8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Ashura & Bara'ah

The Ruling on the Night of Bara'ahபராஅத் இரவு பற்றின மார்க்கச் சட்டம்

This article is in Tamil.
On this page5

📗

கேள்வி 1:

இந்த நிகழ்ச்சியின் முதல் கடிதம் ரியாத்தைச் சேர்ந்த நேயர் அலி என்பவரிடமிருந்து வந்துள்ளது. அவர் ஒரு தொகுப்புக் கேள்விகளை அனுப்பியுள்ளார். அதில் அவர் கேட்கிறார்: “ஷஃபான் மாதத்தின் 15-ம் நாளில் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்.

📝 பதில்:

ஷய்க்: அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நமது நபி முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் தோழர்கள் அனைவர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும். மேலும் நம்முடைய சொல் மற்றும் செயலில் சரியானதை நமக்கு அருள்புரியுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

ஷஃபான் மாதத்தின் பாதி (15-ம் நாள்) நோன்பு நோற்பதன் சிறப்புகள் குறித்தும், அந்த இரவில் நின்று வணங்குவதன் சிறப்புகள் குறித்தும், அதேபோல அந்த நாளின் பகலின் சிறப்புகள் குறித்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் அந்த ஹதீஸ்கள் பெரும்பாலான மார்க்க அறிஞர்களால் பலவீனமானவை என வகைப்படுத்தப்பட்ட ஹதீஸ்களாகும். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஆதாரம் நிலைநாட்டப்பட மாட்டாது, குறிப்பாக அமல்கள் சார்ந்த விஷயங்களில்.

“இதன் அடிப்படையில், ஷஃபான் மாதத்தின் 15-ம் நாளை நோன்பு நோற்பதற்காகவும், அதன் இரவை நின்று வணங்குவதற்காகவும் பிரத்யேகமாக ஒதுக்குவது மார்க்கம் காட்டித்தந்த வழிமுறையல்ல. ஏனெனில் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நபி ﷺ அவர்களிடமிருந்தோ அல்லது அவர்களது தோழர்களிடமிருந்தோ (ரதியல்லாஹு அன்ஹும்) இதன் சிறப்பு குறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால், ஒரு மனிதர் ஷஃபான் மாதத்தின் ‘அய்யாமுல் பீத்’ எனப்படும் மூன்று வெள்ளை நாட்களான 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஒரு மனிதருக்கு சுன்னத்தாகும்; அந்த மூன்று நாட்களையும் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளாக அமைத்துக் கொள்வது மிகச்சிறந்ததாகும்.

“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும் ” என்று நபி ﷺ அவர்கள் கூறிய செய்தி ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது.


ஆதாரம்: ஸில்ஸிலா ஃபதாவா நூர் அலத் தர்ப்; ஒலிப்பதிவு எண்: [153]; தலைப்பு: நோன்பு | உபரி (சுன்னத்தான) நோன்பு.


حكم صوم يوم الشك والخامس عشر من شعبان

السؤال:
أولى رسائل هذه الحلقة وصلت من المستمع علي، من الرياض، أرسل مجموعة من الأسئلة، يقول فيها: ما حكم صيام اليوم الخامس عشر من شهر شعبان؟ أفتونا مأجورين

الجواب:
الشيخ: الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد، وعلى آله وأصحابه أجمعين، وأسأل اللّه سبحانه وتعالى أن يلهمنا الصواب في القول والعمل.

صيام النصف من شهر شعبان وردت فيه أحاديث في فضله، وفي فضل قيام الليلة، ليلة النصف، وفضل يوم النصف أيضاً، لكنها أحاديث ضعفها أكثر أهل العلم، والأحاديث الضعيفة لا تثبت بها حجة، لا سيما في المسائل العملية.

وبناء على ذلك، فإن تخصيص يوم النصف من شعبان بالصيام، وتخصيص ليلة النصف من شعبان للقيام، غير مشروع، لعدم صحة الأحاديث الواردة في ذلك عند أكثر أهل العلم، ولا يثبت شيء عن النبي صلى اللّٰه عليه وسلم، ولا عن أصحابه في فضلها.

أما إذا صام الإنسان الثلاثة أيام البيض من شعبان، وهو اليوم الثالث عشر واليوم الرابع عشر واليوم الخامس عشر، فإن هذا لا بأس به، لأنه يسن للإنسان أن يصوم من كل شهر ثلاثة أيام، والأفضل أن يجعلها في هذه الأيام الثلاثة, الثالث عشر والرابع عشر والخامس عشر ,وقد صح عن النبي صلى اللّٰه عليه وسلم أنه قال «صوم ثلاثة أيام من كل شهر صوم الدهر كله».

المصدر: سلسلة فتاوى نور على الدرب > الشريط رقم [153]
الصيام > صوم التطوع.


கேள்வி 2:

“மதிப்பிற்குரிய ஷய்க் அவர்களே, அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்.
கேள்வியாளர் கேட்கிறார்: ஷஃபான் மாதத்தின் பாதிக்கு பிறகு உபரியான நோன்பு நோற்பது அனுமதிதானா?”



பதில்:
ஆம், ஷஃபான் மாதத்தின் பாதிக்கு பிறகும் உபரியான நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில், உம்மு ஸலமா (ரதியல்லாஹு அன்ஹா) மற்றும் ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) ஆகியோர் அறிவித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வந்துள்ளது போல, நபி ﷺ அவர்கள் ஷஃபான் மாதத்தின் பெரும்பகுதி நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள் 1. எனவே, இம்மாதத்தின் பாதிக்கு முன்பும், பாதிக்கு பின்பும் அதிகமாக நோன்பு நோற்பது விரும்பத்தக்க மற்றும் அறிவுறுத்தப்பட்ட காரியங்களில் ஒன்றாகும்.

(இங்கு ஒரு கேள்வி எழலாம்)
“ஷஃபான் மாதம் பாதி ஆகிவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” 2 எனும் பிரபலமான ஹதீஸைப் பொறுத்தவரை, அது ஒரு பலவீனமான ஹதீஸாகும்; இன்னும் சொல்லப்போனால் அது (ஹதீஸ் கலை அடிப்படையில்) மறுக்கப்பட வேண்டிய செய்தியாகும். இமாம் அஹ்மத், இப்னு மயீன் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி (ரஹீமஹுமுல்லாஹ்) போன்ற இமாம்கள் இந்த ஹதீஸை பலவீனமானது என்று வகைப்படுத்தியுள்ளனர். மேலும் அபூ ஹாத்திம், அபூ ஸுர்ஆ ஆகியோரும் (ரஹீமஹுமல்லாஹ்) இதனைப் பலவீனப்படுத்தியுள்ளனர். அதேபோன்று, இப்னு ரஜப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ‘லத்தாயிஃபுல் மஆரிஃப்’ எனும் நூலில், (கூறுகிறார்கள்): இந்த ஹதீஸை பலவீனமான ஹதீஸ் எனக் கூறியவர்கள், இதை ஹஸன் (ஏற்றுக்க்கொள்ளப்பட்டது) என்று அங்கீகரித்த அறிஞர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மற்றும் மிக ஆழமான கல்வியுடையவர்கள், எனவே அவர்களது கருத்தையே நாம் ஏற்பது சிறந்தது எனகுறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருவேளை இந்த செய்தியானது (“ஷஃபான் மாதம் பாதி ஆகிவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்”) ஏற்றுக்கொள்ளத் தகுமானது என்று வைத்துக்கொண்டால் கூட, (நாம் முதலில் கூறின: நபி ﷺ அவர்கள் ஷஃபான் மாதத்தின் பெரும்பகுதி நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள் என்ற) புகாரி மற்றும் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாகவும், அதை விட ஆதாரப்பூர்வமானதாகவும் உள்ள ஹதீஸை விட எவ்வாறு மேலோங்க முடியும்? எனவே, இந்த விஷயத்தில் முரண்பாடு ஏதுமில்லை; ஏனெனில் (ஷஃபான் பாதிக்குமேல் நோன்பு நோற்கக்கூடாது என்ற) இந்த ஹதீஸ் அதன் வாசகத்தில் குறையுள்ளதாகவும், (ஹதீஸ் கலை அடிப்படையில்) மறுக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இதனை அலா இப்னு அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

இருப்பினும், மற்றுமொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில்: ‘ரமதானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக நீங்கள் நோன்பு நோற்று முந்தாதீர்கள்’ 3 என்று வந்துள்ள ஹதீஸைத் தவிர மற்றபடி (பாதி ஷஃபானுக்குப் பின்) ஒருவர் நோன்பு நோற்பதில் தவறில்லை. இந்த இடத்தில் (ரமதானுக்கு முன்னுள்ள அந்த இரு நாட்களில்) நோன்பு நோற்காமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்; ஆனால் அவர் வழக்கமாக நோன்பு நோற்பவராக இருந்தாலே தவிர (அவர் நோற்றுக் கொள்ளலாம்). அந்த ஹதீஸிலேயே: ‘ரமதானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக நீங்கள் நோன்பு நோற்று முந்தாதீர்கள் வழக்கமாக ஒரு நோன்பை நோற்று வரும் ஒரு மனிதரைத் தவிர அவர்மட்டும் நோற்றுக்கொள்ளட்டும்’ என்று வந்துள்ளது. (உதாரணத்திற்கு) திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் (அந்த இரண்டு நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம்). ஆம்.”

📌 Footnotes

1. ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிப்பது: இதனை புகாரி (1969) மற்றும் முஸ்லிம் (1156) பதிவு செய்துள்ளனர். உம்மு ஸலமா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிப்பது: இதனை திர்மிதி (736) மற்றும் அஹ்மத் (26514) பதிவு செய்துள்ளனர்.

2. இதனை அபூ ஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்க, திர்மிதி (738), அபூ தாவூத் (2337) மற்றும் இப்னு மாஜா (1651) ஆகியோர் பதிவு செய்துள்ளனர். (இந்த ஹதீஸின் முன்கர்-மறுக்கப்பட வேண்டிய தன்மை குறித்தும், இமாம்கள் இதனைப் பலவீனப்படுத்தியது குறித்தும் ஷேக் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்).

3. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ரமதானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக நீங்கள் நோன்பு நோற்று முந்தாதீர்கள்… வழக்கமாக நோன்பு நோற்று வரும் ஒரு மனிதரைத் தவிர, அவர் அந்த நோன்பை நோற்கட்டும்” எனும் ஹதீஸ். இதனை அபூ ஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்க, புகாரி (1914) மற்றும் முஸ்லிம் (1082) பதிவு செய்துள்ளனர்.
أحسن الله إليكم فضيلة الشيخ، هذا سائل يقول:
هل يجوز صوم التطوع بعد النصف من شهر شعبان؟

الجواب:
نعم، يجوز صيام التطوع بعد منتصف شهر شعبان؛ لأن النبي ﷺ كان يصوم أكثر شعبان كما جاء في الصحيح من حديث أم سلمة ومن حديث عائشة؛ فمن المستحبات في هذا الشهر هو الإكثار من صيامه قبل المنتصف وبعد المنتصف.

وأما الحديث المشهور وهو حديث: «إذا انتصف شعبان فلا تصوموا» فهو حديث ضعيف بل هو منكر، وقد ضعفه جمع من الأئمة على رأسهم: الإمام أحمد، وابن معين، وكذلك عبد الرحمن بن مهدي، وضعفه أبو حاتم وأبو زرعة.

وكذلك ابن رجب أشار في كتابه «لطائف المعارف» أن الذين ضعفوه أكثر وأكثر وأعلم من الذين حسّنوه، فهم أولى بأن نأخذ قولهم.

هذا إذا صح الحديث، فكيف وهو يعارضه ما جاء في الصحيحين – وهو أصح منه – أن النبي ﷺ كان يصوم أكثر شعبان؟ إذاً يقال: لا تعارض؛ لأن هذا الحديث معلول منكر في لفظه، وقد تفرد به العلاء بن عبد الرحمن.

فلا بأس أن يصوم الإنسان إلا كما جاء في الحديث الصحيح: «لا تقدموا رمضان بيوم أو يومين»، فهنا لا يصوم ويقف عن الصوم إلا إذا كان معتاداً كما جاء في الحديث نفسه: «إلا رجل كان يصوم صوماً فليصمه»؛ كالذي اعتاد أن يصوم الاثنين أو الخميس، نعم.

If this article benefited you, please share it.