குப் பிறகு அவன் பகரமாக்கி விடுவான்.
And your Lord is Rich (Free of all needs), full of Mercy; if He wills, He can destroy you, and in your place make whom He wills as your successors, as He raised you from the seed of other people.
إِنَّ مَا تُوعَدُونَ لَـَٔاتٍ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவது (-மறுமை நாளானது) உறுதியாக வந்தே தீரும், நீங்கள் (அதைத்தடுத்து) அல்லாஹ்வை இயலாமையிலாக்கி (மிகைத்து) விடக்கூடியவர்களும் அல்லர்.
Surely, that which you are promised will verily come to pass, and you cannot escape (from the punishment of Allâh).
قُلْ يَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَامِلٌ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَـٰقِبَةُ ٱلدَّارِ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ
(நபியே!) அவர்களிடம்) நீர் கூறுவீராக! என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழி வகையின்படி (உங்கள்) காரியங்களைச் செய்து கொண்டே இருங்கள், நிச்சயமாக நானும் (என் வழி வகையின்படி என் காரியங்களைச்) செய்து கொண்டிருப்பேன், இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாயிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
Say (O Muhammad صلى الله عليه وسلم): "O my people! Work according to your way, surely, I too am working (in my way), and you will come to know for which of us will be the (happy) end in the Hereafter. Certainly the Zâlimûn (polytheists and wrong-doers) will not be successful."
وَجَعَلُوا۟ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلْحَرْثِ وَٱلْأَنْعَـٰمِ نَصِيبًا فَقَالُوا۟ هَـٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَـٰذَا لِشُرَكَآئِنَا ۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمْ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِ ۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمْ ۗ سَآءَ مَا يَحْكُمُونَ
மேலும், விளைச்சல் இன்னும் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள் ஆகியவற்றில் அவன் உற்பத்தி செய்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை அல்லாஹ்வுக்கென ஆக்கிவிட்டுப் பிறகு அவர்கள் எண்ணப்படி இது அல்லாஹ்விற்குரியது (என்றும், மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய இணையாளர்களுக்குரியது என்றும் கூறுகிறார்கள், அவர்களின் இணையாளர்களுக்கு என இருந்த (பாகத்திலிருந்து) எதுவும் அல்லாஹ்வின்பால் சேருவதில்லை, அல்லாஹ்வுக்காக உரிய (பங்கான)து தங்களது இணையாளர்கள்பால் சேரும் என்ற அவர்கள் (வணக்க வழிபாடுகளை இவ்வாறு அல்லாஹ்விற்கும் அவனுடன் மற்றவர்களுக்கும் கூட்டாக்கிக் கூறிவந்த) தீர்ப்பு கெட்டது.
And they assign to Allâh a share of the tilth and cattle which He has created, and they say: "This is for Allâh according to their claim, and this is for our (Allâh’s so-called) partners." But the share of their (Allâh’s so-called) "partners" reaches not Allâh, while the share of Allâh reaches their (Allâh’s so-called) "partners"! Evil is the way they judge!
وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ ٱلْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَـٰدِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا۟ عَلَيْهِمْ دِينَهُمْ ۖ وَلَوْ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
(விளைச்சல் மற்றும் கால்நடைகளிலிருந்து, ஒரு பாகத்தை தங்களது இணையாளர்களான ஷைத்தான்கள் ஆக்கிவிடுவதை அழகாகக் காட்டியது போன்ற) அவ்வாறே இணைவைப்போரில் அதிகமானவர்களுக்கு அவர்களின் குழந்தைகளைக் கொன்று விடுவதை அவர்களின் இணையாளர்(களான ஷைத்தான்)கள், அவர்களை அழித்து விடுவதற்காகவும், அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்பிவிடுவதற்காகவும் அழகாக்கி வைத்துள்ளனர், இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள், ஆகவே, (நபியே) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டுவிடுவீராக!
And so to many of the Mushrikûn (polytheists - see V.2:105) their (Allâh’s so-called) "partners" have made fair-seeming the killing of their children, in order to lead them to their own destruction and cause confusion in their religion. And if Allâh had willed, they would not have done so. So leave them alone with their fabrications.