8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Ma'idah 5:110

Mushaf
5:110

إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

“மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும், உம் தாய்மீதும் (நான் புரிந்து) உள்ள என்னுடைய அருளை நீர் நினைவுகூர்வீராக!” பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு, உம்மை நான் பலப்படுத்திய பொழுது நீர் தொட்டிலிலும், பக்குவ வயதிலும் (மனிதர்களிடத்தில்) பேசினீரென்பதையும் (நினைவு கூர்வீராக!) மேலும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்ததையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்றுக்கொடுத்ததையும், நினைவுகூர்வீராக!) இன்னும், நீர் என் உத்தரவைக் கொண்டு, களிமண்ணால் பறவையின் உருவத்தைப்போல் செய்து, அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் உத்தரவு கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உத்தரவைக்கொண்டு நீர் சுகப்படுத்தியதையும் (நினைவு கூர்வீராக!) நீர் என் உத்தரவைக் கொண்டு இறந்தோரை(க் கல்லரையிலிருந்து உயிர்ப்பித்து) நீர் வெளியேற்றியதையும் (நினைவு கூர்வீராக!) இன்னும், இஸ்ராயீலின் மக்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள், “நிச்சயமாக இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று கூறிய சமயத்தில், அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மைத் தடுத்துக் கொண்டதையும் நினைவுகூர்வீராக! என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக!)

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

(Remember) when Allâh will say (on the Day of Resurrection). "O ‘Îsâ (Jesus), son of Maryam (Mary)! Remember My Favour to you and to your mother when I supported you with Rûh-ul-Qudus [Jibrîl (Gabriel)] so that you spoke to the people in the cradle1 and in maturity; and when I taught you writing, Al-Hikmah (the power of understanding), the Taurât (Torah) and the Injeel (Gospel); and when you made out of the clay a figure like that of a bird, by My Permission, and you breathed into it, and it became a bird by My Permission, and you healed those born blind, and the lepers by My Permission, and when you brought forth the dead by My Permission; and when I restrained the Children of Israel from you (when they resolved to kill you) as you came unto them with clear proofs, and the disbelievers among them said: ‘This is nothing but evident magic.’"

  1. See the footnote (V.3:46).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 5. Al-Ma'idah →