10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Mushaf · Page 126

/ 604
Page 126

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

5. Al-Ma'idahسورة المائدة

5:109

۞ يَوْمَ يَجْمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ ۖ قَالُوا۟ لَا عِلْمَ لَنَآ ۖ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ

“அல்லாஹ் (தன்)தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில் (நீங்கள் எனது தூதை மக்களுக்கு எடுத்துரைத்த சமயத்தில்) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான், (அதற்கவர்கள் அதுபற்றி) “எங்களுக்கு எவ்வித அறிவுமில்லை, நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.

On the Day when Allâh will gather the Messengers together and say to them: "What was the response you received (from men to your teaching)?" They will say: "We have no knowledge, verily, only You are the All-Knower of all that is hidden (or unseen)."

5:110

إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

“மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும், உம் தாய்மீதும் (நான் புரிந்து) உள்ள என்னுடைய அருளை நீர் நினைவுகூர்வீராக!” பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு, உம்மை நான் பலப்படுத்திய பொழுது நீர் தொட்டிலிலும், பக்குவ வயதிலும் (மனிதர்களிடத்தில்) பேசினீரென்பதையும் (நினைவு கூர்வீராக!) மேலும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்ததையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்றுக்கொடுத்ததையும், நினைவுகூர்வீராக!) இன்னும், நீர் என் உத்தரவைக் கொண்டு, களிமண்ணால் பறவையின் உருவத்தைப்போல் செய்து, அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் உத்தரவு கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உத்தரவைக்கொண்டு நீர் சுகப்படுத்தியதையும் (நினைவு கூர்வீராக!) நீர் என் உத்தரவைக் கொண்டு இறந்தோரை(க் கல்லரையிலிருந்து உயிர்ப்பித்து) நீர் வெளியேற்றியதையும் (நினைவு கூர்வீராக!) இன்னும், இஸ்ராயீலின் மக்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள், “நிச்சயமாக இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று கூறிய சமயத்தில், அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மைத் தடுத்துக் கொண்டதையும் நினைவுகூர்வீராக! என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக!)

(Remember) when Allâh will say (on the Day of Resurrection). "O ‘Îsâ (Jesus), son of Maryam (Mary)! Remember My Favour to you and to your mother when I supported you with Rûh-ul-Qudus [Jibrîl (Gabriel)] so that you spoke to the people in the cradle1 and in maturity; and when I taught you writing, Al-Hikmah (the power of understanding), the Taurât (Torah) and the Injeel (Gospel); and when you made out of the clay a figure like that of a bird, by My Permission, and you breathed into it, and it became a bird by My Permission, and you healed those born blind, and the lepers by My Permission, and when you brought forth the dead by My Permission; and when I restrained the Children of Israel from you (when they resolved to kill you) as you came unto them with clear proofs, and the disbelievers among them said: ‘This is nothing but evident magic.’"

  1. See the footnote (V.3:46).

5:111

وَإِذْ أَوْحَيْتُ إِلَى ٱلْحَوَارِيِّـۧنَ أَنْ ءَامِنُوا۟ بِى وَبِرَسُولِى قَالُوٓا۟ ءَامَنَّا وَٱشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ

“அன்றியும் என்னையும் என்னுடைய தூதரையும் விசுவாசியுங்கள் என (உமது) சீடர்களுக்கு, நான் அறிவித்த சமயத்தில், (அவ்வாறே) “நாங்கள் விசுவாசித்தோம், நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதற்கு நீரே சாட்சியாகவும் இருப்பீராக!” என்று அவர்கள் கூறினார்கள் (என்பதையும் நினைவுகூர்வீராக! என்றும் அந்நாளில் கூறுவான்).

And when I (Allâh) revealed to Al-Hawâriyyûn (the disciples) [of ‘Îsâ (Jesus)] to believe in Me and My Messenger, they said: "We believe. And bear witness that we are Muslims."

5:112

إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

(தவிர, நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக!) அச்சீடர்கள் (ஈஸாவிடம்,) மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்முடைய இரட்சகன் வானத்திலிருந்து எங்களுக்காக (உணவுப் பொருள்கள் நிறைந்த) ஒரு மரவையை இறக்கி வைக்க ஆற்றல் பெறுவானா?” என்று கேட்டபோது (ஈஸா, அவர்களிடம்) “நீங்கள் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், என்று அவர் கூறினார்.

(Remember) when Al-Hawâriyyûn (the disciples) said: "O ‘Îsâ (Jesus), son of Maryam (Mary)! Can your Lord send down to us a table spread (with food) from heaven?" ‘Îsâ (Jesus) said: "Fear Allâh, if you are indeed believers."

5:113

قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّـٰهِدِينَ

அ(தற்க)வர்கள் அதிலிருந்து நாங்கள் உண்பதையும், எங்கள் இதயங்கள் திருப்தியடைவதையும், இன்னும், நீர் (உம்முடைய தூதைப்பற்றி) திட்டமாக எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொள்வதையும், அதற்கு நாங்கள் சாட்சியாளர்களாக ஆகிவிடுவதையுமே நாடுகின்றோம்” என்று கூறினார்கள்.

They said: "We wish to eat thereof and to satisfy our hearts (to be stronger in Faith), and to know that you have indeed told us the truth and that we ourselves be its witnesses."