9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

40. Ghafir

The Forgiver / The Believer · ஃகாஃபிர்

Makki85 versesJuz 24

غافر

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

40:41

۞ وَيَـٰقَوْمِ مَا لِىٓ أَدْعُوكُمْ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدْعُونَنِىٓ إِلَى ٱلنَّارِ

இன்னும், “என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நானோ, உங்களை ஈடேற்றத்தின் பால் அழைக்கின்றேன், நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள்,

"And O my people! How is it that I call you to salvation while you call me to the Fire!

40:42

تَدْعُونَنِى لِأَكْفُرَ بِٱللَّهِ وَأُشْرِكَ بِهِۦ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌ وَأَنَا۠ أَدْعُوكُمْ إِلَى ٱلْعَزِيزِ ٱلْغَفَّـٰرِ

“நான் அல்லாஹ்வை நிராகரிக்கவும், எதைப்பற்றி எனக்கு அறிவில்லையோ அதை அவனுக்கு நான் இணையாக்கவும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள், நானோ, (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவனின் பக்கம் உங்களை அழைக்கிறேன்.

"You invite me to disbelieve in Allâh (and in His Oneness), and to join partners in worship with Him of which I have no knowledge; and I invite you to the All-Mighty, the Oft-Forgiving!

40:43

لَا جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِىٓ إِلَيْهِ لَيْسَ لَهُۥ دَعْوَةٌ فِى ٱلدُّنْيَا وَلَا فِى ٱلْـَٔاخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلْمُسْرِفِينَ هُمْ أَصْحَـٰبُ ٱلنَّارِ

“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது இம்மையிலும், மறுமையிலும் (நாயனென்று) அழைப்பதற்கு நிச்சயமாக, ஒரு, சிறிதும் தகுதியற்றது நம்முடைய திரும்புமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும், இன்னும் நிச்சயமாக வரம்பு மீறுவோர் நரகவாசிகள் தாம் என்பதில் சந்தேகமில்லை.

"No doubt you call me to (worship) one who cannot grant (me) my request (or respond to my invocation) in this world or in the Hereafter. And our return will be to Allâh, and Al-Musrifûn (i.e. polytheists and arrogants, those who commit great sins, the transgressors of Allâh’s set limits): they shall be the dwellers of the Fire!

40:44

فَسَتَذْكُرُونَ مَآ أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِىٓ إِلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ

“நான் உங்களுக்குக் கூறுவதை நிச்சயமாக நீங்கள் நினைவு கூர்வீர்கள், மேலும் என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் நான் ஒப்படைக்கின்றேன், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்றும் கூறினார்).

"And you will remember what I am telling you, and my affair I leave it to Allâh. Verily, Allâh is the All-Seer of (His) slaves."

40:45

فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُوا۟ ۖ وَحَاقَ بِـَٔالِ فِرْعَوْنَ سُوٓءُ ٱلْعَذَابِ

ஆகவே, அவர்கள் சூழ்ச்சி செய்ததின் தீமைகளை விட்டும் (ஈமானை மறைத்துக்கொண்டிருந்த) அவரை அல்லாஹ் பாதுகாத்துக்கொண்டான், மேலும் ஃபிர் அவ்னைச் சார்ந்தோரை தீயவேதனை சூழ்ந்து கொண்டது.

So Allâh saved him from the evils that they plotted (against him), while an evil torment encompassed Fir‘aun’s (Pharaoh) people.

40:46

ٱلنَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدْخِلُوٓا۟ ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ ٱلْعَذَابِ

அந்(நரக)நெருப்பு-அதன் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள், மேலும் மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில், “ஃபிர் அவ்னைச் சார்ந்தோரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என மலக்குகளுக்குக் கூறப்படும்).

The Fire, they are exposed to it, morning and afternoon. And on the Day when the Hour will be established (it will be said to the angels): "Cause Fir‘aun’s (Pharaoh) people to enter the severest torment!"

40:47

وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًا مِّنَ ٱلنَّارِ

மேலும், (நரகவாசிகளாகிய) அவர்கள் நரகத்தில் தர்க்கம் செய்துகொள்ளும் சமயத்தில், அப்போது (அவர்களிலுள்ள) பலவீனமானவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றுவோராக இருந்தோம், ஆகவே, (இன்று) நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு பகுதியையேனும் எங்களை விட்டும் நீங்கள் தடுத்துவிடக்கூடியவர்களா?” என்று கேட்பர்.

And, when they will dispute in the Fire, the weak will say to those who were arrogant: "Verily, we followed you: can you then take from us some portion of the Fire?"

40:48

قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُلٌّ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ ٱلْعِبَادِ

(அதற்கு அவர்களுடைய தலைவர்களான) பெருமையடித்துக் கொண்டிருந்தோர் “நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் இதில்தான் இருக்கிறோம், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கிடையே திட்டமாக தீர்ப்பளித்துவிட்டான்” என்று கூறுவர்.

Those who were arrogant will say: "We are all (together) in this (Fire)! Verily, Allâh has judged between (His) slaves!"

40:49

وَقَالَ ٱلَّذِينَ فِى ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدْعُوا۟ رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ ٱلْعَذَابِ

இன்னும், நரகத்திலுள்ளவர்கள்; நரகக்காவலர்களிடம், “உங்கள் இரட்சகனிடம் (எங்களுக்காக) நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள், வேதனையே ஒரு நாளேனும் எங்களுக்கு அவன் இலேசாக்குவான்” என்று கூறுவார்கள்.

And those in the Fire will say to the keepers (angels) of Hell: "Call upon your Lord to lighten for us the torment for a day!"

40:50

قَالُوٓا۟ أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِٱلْبَيِّنَـٰتِ ۖ قَالُوا۟ بَلَىٰ ۚ قَالُوا۟ فَٱدْعُوا۟ ۗ وَمَا دُعَـٰٓؤُا۟ ٱلْكَـٰفِرِينَ إِلَّا فِى ضَلَـٰلٍ

அ(தற்க)வர்கள் (இவர்களிடம் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) “உங்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம்,!” என்று கூறுவார்கள், அ(தற்க)வர்கள், “அவ்வாறாயின் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்க மாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவார்கள், மேலும், நிராகரிப்போரின் பிரார்த்தனை வழிகேட்டிலேயே தவிர இல்லை.

They will say: "Did there not come to you, your Messengers with (clear) evidence (and signs)?" They will say: "Yes." They will reply: "Then call (as you like)! And the invocation of the disbelievers is nothing but in vain (as it will not be answered by Allâh)!"

40:51

إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ يَقُومُ ٱلْأَشْهَـٰدُ

நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களுக்கும், விசுவாசங்கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் (மறுமை) நாளிலும் திண்ணமாக உதவி செய்வோம்.

Verily, We will indeed make victorious Our Messengers and those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) in this world’s life and on the Day when the witnesses will stand forth, (i.e. Day of Resurrection) -

40:52

يَوْمَ لَا يَنفَعُ ٱلظَّـٰلِمِينَ مَعْذِرَتُهُمْ ۖ وَلَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ

(அந் நாள்) அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் (கூறுதல் ஒன்றுமே) பயனளிக்காத நாள், அவர்களுக்கு (அல்லாஹ்வின்) சாபமும் உண்டு, அவர்களுக்கு (வேதனையால் மறுமை) வீட்டின் கெடுதியுமுண்டு.

The Day when their excuses will be of no profit to Zâlimûn (polytheists, wrong-doers and disbelievers in the Oneness of Allâh). Theirs will be the curse, and theirs will be the evil abode (i.e. painful torment in Hell-fire).

40:53

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْهُدَىٰ وَأَوْرَثْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَـٰبَ

மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத் வேதமாகிய) நேர் வழியைக் கொடுத்தோம், இஸ்ராயீலின் மக்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாகவும் ஆக்கினோம்.

And, indeed We gave Mûsâ (Moses) the guidance, and We caused the Children of Israel to inherit the Scripture [i.e. the Taurât (Torah)] -

40:54

هُدًى وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ

(அது) நேர்வழியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் (இருந்தது).

A guide and a reminder for men of understanding.

40:55

فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَـٰرِ

எனவே, (நபியே!) நீர் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், மேலும், நீர் உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக்கோருவீராக! மேலும், மாலையிலும், காலையிலும் உமதிரட்சிகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!

So be patient (O Muhammad صلى الله عليه وسلم). Verily, the Promise of Allâh is true, and ask forgiveness for your fault1 and glorify the praises of your Lord in the ‘Ashî (i.e. the time period after the midnoon till sunset) and in the Ibkâr (i.e. the time period from early morning or sunrise till before midnoon) [it is said that, that means the five compulsory congregational Salât (prayers) or the ‘Asr and Fajr prayers].

  1. See the footnote of (V.4:106).

40:56

إِنَّ ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَـٰنٍ أَتَىٰهُمْ ۙ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَّا هُم بِبَـٰلِغِيهِ ۚ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களில், தங்களுக்கு வந்த எவ்வித சான்றுமில்லாமல் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையவர்கள் - அவர்களுடைய இதயங்களில் (வெறும்) பெருமையல்லாது (வேறு) இல்லை, அதை அவர்கள் அடையக்கூடியவர்களல்லர், ஆகவே, நீர் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.

Verily those who dispute about the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of Allâh, without any authority having come to them, there is nothing else in their breasts except pride [to accept you (Muhammad صلى الله عليه وسلم) as a Messenger of Allâh and to obey you]1. They will never have it (i.e. Prophethood which Allâh has bestowed upon you). So seek refuge in Allâh (O Muhammad صلى الله عليه وسلم from the arrogants). Verily, it is He Who is the All-Hearer, the All-Seer.

  1. See the footnote of (V.3:85).

40:57

لَخَلْقُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

திட்டமாக வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப்பெரியதாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறியமாட்டார்கள்.

The creation of the heavens and the earth is indeed greater than the creation of mankind; yet, most of mankind know not.

40:58

وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَلَا ٱلْمُسِىٓءُ ۚ قَلِيلًا مَّا تَتَذَكَّرُونَ

குருடரும், பார்வையுடையவரும் சமமாக மாட்டார்கள், (அவ்வாறே,) விசுவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்தார்களே அவர்களும், தீயவரும் (சமமாக மாட்டார்கள்) வெகு சொற்பமாகவே (இதனைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.

And not equal are the blind and those who see; nor are (equal) those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism), and do righteous good deeds, and those who do evil. Little do you remember!

40:59

إِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

நிச்சயமாக மறுமைநாள் வரக்கூடியதே, அதில் சந்தேகமே இல்லை, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பமாட்டார்கள்.

Verily, the Hour (Day of Judgement) is surely coming, there is no doubt about it, yet most men believe not.

40:60

وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்- அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.

And your Lord said: "Invoke Me, [i.e. believe in My Oneness (Islâmic Monotheism) and ask Me for anything] I will respond to your (invocation). Verily! Those who scorn My worship [i.e. do not invoke Me, and do not believe in My Oneness, (Islâmic Monotheism)] they will surely enter Hell in humiliation!"

40:61

ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ

அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக இரவை-அதில் நீங்கள் ஓய்வு பெறுவதற்க்காகவும், பகலைப் பார்ப்பதற்க்காகவும் அவன் அமைத்தான், நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் உடையவன், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்தமாட்டர்கள்.

Allâh, it is He Who has made the night for you that you may rest therein and the day for you to see. Truly, Allâh is full of Bounty to mankind; yet, most of mankind give no thanks.

40:62

ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

அவன்தான் அல்லாஹ்-உங்களுடைய இரட்சகன், ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, ஆகவே (அவனைப் புறக்கணித்து விட்டு) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்?

That is Allâh, your Lord, the Creator of all things: Lâ ilâha illâ Huwa (none has the right to be worshipped but He). How then are you turning away (from Allâh, by worshipping others instead of Him)?

40:63

كَذَٰلِكَ يُؤْفَكُ ٱلَّذِينَ كَانُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ

அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டிருந்தார்களே, அவர்களும் இவ்வாறே திருப்பப்படுகிறார்கள்.

Thus were turned away those who used to deny the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of Allâh.

40:64

ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ قَرَارًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அவன் அமைத்தான், மேலும், உங்க(ள் தோற்றங்க)ளை உருவகப்படுத்தினான், பின்னர், உங்களின் தோற்றங்களை அவன் அழகாக்கினான், இன்னும், (பரிசுத்தமான) நல்லவைகளிலிருந்து உங்களுக்கு அவன் உணவும் அளித்தான், (இத்தகுதிகளுக்குரியவனான) அவன் தான் உங்களுடய இரட்சகனாகிய அல்லாஹ்; ஆகவே, அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மிக்க பாக்கியமிக்கவன்.

Allâh, it is He Who has made for you the earth as a dwelling place and the sky as a canopy, and has given you shape and made your shapes good (looking) and has provided you with good things. That is Allâh, your Lord: so Blessed be Allâh, the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).

40:65

هُوَ ٱلْحَىُّ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۗ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

அவனே உயிரோடிருப்பவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, எனவே, நீங்கள் வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை பிரார்த்தி(த்து அழை)யுங்கள். அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.

He is the Ever Living, Lâ ilâha illâ Huwa (none has the right to be worshipped but He); so invoke Him making your worship pure for Him Alone (by worshipping Him Alone, and none else, and by doing righteous deeds sincerely for Allâh’s sake only, and not to show off, and not setting up rivals with Him in worship). All the praises and thanks be to Allâh, the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).

40:66

۞ قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِىَ ٱلْبَيِّنَـٰتُ مِن رَّبِّى وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

(நபியே!) நீர் கூறுவீராக: “என் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்தபோது, அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகளை நான் வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். அன்றியும், அகிலத்தாரின் இரட்சகனுக்கே நான் முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்குமாறு நான் கட்டளையிடப்பட்டு விட்டேன்.”

Say (O Muhammad صلى الله عليه وسلم): "I have been forbidden to worship those whom you worship besides Allâh, since there have come to me evidence from my Lord; and I am commanded to submit (in Islâm) to the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).

40:67

هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا۟ شُيُوخًا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوٓا۟ أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ

அவன் எத்தகையவனென்றால், உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர், இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர், இரத்தத் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான், பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும், பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும், (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்னரே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள், இன்னும், குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், (இதிலிருந்து அவனின் சக்தியை) நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்).

It is He, Who has created you (Adam) from dust, then from a Nutfah [mixed semen drops of male and female sexual discharge (i.e. Adam’s offspring)] then from a clot (a piece of coagulated blood), then brings you forth as an infant, then (makes you grow) to reach the age of full strength, and afterwards to be old (men and women)- though some among you die before,- and that you reach an appointed term in order that you may understand.1

  1. See the footnote of (V.22:5).

40:68

هُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

அவன் எத்தகையவனென்றால், அவனே உயிரளிக்கின்றான், இன்னும், மரணிக்கச் செய்கின்றான், எனவே, ஏதேனும் ஒரு காரியத்தை(ச் செய்ய) அவன் தீர்மானித்தால், அப்போது அதற்கு அவன் கூறுவதெல்லாம் ஆகுக! என்பதைத்தான் (அப்போது) உடனே அது ஆகிவிடும்.

It is He Who gives life and causes death. And when He decides upon a thing He says to it only: "Be!" - and it is.

40:69

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصْرَفُونَ

(நபியே!) அல்லாஹ்வின் (அத்தாட்சிகளாகிய அவனது) வசனங்களில் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையோர்பால்-அவர்கள் எவ்வாறு (சத்தியத்திலிருந்து) திருப்பப்படுகின்றனர் என்று நீர் பார்க்கவில்லையா?

See you not those who dispute about the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) of Allâh? How are they turning away [from the truth, (i.e. Islâmic Monotheism to the falsehood (i.e. polytheism)]?

40:70

ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِٱلْكِتَـٰبِ وَبِمَآ أَرْسَلْنَا بِهِۦ رُسُلَنَا ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

அவர்கள் எத்தகையோரென்றால், (நம்முடைய) இவ் வேதத்தையும், இன்னும், எ(வ்வேதத்)தைக் கொண்டு நமது தூதர்களை நாம் அனுப்பி வைத்தோமோ, அதையும் பொய்யாக்கினார்கள், ஆகவே (விரைவில் அதன் பலனை) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Those who deny the Book (this Qur’ân), and that with which We sent Our Messengers (i.e. to worship none but Allâh Alone sincerely, and to reject all false deities and to confess resurrection after the death for recompense) they will come to know (when they will be cast into the Fire of Hell).

40:71

إِذِ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَـٰقِهِمْ وَٱلسَّلَـٰسِلُ يُسْحَبُونَ

அவர்களின் கழுத்துக்களில் வளையங்களாலும், சங்கிலிகளாலும் (கட்டப்பட்டு மலக்குகளால்) அவர்கள் இழுத்து வரப்படும் போது-(அதனை அறிவார்கள்).

When iron collars will be rounded over their necks, and the chains, they shall be dragged along,1

  1. See the footnote of (V.17:97).

40:72

فِى ٱلْحَمِيمِ ثُمَّ فِى ٱلنَّارِ يُسْجَرُونَ

கொதிக்கும் நீரில், பின்னர், நரகத்தில் (அவர்களைக் கொண்டுவந்து தீ) மூட்டப்படுவார்கள்.

In the boiling water, then they will be burned in the Fire.1

  1. See the footnote of (V.3:85).

40:73

ثُمَّ قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تُشْرِكُونَ

பின்னர், அவர்களிடமே நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? என்று கேட்கப்படும்.

Then it will be said to them: "Where are (all) those whom you used to join in worship as partners1

  1. See the footnote of (V.4:135).

40:74

مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُوا۟ مِن قَبْلُ شَيْـًٔا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلْكَـٰفِرِينَ

அல்லாஹ்வையன்றி (நீங்கள் இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? எனக் கேட்கப்படும், அதற்கு) “எங்களை விட்டும் அவை மறைந்து விட்டன, எனினும் இதற்கு முன்னர் நாங்கள் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையும் (ஆண்டவனென) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே” என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்போரை அல்லாஹ் வழிகெடச் செய்கிறான்.

"Besides Allâh"? They will say: "They have vanished from us: Nay, we did not invoke (worship) anything before." Thus Allâh leads astray the disbelievers.1

  1. See the footnote of (V.2:165).

40:75

ذَٰلِكُم بِمَا كُنتُمْ تَفْرَحُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَبِمَا كُنتُمْ تَمْرَحُونَ

(பின்னர் அவர்களிடம்,) “அ(வ்வாறு வழி கெடுத்த)து நீங்கள் பூமியில் நியாயமின்றி (அளவு கடந்து) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருந்ததன் காரணமாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்ததன் காரணத்தினாலுமாகும்” (என்றும்),

That was because you had been exulting in the earth without any right (by worshipping others instead of Allâh and by committing crimes), and that you used to rejoice extremely (in your error).

40:76

ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ

“நரகத்தின் வாயல்களில் நுழையுங்கள், அ(ந்நரகத்)தில் நிரந்தரமக(த்தங்கி) இருப்பவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில்,“ (என்றும் கூறப்படும்), எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் ஒதுங்குமிடம் மிகக் கெட்டது.

Enter the gates of Hell to abide therein: and (indeed) what an evil abode of the arrogant!

40:77

فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ

ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதாகும், ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்) நாம் உம்மை மரணிக்கச் செய்தாலும் (இரு நிலையிலும்) அவர்கள் பின்னர், நம்மிடமே திருப்பிக்கொண்டு வரப்படுவார்கள்.

So be patient (O Muhammad صلى الله عليه وسلم); verily, the Promise of Allâh is true and whether We show you (O Muhammad صلى الله عليه وسلم in this world) some part of what We have promised them, or We cause you to die then still it is to Us they all shall be returned.

40:78

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ فَإِذَا جَآءَ أَمْرُ ٱللَّهِ قُضِىَ بِٱلْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلْمُبْطِلُونَ

மேலும், (நபியே!) திட்டமாக, நாம் உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறி இருக்கின்றோம்; இன்னும், அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை, (இவ்விரு சாராரில்) எந்தத் தூதருக்கும் அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதோர் அத்தாட்சியையும் அவர் கொண்டு வருவதற்கு (அதிகாரம்) இல்லை; ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளை வந்து விடுமானால் நீதியைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும், மேலும், (அதனைப்) பொய்யாக்கியவர்கள் அந்த இடத்தில் நஷ்டமடைவார்கள்.

And, indeed We have sent Messengers before you (O Muhammad صلى الله عليه وسلم): of some of them We have related to you their story.1 And of some We have not related to you their story, and it was not given to any Messenger that he should bring a sign except by the Leave of Allâh. But, when comes the Commandment of Allâh, the matter will be decided with truth, and the followers of falsehood will then be lost.

  1. There are many Prophets and Messengers of Allâh. About twenty-five of them are mentioned in the Qur’an; out of these twenty-five, only five are of strong will, namely: Muhammad صلى الله عليه وسلم, Nûh (Noah), Ibrâhîm (Abraham), Mûsâ (Moses), and ‘Îsâ (Jesus) - son of Maryam (Mary) عليهم السلام .

40:79

ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَنْعَـٰمَ لِتَرْكَبُوا۟ مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ

அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கி இருக்கிறான், அவற்றில் (சிலவற்றின்மீது) நீங்கள் சவாரி செய்வதற்காக, இன்னும், அவைகளி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.

Allâh, it is He Who has made cattle for you, that you may ride on some of them, and of some you eat.

40:80

وَلَكُمْ فِيهَا مَنَـٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةً فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ

இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும், உங்கள் நெஞ்சங்களிலுள்ள தேவையை அவற்றின் மூலம் நீங்கள் அடைந்து கொள்வதற்காகவும் (படைத்தான்); அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் (பல பகுதிகளுக்கும்) நீங்கள் சுமந்து செல்லப் படுகிறீர்கள்.

And you have (many other) benefits from them, and that you may reach by their means a desire that is in your breasts (i.e. carry your goods, loads, etc.), and on them and on ships you are carried.

Next part: Verses 81–85 →

The Noble Qur'an — Ghafir