
பதில்: லைலதுல் கத்ர் இரவின் நேரத்தைப் பொறுத்தவரை, அது எந்த இரவில் நிகழும்?
இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ( ஸஹீஹுல் புகாரியின் புகழ்பெற்ற விளக்கவுரை நூலான) ஃபத்ஹுல் பாரி நூலில் இது தொடர்பான கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் (லைலதுல் கத்ர் எப்போது என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் உள்ள) மொத்தக் கருத்துக்களின் எண்ணிக்கையை 46 (கூற்றுகள்) வரை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவை அனைத்தையும் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்இதையே இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.அவர், அது ஒரு குறிப்பிட்ட இரவு என்று கூறி வந்தார்.
உதாரணமாக, அது:
- 21-வது இரவாக அல்லது
- 23-வது இரவாக இருக்கலாம்.
இரண்டாவது கருத்து, இதுவே மிகவும் பிரபலமானதும் சரியானதும் ஆகும்.
இது இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) ஆகியோரின் மத்ஹப் (நிலைபாடு) ஆகும்:
அதாவது, அந்த இரவு கடைசிப் பத்து நாட்களுக்குள் மாறி மாறி வரும்; ஒரு குறிப்பிட்ட இரவிலேயே அது நிலைத்திருக்காது (வருடா வருடம் மாறும்).
அது:
- 21, 23, 24 அல்லது 25-வது இரவாகவும் இருக்கலாம்
- இருப்பினும், அவர்கள் (அறிஞர்கள்) 27-வது இரவில் அது அமைய அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறினார்கள். அதுவாக இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம் என்று கூறினார்கள், ஆனால் அவர்கள் அதை உறுதிபடக் கூறவில்லை
யார் அதை உறுதிபடக் கூறினார்கள்? உபைய் இப்னு கஅப் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் “நிச்சயமாக இந்த இரவு 27-வது இரவுதான்” என்று சத்தியம் செய்பவராக இருந்தார்.
இது குறித்து ஸஹீஹைன் (புகாரி மற்றும் முஸ்லிம்) நூல்களில் வந்துள்ளது (ஸஹீஹ் முஸ்ளிம் 762)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمُ الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ
“நிச்சயமாக நான் உங்களுக்கு லைலதுல் கத்ர் (இரவு எது) என்பதை அறிவிப்பதற்காக வெளியே வந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சண்டையிட்டுக் கொண்டனர்; எனவே அது (பற்றிய அறிவு) உயர்த்தப்பட்டுவிட்டது. இது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே அதனை (கடைசிப் பத்தின்) ஏழு, ஒன்பது மற்றும் ஐந்து (இரவுகளில்) தேடுங்கள்.”
(ஸஹீஹுல் புகாரி: 49)
நபி ﷺ அவர்கள் மேலும் கூறினார்கள்:
(லைலதுல் கத்ர் எப்போது என்பது பற்றி) உங்களது கனவுகள் (கடைசிப் பத்தின்) இறுதி ஏழு நாட்களில் ஏகோபித்து ஒன்றுபடுவதை நான் காண்கிறேன். எனவே, அதனைத் தேடுபவர் இறுதி ஏழு நாட்களில் தேடட்டும்
ஸஹீஹுல் புகாரி: 2015
-
மேலும் இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹு) (ரமதான் மாதம் என்று குறிப்பிடாமல்) வருடம் முழுவதிலும் ஏதோ ஒரு இரவுதான் லைலதுல் கத்ர் என்று அவர் கருதி வந்தார். அதாவது, லைலதுல் கத்ரைச் சரியாக அடைவதற்காக வருடம் முழுவதும் தேடுங்கள், ஆண்டு முழுவதும் (வணக்கத்தில்) நிலைத்திருங்கள் என்பது அதன் பொருளாகும்.
-
உபைய் இப்னு கஅப் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் 27-வது இரவுதான் லைலதுல் கத்ர் என்று கருதி வந்ததால், இப்னு மஸ்ஊத் அவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்: “மக்கள் (இந்த ஒரு இரவை மட்டும் நம்பி இருந்துவிட்டு மற்ற நாட்களில் வணக்கங்களை விட்டு) அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்னு மஸ்ஊத் அவ்வாறு கூற விரும்பினார்…
எவ்வாறாயினும், லைலதுல் கத்ர் இரவைப் பற்றிய அறிவு (அது எந்த இரவு என்பது) உயர்த்தப்பட்டுவிட்டது என்று நான் முன்னர் குறிப்பிட்டதுதான் சரியான கருத்தாகும். அதற்கான காரணம் என்ன? இரண்டு மனிதர்கள் தங்களுக்குள் பிணங்கிக் கொண்டதே (தர்கித்துக் கொண்டதே) காரணமாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் துல்லியமான அறிவு உயர்த்தப்பட்ட காரணத்தினால், அதற்கென சில அடையாளங்களை அல்லாஹ் ஏற்படுத்தினான்
“அந்த அடையாளங்களை நீங்கள் கண்டால் (அறியலாம்);
- அந்த இரவு இதமானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்;
- அதிக வெப்பமாகவோ அல்லது அதிகக் குளிராகவோ இருக்காது;
- சூரியன் (மறுநாள் காலையில்) கதிர்கள் இல்லாமலேயே உதிக்கும்;
- மேலும் சந்திரன் ஒரு தட்டின் பாதியைப் போல தோன்றும்”
(ஸஹீஹு முஸ்லிம்: 762, 1170)
எனவே அறிஞர்கள் கூறுகிறார்கள்: எனவே, இது (அந்த இரவு எப்போது என்பதில் மார்க்கம் அடையாளங்களை கூறினதே) அந்த இரவு அறியப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.
- நாம் அதனைப் ரமதானின் கடைசிப் பத்து நாட்களிலும், அந்தப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளிலும் தேடுமாறு ஏவப்பட்டுள்ளோம்.
- மேலும் இறுதி ஏழு நாட்களில் தேடுமாறு நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; 27-வது இரவைப் பற்றி ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
- ஆயினும், சுனன் அபீ தாவூத் போன்ற நூல்களில் வந்திருப்பதைப் போல 23-வது இரவிலும் தேடுமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
நபி ﷺ அவர்களின் காலத்தில் 21-வது இரவிலும், மற்றும் சில அறிவிப்புகளின்படி 23-வது இரவிலும் லைலதுல் கத்ர் நிகழ்ந்துள்ளது. எனவே, இது இன்ன இரவுதான் (நிலையானது) என்று சொல்லப்படாது. மாறாக, அதனைத் தேடுமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம். அது ஒவ்வொரு ஆண்டும் ஒரு இரவிலிருந்து மற்றொரு இரவிற்கு மாறி வரக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் அது ஒரு குறிப்பிட்ட இரவில் நிகழ்கிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
Comments
No comments yet.