8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 114

/ 604
Page 114

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

5. Al-Ma'idahسورة المائدة

5:37

يُرِيدُونَ أَن يَخْرُجُوا۟ مِنَ ٱلنَّارِ وَمَا هُم بِخَـٰرِجِينَ مِنْهَا ۖ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ

அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறிவிட நாடுவார்கள், (ஆனால்) அதைவிட்டு அவர்கள் வெளியேறுகிறவர்களாகவுமில்லை, மேலும் அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

They will long to get out of the Fire, but never will they get out therefrom; and theirs will be a lasting torment.

5:38

وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقْطَعُوٓا۟ أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَـٰلًا مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள், மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.

And (as for) the male thief and the female thief, cut off (from the wrist joint) their (right) hands as a recompense for that which they committed, a punishment by way of example from Allâh. And Allâh is All-Powerful, All-Wise.

5:39

فَمَن تَابَ مِنۢ بَعْدِ ظُلْمِهِۦ وَأَصْلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

ஆகவே, எவர், தம்முடைய அநீதத்திற்குப் பின்னர் பச்சாதாபப்பட்டு, (தன்னைச்) சீர் திருத்தியும் கொண்டாரோ, அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய தவ்பாவை அங்கீகரிக்கின்றான், (காரணம்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவன்.

But whosoever repents after his crime and does righteous good deeds (by obeying Allâh), then verily, Allâh will pardon him (accept his repentance). Verily, Allâh is Oft-Forgiving, Most Merciful.

5:40

أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَغْفِرُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் - அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? (ஆகவே) அவன் நாடியவர்களை வேதனை செய்வான், அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பும் அளிப்பான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

Know you not that to Allâh (Alone) belongs the dominion of the heavens and the earth! He punishes whom He wills and He forgives whom He wills. And Allâh is Able to do all things.

5:41

۞ يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ لَا يَحْزُنكَ ٱلَّذِينَ يُسَـٰرِعُونَ فِى ٱلْكُفْرِ مِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ ءَامَنَّا بِأَفْوَٰهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ ٱلَّذِينَ هَادُوا۟ ۛ سَمَّـٰعُونَ لِلْكَذِبِ سَمَّـٰعُونَ لِقَوْمٍ ءَاخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ مِنۢ بَعْدِ مَوَاضِعِهِۦ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَـٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَٱحْذَرُوا۟ ۚ وَمَن يُرِدِ ٱللَّهُ فِتْنَتَهُۥ فَلَن تَمْلِكَ لَهُۥ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَمْ يُرِدِ ٱللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ ۖ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

(நம்முடைய தூதரே) அவர்களது இதயங்கள் விசுவாசங் கொள்ளாதிருக்க தங்களது வாய்களால் விசுவாசங்கொண்டோம் என்று கூறியோர்களிலிருந்தும், இன்னும் யூதர்களாகி விட்டவர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து சென்று கொண்டிருப்போர்கள் உமக்குக் கவலையைத்தர வேண்டாம், (அத்தகையோர்) பொய்யானவற்றையே (ஆவலோடு அதிகமாகக் கேட்கின்றார்கள், (இதுவரையில்) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கு இவைகளை அறிவிப்பதற்காகவும் அதிகமாக (செவிகொடுத்து)க் கேட்கின்றவர்கள், அவர்கள் (வேத) வசனங்களை, அவற்றின் உரிய இடங்களிலிருந்து மாற்றி (விட்டு இவர்களிடம்) “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன)துகொடுக்கப்பட்டால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், அது உங்களுக்குக் கொடுக்கப்படாவிடில், (அதிலிருந்து விலகி) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” என்று கூறுகின்றனர், மேலும், அல்லாஹ் எவருடைய வழிகேட்டை நாடுகிறானோ அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் சக்திபெறமாட்டீர், இத்தகையோர்தான் - அவர்களின் இதயங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் நாடவில்லை, இவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் இவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.

O Messenger (Muhammad صلى الله عليه وسلم)! Let not those who hurry to fall into disbelief grieve you, of such who say: "We believe" with their mouths but their hearts have no faith. And of the Jews are men who listen much and eagerly to lies - listen to others who have not come to you. They change the words from their places; they say, "If you are given this, take it, but if you are not given this, then beware!" And whomsoever Allâh wants to put in Al-Fitnah [error, because of his rejecting of Faith], you can do nothing for him against Allâh. Those are the ones whose hearts Allâh does not want to purify (from disbelief and hypocrisy); for them there is a disgrace in this world, and in the Hereafter a great torment.