
கண்ணியமிக்க அறிஞர் அஷ்ஷய்க் ரபீ அல்-மத்கலீ அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர், பித்அத்தான மவ்லித் நபிக்கு ஆதாரமாக நபி ﷺ அவர்களின் இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றனர்:
📜 ஹதீஸ்: “யார் ஒரு நல்ல சுன்னத்தை (அழகிய செயலை) உருவாக்குகிறாரோ அதற்குரிய நன்மையும், அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும்……” என்று உள்ள அந்த ஹதீஸை மேற்கோள் காட்டி வாதிடுகின்றனர். இவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?
அதற்கு ஷய்க் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்:
அவர்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கலாம்:
அப்போது கூறினார்கள்: “ஒருவர் தனது வெள்ளிக்காசு, தனது தங்கக்காசு, தனது கோதுமை, தனது தீட்டப்படாத முழு கோதுமை ஆகியவற்றிலிருந்து தர்மம் செய்யட்டும்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் சற்று தாமதித்தனர். அப்போது, அன்சாரித் தோழர் ஒருவர் பொருள்களை உடைய ஒரு பெரிய பையுடன் வந்தார். இதைப் பார்த்தவுடன், மற்ற மக்களும் விரைந்து வந்து போட்டிபோட்டுக் கொண்டு தர்மம் செய்தனர். இதன் மூலம் ஒரு பெரிய அளவிலான தர்மம் குவிந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் நபி ﷺ பின்வருமாறு கூறினார்கள்:
“யார் ஒரு நல்ல சுன்னத்தை (அழகிய செயலை) உருவாக்குகிறாரோ, அதற்குரிய நன்மையும், அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும். அதற்காக அதை பின்பற்றி செய்தவர்களின் நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் ஒருவர் ஒரு தீய சுன்னத்தை (தீய செயலை) உருவாக்குகிறாரோ, அதற்கான அந்த பாவச்சுமையையும், அவருக்குப் பின் அதை பின்பற்றி செய்தவர்களின் பாவச்சுமையையும் அவர் சுமக்க வேண்டும். (அதற்காக) அதை பின்பற்றி செயல்படவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது” என்று கூறினார்கள்.”
நபி ﷺ இந்த ஹதீஸில் தர்மம் செய்வதை ஊக்கப்படுத்தினார்கள், மேலும் தர்மம் செய்வது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாகும்.
“அந்த மனிதர், அந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு அந்த நல்ல செயலை முந்திச் செய்தார். இவ்வாறு மக்கள் எல்லோரும், (ஏற்கனவே மார்க்கமாக ஆக்கப்பட்ட) ஒரு செயலை செய்யாது மறந்திருக்க, அதை நீங்கள் முதலில் முந்திக்கொண்டு செய்தால், ஒரு நல்ல பழக்கத்தை (சுன்னத் ஹஸனா) உருவாக்கியவர் ஆகிறீர்கள். ஆனால்,
மேலும், அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
أَمْ لَهُمْ شُرَكَآءُ شَرَعُوا لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمْ يَأْذَنۢ بِهِ ٱللَّهُ
“அல்லது அல்லாஹ் அனுமதி அளிக்காத ஒன்றை அவர்களுக்கு மார்க்கமாக வகுத்துக்கொடுக்கக்கூடிய கூட்டாளிகள் அவர்களுக்கு இருக்கிறார்களா?”
(சூரா அஷ்-ஷூரா, 21)
இது (இந்த மவ்லித்) ஒரு நல்ல காரியமாக இருந்திருந்தால், நபி ﷺ அவர்களும், நபித்தோழர்களும் நமக்கு முன்பே அதைச் செய்திருப்பார்கள். அல்லாஹ் மீது ஆணையாக, அவர்கள் அதைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நபி ﷺ அவர்களை நன்கு அறிந்திருந்தார்கள். நம்மைவிட அதிகமாக அவர்களை நேசித்தார்கள். ஆனால் இங்கு வருத்தத்திற்குரியது என்னவென்றால், அல்லாஹ் (நேர்வழியை) நாடியவர்களுக்கு தவிர, நம்மில் பலர் இந்த மவ்லித் கொண்டாட்டத்தில் மட்டுமே அவரை ﷺ அறிகிறோம்.
ஆனால், நபித்தோழர்களோ,
- ஒவ்வொரு நொடியும் அவரை அறிந்திருந்தார்கள்.
- மகத்துவமிக்க அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுவதற்காகவும், அல்லாஹ்வின் வார்த்தையை உயர்த்துவதற்காகவும், தங்கள் உயிர்களையும், செல்வங்களையும் தியாகம் செய்தார்கள்.
- நபி ﷺ மீதுள்ள அவர்களின் அன்பை அவரை நம்பிக்கை கொள்வதின் மூலமும், அவரைப் பின்பற்றுவதன் மூலமும் நிரூபித்தார்கள்.
- மேலும் அவரது மார்க்கத்திற்கு உதவுவதற்காக தங்கள் உயிர்களையும், செல்வங்களையும் தியாகம் செய்வதன் மூலமும் நிரூபித்தார்கள்.
- இக்காலத்தில், இந்த மக்கள் மார்க்கத்தைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்துகிறார்கள்.
- இந்த மௌலிதுகளை நடத்துவதின்மூலம் நாங்கள் நபி ﷺ அவர்களை நேசிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
- இதன் மூலம் மக்களின் செல்வங்களை அநியாயமாகச் சாப்பிடுகிறார்கள்.
- இதில் இணை வைத்தல் (ஷிர்க்) போன்றவை நிகழ்கின்றன.
- மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன.
- வழிகேடுகளும் இதில் இடம்பெறுகின்றன.
இதெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தைச் சார்ந்ததா ? !
இதுபோன்றதை உருவாக்கியவர்களைப் புகழ முடியுமா ? !
இந்த (பித்அத்தான) செயலை உருவாக்கியவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிரிகளான ‘ பாத்தினிய்யூன் (ஷியாக்களான உபய்திய்யூன்) ‘ எனும் மறைபொருள்வாதிகள் என்பதை நாம் அறிந்துக் கொள்ளுதல் அவசியம்.
“பாத்தினிய்யா” என்பது வழிகெட்ட பிரிவுகளில் ஒன்று. இவர்கள், இஸ்லாமியச் சட்ட நூல்களுக்கு வெளிப்படையான பொருளும், மறைவான பொருளும் இருப்பதாகக் கூறுவார்கள். அவர்கள் மறைபொருளுக்குத் தங்களின் விருப்பப்படி விளக்கம் கொடுத்து, சட்டம், ஷரியத் போன்றவற்றைத் திரித்துக் கூறுவார்கள். இஸ்லாமிய நூல்களில் வெளிப்படையாக உள்ள கருத்துக்களுக்குப் பின்னால், அந்த நூல்களின் மறைபொருளை, அவர்களது குழுவில் உள்ள சில “சிறந்தவர்கள்” மட்டுமே அறிவார்கள் என்றும் கூறுகின்றனர்.
“பாத்தினிய்யா” என்பது இஸ்லாத்தின் ஒரு பிரிவு அல்ல. இஸ்லாமிய நம்பிக்கைகளையும், சட்டதிட்டங்களையும், “மறைபொருள் விளக்கம்” என்ற பெயரில் அழிப்பதற்காக இந்த சித்தாந்தத்தை உருவாக்கினர். இஸ்லாமிய மார்க்கத்தின் மற்ற எதிரிகளை விட, இந்த “பாத்தினிய்யா” வாதிகளால் ஏற்படும் தீங்கு மிகவும் கொடியதாகும்.
📖 ஆக்கம்
[ஃபதாவா ஃபில் அகீதா, பாகம் 2]
Comments (4)
جزاك لله خير
وإياكم
Jazakumullahu khairan
wa iyyaakkum