
முந்தைய ரமதானில் விடுபட்ட கடமையான நோன்புகளை, அடுத்த ரமதான் வருவதற்குமுன் கதாச் செய்து கொள்ளுங்கள்
.
நபி ﷺ அவர்களின் மனைவி
ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா)
அவர்கள் கூறுகிறார்கள்:
“நிச்சயமாக எனக்கு ரமதான் மாதத்தின் விடுபட்ட நோன்புகள் இருக்கும்; (அடுத்த ரமதானுக்கு முந்தைய மாதமாக வரும்) ஷஃபான் மாதம் வரும் வரை அவற்றை என்னால் நோற்க இயலாமல் இருந்தது.”
(முவத்தா மாலிக் – 1094)
அதாவது ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா), சென்ற ரமதானில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் கதா செய்து முடிக்காமல் அடுத்த ரமாதானிற்குள் நுழையமாட்டார்கள்.“நிச்சயமாக எனக்கு ரமதான் மாதத்தின் விடுபட்ட நோன்புகள் இருக்கும்; (அடுத்த ரமதானுக்கு முந்தைய மாதமாக வரும்) ஷஃபான் மாதம் வரும் வரை அவற்றை என்னால் நோற்க இயலாமல் இருந்தது.”
(முவத்தா மாலிக் – 1094)
இந்த செய்தியிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
- ரமதானில் விடுபட்ட நோன்புகளை கதாச் செய்வதற்கான கடைசி நேரம் ஷஃபான் மாதம் என்பதற்கு இந்த செய்தி ஆதாரமாக இருக்கின்றது. அடுத்த ரமதான் வரும் வரை விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றாமல் அவர்கள் விட்டதில்லை என்றும், எனவே தான் அவர்கள் ஷஃபான் மாதத்தில் அவற்றை நிறைவேற்றினார்கள் என்று நமக்கு தெளிவாகிறது.
- இரு ரமதான்களுக்கு இடைப்பட்ட காலமே, விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றுவதற்கான நேரம் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால், அடுத்த ரமதான் நுழையும் வரை யாராவது கதா செய்யாமல் காலத்தைக் கடத்திவிட்டால், அவர் மீது பரிகாரம் (ஃபித்யா) கடமையாகிறது; அதாவது அவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
(ஒரு மனைவியாக) நபி ﷺ அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் அல்லது நபி ﷺ அவர்களுடன் இருந்த வேலைப்பளுவே ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் விடுபட்ட நோன்புகளை ஷஃபான் வரை தாமதப்படுத்தினதற்குக் காரணம் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும், மூத்த இமாமுமான யஹ்யா இப்னு ஸயீத் அல்-அன்ஸாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கத்தை இமாம் புகாரி தங்கள் நூலான “ஸஹீஹ் புகாரியில்” பதிவுசெய்துள்ளார்கள் (1950).
மேலும் கடமையான நோன்புகளை கதாச் செய்வதற்கு முன்னதாகவே அந்த வருடத்தில் வரும் உபரியான நோன்புகளை ஒருவர் நோற்பதற்கு அனுமதி உள்ளது என்பதற்கு சில அறிஞர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஏனெனில் துல்-ஹஜ் மாத அரஃபா நோன்பு, முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு மற்றும் இது போன்ற நன்கு அறியப்பட்ட சுன்னத்தான நோன்புகளை ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) விட்டிருப்பார்கள் என்பது சாத்தியமற்றது என்று அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, அடுத்த ரமதான் வரை விசாலமான நேரம் இருக்கிறது என்பதால், கதாச் செய்ய வேண்டிய கடமையான நோன்பை பிற்படுத்தி, அதற்கு முன்னதாக உபரியான நோன்புகளை முற்படுத்த அனுமதிக்கப்பட்டதாகும்.
அதனால்தான் ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) நேரம் விசாலமாக இருந்ததால் அந்தச் சலுகையைப் பயன்படுத்தி அவர்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்று வந்தார்கள்.
முவத்தா மாலிக்
எனும் ஹதீஸ் நூலின்
அஷ்-ஷய்க்
அரஃபாத் அவர்களின்
விளக்கத்தைத்
தழுவி எழுதப்பட்டது.
Comments
No comments yet.