மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
هَلْ أَتَىٰ عَلَى ٱلْإِنسَـٰنِ حِينٌ مِّنَ ٱلدَّهْرِ لَمْ يَكُن شَيْـًٔا مَّذْكُورًا
மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்துவிட்டது, (அதில் இன்னதென்று கூறப்படும் ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை.
Has there not been over man a period of time, when he was not a thing worth mentioning?
إِنَّا خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَـٰهُ سَمِيعًۢا بَصِيرًا
நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு நாடிய)வர்களாக அவனை படைத்தோம், எனவே, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்.
Verily, We have created man from Nutfah (drops) of mixed semen (sexual discharge of man and woman), in order to try him: so We made him hearer and seer.
إِنَّا هَدَيْنَـٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
நிச்சயமாக நாம் அவனுக்கு (நல்லது தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம்; (அதைப் பின்பற்றி)அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதைப் பின்பற்றாது நன்றியற்ற (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.
Verily, We showed him the way, whether he be grateful or ungrateful.
إِنَّآ أَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ سَلَـٰسِلَا۟ وَأَغْلَـٰلًا وَسَعِيرًا
நிராகரிப்போர்க்கு சங்கிலிகளையும், விலங்குகளையும் (ஜுவாலை விட்டு எரியும்) நரகத்தையும், நிச்சயமாக நாம் தயார்செய்து வைத்திருக்கின்றோம்.
Verily, We have prepared for the disbelievers iron chains, iron collars, and a blazing Fire.
إِنَّ ٱلْأَبْرَارَ يَشْرَبُونَ مِن كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا
நிச்சயமாக நல்லோர்கள், குவளையில் (பானத்தை) அருந்துவார்கள், அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.
Verily,, the Abrâr (the pious believers of Islamic Monotheism), shall drink of a cup (of wine) mixed with (water from a spring in Paradise called) Kâfûr
عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا
(இவ்வாறு கலக்கப்பட்ட அது) ஒரு ஊற்றாகும், அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள், அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
A spring wherefrom the slaves of Allâh will drink, causing it to gush forth abundantly.
يُوفُونَ بِٱلنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُۥ مُسْتَطِيرًا
இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒருநாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.
They (are those who) fulfil (their) vows, and they fear a Day whose evil will be wide-spreading.
وَيُطْعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
மேலும், அல்லாஹ்வாகிய அவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
And they give food, inspite of their love for it (or for the love of Him), to the Miskîn1 (the poor), the orphan, and the captive
See the footnote of (V.2:83).
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَآءً وَلَا شُكُورًا
(உணவை உண்போரிடம்) “உங்களுக்காக நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை” என்றும்,
(Saying): "We feed you seeking Allâh’s Countenance only. We wish for no reward, nor thanks from you.
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
“(அந்நாளின் அமளியினால் முகங்கள்) மிக்க கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒருநாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்” (என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.)
"Verily, We fear from our Lord a Day, hard and distressful, that will make the faces look horrible (from extreme dislike to it)."
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ نَضْرَةً وَسُرُورًا
ஆகவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகமலர்ச்சியையும் (அவர்களின் இதயங்களில்) மகிழ்வையும் கொடுத்தான்.
So Allâh saved them from the evil of that Day, and gave them Nadrah (a light of beauty) and joy.
وَجَزَىٰهُم بِمَا صَبَرُوا۟ جَنَّةً وَحَرِيرًا
அன்றியும், அவர்கள் (இம்மையில் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும்) அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் நற்கூலியாக வழங்குகிறான்.
And their recompense shall be Paradise, and silken garments, because they were patient.
مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلْأَرَآئِكِ ۖ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا
(அவர்கள்) அச்சுவனத்தில்) ஆசனங்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அதில் சூரிய வெப்பத்தினையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்.
Reclining therein on raised thrones, they will see there neither the excessive heat of the sun, nor the excessive bitter cold, (as in Paradise there is no sun and no moon).
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَـٰلُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا
அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும், அதன் கனிகள் (அவர்கள் பறிப்பதற்கேற்றவாறு) தாழ்வாக்கப்பட்டுள்ளது.
And the shade thereof is close upon them, and the bunches of fruit thereof will hang low within their reach.
وَيُطَافُ عَلَيْهِم بِـَٔانِيَةٍ مِّن فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَا۠
மேலும், வெள்ளியிலான பாத்திரங்களையும், பளிங்கினாலானக் கிண்ணங்களையும் கொண்டு (சிறார்களால்) அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
And amongst them will be passed round vessels of silver and cups of crystal -
قَوَارِيرَا۟ مِن فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا
வெள்ளியிலான கிண்ணங்கள், அவற்றை (தாகம் தீர்க்கும் அளவிற்குத் தக்கவாறு) அளவை (வழங்கக்கூடிய) அவர்கள் நிர்ணயிப்பர்.
Crystal-clear, made of silver. They will determine the measure thereof (according to their wishes).
وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا
இன்னும், அதில் அவர்கள் குவளையில் (மதுபானத்தைப்) புகட்டப்படுவார்கள், அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.
And they will be given to drink there of a cup (of wine) mixed with Zanjabîl (ginger),
عَيْنًا فِيهَا تُسَمَّىٰ سَلْسَبِيلًا
அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து (அதனைப்) புகட்டப்படுவார்கள் – அதற்கு ஸல்ஸபீல் (மிக மதுரமான நீர்) என்று கூறப்படும்.
A spring there, called Salsabîl.
۞ وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا
மேலும், என்றுமே (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; (நபியே!) அவர்களை நீர் காணுவீரானால் பரத்தப்பட்ட முத்துக்களென அவர்களை எண்ணுவீர்.
And round about them will (serve) boys of everlasting youth. If you see them, you would think them scattered pearls.
وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا
இன்னும், அங்கு நீர் பார்த்தால், (அவற்றின்) அருட்கொடைகளையும் பெரிய அரசாட்சியையும் நீர் காண்பீர்.
And when you look there (in Paradise), you will see a delight (that cannot be imagined), and a great dominion.
عَـٰلِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ ۖ وَحُلُّوٓا۟ أَسَاوِرَ مِن فِضَّةٍ وَسَقَىٰهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا
அவர்கள் (தேகத்தின்) மேல் மென்மையான மற்றும் கனமான பச்சைப் பட்டாடைகள் இருக்கும், இன்னும், அவர்கள் வெள்ளியினால் (ஆகிய) கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களின் இரட்சகன் பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களுக்குப் புகட்டுவான்; (மேலும் அவர்களிடம்),
Their garments will be of fine green silk, and gold embroidery. They will be adorned with bracelets of silver, and their Lord will give them a pure drink.
إِنَّ هَـٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَكَانَ سَعْيُكُم مَّشْكُورًا
“நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு) விட்டது” என்று கூறுவான்.
(And it will be said to them): "Verily, this is a reward for you, and your endeavour has been accepted."
إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ ٱلْقُرْءَانَ تَنزِيلًا
(நபியே!) நிச்சயமாக நாம்தாம் இந்தக் குர் ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைத்தோம்.
Verily, it is We Who have sent down the Qur’ân to you (O Muhammad صلى الله عليه وسلم) by stages.
فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ ءَاثِمًا أَوْ كَفُورًا
ஆகவே, நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! அவர்களிலுள்ள (யாதொரு) பாவிக்கோ, அல்லது நன்றி கெட்டவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்.
Therefore be patient (O Muhammad صلى الله عليه وسلم) with constancy to the Command of your Lord (Allâh, by doing your duty to Him and by conveying His Message to mankind), and obey neither a sinner nor a disbeliever among them.
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ بُكْرَةً وَأَصِيلًا
மேலும், காலையிலும், மாலையிலும் உமதிரட்சகனின் (சங்கையான) பெயரை நினைவு கூர்வீராக!
And remember the Name of your Lord every morning and afternoon [i.e. offering of the Morning (Fajr), Zuhr, and ‘Asr prayers].
وَمِنَ ٱلَّيْلِ فَٱسْجُدْ لَهُۥ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا
இன்னும், இரவில் அவனுக்கு (ஸுஜூது செய்து) சிரம் பணிவீராக! இரவில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டுமிருப்பீராக!
And during night, prostrate yourself to Him (i.e. the offering of Maghrib and ‘Ishâ’ prayers), and glorify Him a long night through (i.e. Tahajjud prayer).
إِنَّ هَـٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيلًا
நிச்சயமாக இவர்கள் விரைவாகச் செல்லக்கூடிய (இம்மையான)தை விரும்புகின்றனர்; மேலும் கடினமான (மறுமை)நாளை அவர்களுக்குப் பின்னால் (புறக்கணித்து)விட்டு விடுகின்றனர்.
Verily, these (disbelievers) love the present life of this world, and put behind them a heavy Day (that will be hard).
نَّحْنُ خَلَقْنَـٰهُمْ وَشَدَدْنَآ أَسْرَهُمْ ۖ وَإِذَا شِئْنَا بَدَّلْنَآ أَمْثَـٰلَهُمْ تَبْدِيلًا
நாம்தாம் அவர்களைப் படைத்தோம், நாமே அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; மேலும், நாம் நாடினால், அவர்களைப் போன்ற (மற்ற)வர்களை அவர்களுக்குப் பகரமாக மாற்றி விடுவோம்.
It is We Who created them, and We have made them of strong built. And when We will, We can replace them with others like them with a complete replacement.
إِنَّ هَـٰذِهِۦ تَذْكِرَةٌ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; ஆகவே யார் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகன் பக்கம் செல்லும் வழியை எடுத்துக்கொள்வாராக!
Verily, this (Verse of the Qur’ân) is an admonition, so whosoever wills, let him take a Path to his Lord (Allâh).
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்களனைவரையும்பற்றி) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
But you cannot will, unless Allâh wills. Verily, Allâh is Ever All-Knowing, All-Wise.
يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّـٰلِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًۢا
(ஆகவே, உங்களில்) அவன் நாடியவரை தன் அருளில் நுழைவிக்கிறான்; இன்னும், அநியாயக்காரர்கள் - அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
He will admit to His Mercy whom He wills and as for the Zâlimûn - (polytheists, wrong-doers) He has prepared a painful torment.