8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-A'raf 7:169

Mushaf
7:169

فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا۟ ٱلْكِتَـٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَـٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَـٰقُ ٱلْكِتَـٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ

அவர்களுக்குப் பின்னர், அவர்களுடைய இடத்தை தீய ஒரு சாரார் அடைந்தனர், அவர்கள், (தவ்றாத்) வேதத்திற்கு அனந்தரக்காரர்களாக ஆனார்கள், இவ்வற்ப (உலகின்)பொருளைப் பெற்றுக்கொண்டு வேதத்தை மாற்றி விட்டனர், (இதைப்பற்றி) “எங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள், (பின்னும் முன்போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப்பொருள் அவர்களிடம் வருமானால், அதனை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாதென்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் ஓதியும் வருகின்றனர், (எனினும்) அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) மேலும் பயபக்தியுடையவர்களுக்கு, மறுமையின் வீடே மிக்க மேலானதாகும், நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?”

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Then after them succeeded an (evil) generation, which inherited the Book, but they chose (for themselves) the goods of this low life (evil pleasures of this world) saying (as an excuse): "(Everything) will be forgiven to us." And if (again) the offer of the like (evil pleasures of this world) came their way, they would (again) seize them (would commit those sins). Was not the covenant of the Book taken from them that they would not say about Allâh anything but the truth? And they have studied what is in it (the Book). And the home of the Hereafter is better for those who are Al-Muttaqûn (the pious - See V.2:2). Do not you then understand?

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →