ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
பின்னர், மிக நிறைவான அவன் கூலி கொடுக்கப்படுவான்.
Then he will be recompensed with a full and the best recompense.1
See the footnote (A) of (V.6:61).
9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026
The Star · அன்-நஜ்ம்
Makki62 versesJuz 27
النجم
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
பின்னர், மிக நிறைவான அவன் கூலி கொடுக்கப்படுவான்.
Then he will be recompensed with a full and the best recompense.1
See the footnote (A) of (V.6:61).
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
(நபியே!) இறுதியாக மீள்வதும் நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கம்தான்.
And that to your Lord (Allâh) is the End (Return of everything).
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
நிச்சயமாக அவனே சிரிக்கவைக்கிறான், அழவும் வைக்கிறான்.
And that it is He (Allâh) Who makes (whom He wills) laugh, and makes (whom He wills) weep.
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
நிச்சயமாக அவன்தான் (உங்களை) மரணிக்கச் செய்கிறான் இன்னும், அவன் உயிர்ப்பிக்கின்றான்.
And that it is He (Allâh) Who causes death and gives life.
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
நிச்சயமாக அவன்தான் (உங்களை) ஆண், பெண் ஜோடிகளாக படைக்கின்றான்.
And that He (Allâh) creates the pairs, male and female,
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அது (கர்ப்பத்தில்) ஊற்றப்படும்போது (உங்களை படைக்கின்றான்).
From Nutfah (drops of semen - male and female discharges) when it is emitted.
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
நிச்சயமாக (மரணித்த பின்னர்) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே (பொறுப்பாக) இருக்கிறது.
And that upon Him (Allâh) is another bringing forth (Resurrection).
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
நிச்சயமாக அவன்தான் சீமானாக்குகிறான், இன்னும் (அவன் கொடுத்ததைக் கொண்டு) பொருத்திக் கொள்ளச் செய்கிறான்.
And that it is He (Allâh) Who gives much or a little (of wealth and contentment)
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
அன்றியும் நிச்சயமாக (மகத்தான நட்சத்திரமான) ஷிஃரா உடைய இரட்சகனும் அவன் தான்.
And that He (Allâh) is the Lord of Sirius (the star which the pagan Arabs used to worship).
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
நிச்சயமாக முந்தைய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
And that it is He (Allâh) Who destroyed the former ‘Âd (people),
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
இன்னும், ஸமூதையும் (அழித்தான், அவர்களில் ஒருவரையும்) அவன் விட்டு வைக்கவில்லை.
And Thamûd (people): He spared none of them.
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
(இவர்களுக்கு) முன்னர் நூஹ்வுடைய சமூகத்தாரையும், (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக, அவர்கள் தாம் பெரும் அநியாயக்காரர்களாக, மற்றும் மிகுந்த வரம்பு மீறியவர்களாக இருந்தார்கள்.
And the people of Nûh (Noah) aforetime. Verily, they were more unjust and more rebellious and transgressing [in disobeying Allâh and His Messenger Nûh (Noah) عليه السلام].
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
தலைகீழாக புரட்டப்பட்ட (லூத்தின் சமூகத்தார் வாழ்ந்த இடத்)தையும் அவன் (மேலாகத் தூக்கிக்) கீழே வீழ்த்தினான்.
And He destroyed the overthrown cities [of Sodom to which Prophet Lût (Lot) was sent].
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அதனைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து (முற்றிலும்) சூழ்ந்து கொண்டது.
So there covered them that which did cover (i.e. torment with stones).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
(ஆகவே, மறுமையை நிராகரிக்கும் மனிதனே) நீ உன் இரட்சகனின் அருட்கொடைகளில் எதனைத்தான் ஐயம் கொள்வாய்?
Then which of the Graces of your Lord (O man!) will you doubt?
هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
இவர் முந்தைய எச்சரிக்கயாளர்களி(ன் இனத்தி)லுள்ள ஓர் எச்சரிக்கையாளரே.
This (Muhammad صلى الله عليه وسلم) is a warner (Messenger) of the (series of) warners (Messengers) of old.1
See the footnote of (V.2: 252).
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ
நெருங்ககூடியது (-யுக முடிவு காலம்) நெருங்கிவிட்டது.
The Day of Resurrection draws near.
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
அல்லாஹ்வைத் தவிர அதனை வெளிப்படுத்தக்கூடியது எதுவும் இல்லை.
None besides Allâh can avert it (or advance it or delay it).
أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
இச்செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா?
Do you then wonder at this recitation (the Qur’ân)?
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
(இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கவும் செய்கின்றீர்கள்! நீங்கள் அழாமலுமிருக்கின்றீர்கள்!
And you laugh at it and weep not,
وَأَنتُمْ سَـٰمِدُونَ
(இதனைப்பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள்.
Wasting your (precious) lifetime in pastime and amusements (singing, etc.).
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம்பணியுங்கள், மேலும் (அவனேயே) வணங்குங்கள்.
So fall you down in prostration to Allâh and worship Him (Alone).