8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

AudioRaising children

Raising Children in Islamஇஸ்லாத்தில் பிள்ளை வளர்ப்பு முறை

The audio is in Tamil.

உங்களுடைய மரணத்திற்கு பின்பு, உங்களுக்காக உங்கள் பிள்ளைகள் கேட்கும் துஆ பயனளிக்க வேண்டுமெனில், நீங்கள் அவர்களை அல்லாஹ்விற்கு கட்டுப்படும் படி அவர்களை வாற்றெடுங்கள், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை செயல்படுத்துமாறு அவர்களை நீங்கள் வாற்றெடுங்கள். உங்களுடைய பிள்ளைகள் உங்கள் கையில் இருக்கும் போதே உங்களுக்கு கீழ் இருக்கும் போதே உங்களால் தர்பியச் செய்யக்கூடிய அந்த சக்தி உங்களுக்கு இருக்கும் போதே முந்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளில் நல்லறங்களைக் கொண்டு வாற்றெடுப்பது என்பது தானாக வந்து விடாது மாறாக நாம் ஒரு சில காரணங்களை செயல்படுத்த வேண்டும். ஒரு சில முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். அதனால் அல்லாஹ், லுக்மானிற்க்கு (அலைஹிஸ் ஸலாம்) ஞானத்தை வழங்கினான் என்னவென்றால் மார்க்கத்தின் கல்வியும் மார்க்கத்தின் தெளிவான சிந்தனையும். பின்பு அதனை அவர்கள் அமல்படுத்தினார்கள். அமல் செய்ததற்குப் பிறகு முதலில் தன்னுடைய மகனுக்கு கற்றுத் தருகிறார்கள் தன் மகனிடம் கூறுகிறார்கள், அல்லாஹ் கூறுகிறான்: يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم லுக்மான் தனது மகனுக்கு அவர் அவருக்கு உபதேசித்தவராக கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும். லுக்மான் 31-13 பாவங்களிலேயே பெரும் பாவமானது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாகும் மற்றும் யார் அதிலே மரணிக்கிறாரோ அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான். நமது சமூக வலைதள பக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில். தொடர்ந்திருங்கள் நம்மோடு

https://www.youtube.com/watch?v=z93L0KwR_k8
If this article benefited you, please share it.