8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 96

/ 604
Page 96

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

4:106

وَٱسْتَغْفِرِ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

இன்னும் நீர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

And seek the Forgiveness of Allâh,1 certainly, Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.

  1. The Prophet’s صلى الله عليه وسلم seeking of Allâh’s Forgiveness by daytime and at night.

    Narrated Abu Hurairah رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying: "By Allâh! I seek Allâh’s Forgiveness and turn to Him in repentance for more than seventy times a day." (Sahih Al-Bukhâri’, Vol.8, Hadîth No.319).

4:107

وَلَا تُجَـٰدِلْ عَنِ ٱلَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًا

(நபியே! பிறருக்குத் தீங்கிழைத்து) தமக்குத்தாமே மோசடி செய்து கொண்டுள்ளார்களே அத்தகையவர்களுக்காக, நீர் வாதாட வேண்டாம், (ஏனென்றால்,) கொடிய பாவியான மிக மோசக்காரனாக இருக்கிறவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

And argue not on behalf of those who deceive themselves. Verily, Allâh does not like anyone who is a betrayer, sinner.

4:108

يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைக்கின்றார்கள், அவர்கள் (அதனை) அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடவே முடியாது, (ஏனெனில்) அவன் பேச்சால் பொருந்திக்கொள்ளாததைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் (சதிசெய்ய) ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை (தன் அறிவால்) சூழ்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.

They may hide (their crimes) from men, but they cannot hide (them) from Allâh; for He is with them (by His Knowledge), when they plot by night in words that He does not approve. And Allâh ever encompasses what they do.

4:109

هَـٰٓأَنتُمْ هَـٰٓؤُلَآءِ جَـٰدَلْتُمْ عَنْهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَمَن يُجَـٰدِلُ ٱللَّهَ عَنْهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا

அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தானே அவர்கள், அவர்களுக்காக உலகவாழ்வில் நீங்கள் வாதாடுகிறீர்கள், கியாமத்து நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது எவர் இவர்களுக்கு பொறுப்பேற்பவராக இருப்பார்?

Lo! You are those who have argued for them in the life of this world, but who will argue for them on the Day of Resurrection against Allâh, or who will then be their defender?

4:110

وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًا رَّحِيمًا

மேலும், எவர் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநீதமிழைத்துவிட்டு பின்னர் (பச்சாதாபப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக அவர் காண்பார்.

And whoever does evil or wrongs himself but afterwards seeks Allâh’s Forgiveness, he will find Allâh Oft-Forgiving, Most Merciful.

4:111

وَمَن يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُۥ عَلَىٰ نَفْسِهِۦ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

இன்னும், எவர் பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே (தான்), இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

And whoever earns sin, he earns it only against himself. And Allâh is Ever All-Knowing, All-Wise.

4:112

وَمَن يَكْسِبْ خَطِيٓـَٔةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِۦ بَرِيٓـًٔا فَقَدِ ٱحْتَمَلَ بُهْتَـٰنًا وَإِثْمًا مُّبِينًا

அன்றியும் எவர், யாதொரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து பின்னர் நிரபராதியான (மற்றொரு)வர்மீது அதனைச் சுமத்தினால் அப்போது நிச்சயமாக அவர் அவதூரையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொண்டவராவார்.

And whoever earns a fault or a sin and then throws it on to someone innocent, he has indeed burdened himself with falsehood and a manifest sin.

4:113

وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٌ مِّنْهُمْ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمْ ۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَىْءٍ ۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ ۚ وَكَانَ فَضْلُ ٱللَّهِ عَلَيْكَ عَظِيمًا

இன்னும், (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் பேரருளும், அவனது கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தினர் உம்மை வழி தவறச் செய்ய முயன்றிருப்பர், இன்னும், அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்க முடியாது, அவர்கள் உமக்கு யாதொரு தீங்கிழைத்துவிடவும் முடியாது, மேலும், அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான், இன்னும், நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான், மேலும், உம்மீது அல்லாஹ்வுடைய பேரருள் மகத்தானதாகவே இருக்கின்றது.

Had not the Grace of Allâh and His Mercy been upon you (O Muhammad صلى الله عليه وسلم), a party of them would certainly have made a decision to mislead you, but (in fact) they mislead none except their own selves, and no harm can they do to you in the least. Allâh has sent down to you the Book (The Qur’ân), and Al-Hikmah (Islâmic laws, knowledge of legal and illegal things i.e. the Prophet’s Sunnah - legal ways), and taught you that which you knew not. And Ever Great is the Grace of Allâh unto you (O Muhammad صلى الله عليه وسلم).