8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 55

/ 604
Page 55

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

3. Ali 'Imranسورة آل عمران

3:38

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ

அந்த இடத்திலேயே ஜகரிய்யா, தன் இரட்சகனை (பிரார்த்தித்து) அழைத்தார். “என் இரட்சகனே! உன்பாலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுகிறவன்” என்று கூறினார்.

At that time Zakariyâ (Zachariya) invoked his Lord, saying: "O my Lord! Grant me from You, a good offspring. You are indeed the All-Hearer of invocation."

3:39

فَنَادَتْهُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٌ يُصَلِّى فِى ٱلْمِحْرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَىٰ مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ ٱللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ

பின்னர் மாடத்தில் நின்று அவர் தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரிடம்) மலக்குகள், (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா (என்ற ஒரு மக)வை உமக்கு (அளிப்பதாக) நன்மாராயங் கூறுகின்றான். அவர்(தகப்பனின்றி) அல்லாஹ்விடமிருந்து(ள்ள) ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக் கூடிய ஈஸா நபியை-முன்னறிக்கையாக) உண்மைப் படுத்தக் கூடியவராகவும், (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண் இன்பத்தைத்)துறந்தவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” என்று (கூறி) அவரை சப்தமிட்டு அழைத்தனர்.

Then the angels called him, while he was standing in prayer in Al-Mihrâb (a praying place or a private room), (saying): "Allâh gives you glad tidings of Yahya (John), confirming (believing in) the word from Allâh [i.e. the creation of ‘Îsâ (Jesus) عليه السلام, the Word from Allâh ("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with women, a Prophet, from among the righteous."

3:40

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِى غُلَـٰمٌ وَقَدْ بَلَغَنِىَ ٱلْكِبَرُ وَٱمْرَأَتِى عَاقِرٌ ۖ قَالَ كَذَٰلِكَ ٱللَّهُ يَفْعَلُ مَا يَشَآءُ

(அதற்கு ஜகரிய்யாவாகிய) அவர் (அல்லாஹ்விடம்,) என் இரட்சகனே! எனக்கு எவ்வாறு மகன் உண்டாக முடியும்? நிச்சயமாக முதுமையும் என்னை அடைந்துவிட்டது. என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்!” என்று கூறினார். “அவ்வாறே (நடைபெறும்), அல்லாஹ் தான் நாடியதை (அவசியம்) செய்(தே தீரு)வான் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.

He said: "O my Lord! How can I have a son when I am very old, and my wife is barren?" (Allâh) said: "Thus Allâh does what He wills."

3:41

قَالَ رَبِّ ٱجْعَل لِّىٓ ءَايَةً ۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَـٰثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا ۗ وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَـٰرِ

அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அடையாளத்தை ஆக்குவாயாக!” என்று கேட்டார். (அதற்கு) அவன் “உமக்கு (அளிக்கப்படும்) அடையாளமாவது, மூன்று நாட்கள் வரையில் சைகை மூலமன்றி நீர் மனிதர்களுடன் பேசாமல் இருப்பதாகும். (அந்நாட்களில்) நீர் உமதிரட்சகனை அதிகமாக நினைவுகூர்வீராக! காலையிலும், மாலையிலும் (அவனைப்போற்றி) துதி செய்து கொண்டுமிருப்பீராக!” என்று கூறினான்.

He said: "O my Lord! Make a sign for me." Allâh said: "Your sign is that you shall not speak to mankind for three days except with signals. And remember your Lord much (by praising Him again and again), and glorify (Him) in the afternoon and in the morning.1"

  1. See Tafsir Al-Qurtubi, Vol.4, Page.82.

3:42

وَإِذْ قَالَتِ ٱلْمَلَـٰٓئِكَةُ يَـٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰكِ وَطَهَّرَكِ وَٱصْطَفَىٰكِ عَلَىٰ نِسَآءِ ٱلْعَـٰلَمِينَ

இன்னும், மலக்குகள் (மர்யமிடம்) “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், உன்னைப் பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான், அகிலத்தாரிலுள்ள பெண்களை விட உன்னைத் தேர்ந்தெடுத்துமிருக்கின்றான்” என்று கூறிய சமயத்தில் (நடந்தவற்றை நபியே! நினைவு கூர்வீராக! அப்போது)

And (remember) when the angels said: "O Maryam (Mary)! Verily, Allâh has chosen you, purified you (from polytheism and disbelief), and chosen you above the women of the ‘Âlamîn (mankind and jinn) (of her lifetime)."

3:43

يَـٰمَرْيَمُ ٱقْنُتِى لِرَبِّكِ وَٱسْجُدِى وَٱرْكَعِى مَعَ ٱلرَّٰكِعِينَ

“மர்யமே! நீர் உன்னுடைய இரட்சகனுக்கு வழிபாடு செய்வீராக! சாஷ்டாங்கமும் செய்வீராக! குனிந்து (சிரம்பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குவீராக!” (என்றும் கூறினார்கள்.)

O Mary! "Submit yourself with obedience to your Lord (Allâh, by worshipping none but Him Alone) and prostrate yourself, and Irkâ‘i (bow down) along with Ar-Râki‘ûn (those who bow down)."

3:44

ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَـٰمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ

(நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்) நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை.

This is a part of the news of the Ghaib (unseen, i.e. the news of the past nations of which you have no knowledge) which We reveal to you (O Muhammad صلى الله عليه وسلم). You were not with them, when they cast lots with their pens as to which of them should be charged with the care of Maryam (Mary); nor were you with them when they disputed.

3:45

إِذْ قَالَتِ ٱلْمَلَـٰٓئِكَةُ يَـٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ٱسْمُهُ ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ وَجِيهًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمِنَ ٱلْمُقَرَّبِينَ

(மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்- மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.

(Remember) when the angels said: "O Maryam (Mary)! Verily, Allâh gives you the glad tidings of a Word ["Be!" - and he was! i.e. ‘Îsâ (Jesus) the son of Maryam (Mary)] from Him, his name will be the Messiah ‘Îsâ (Jesus), the son of Maryam (Mary), held in honour in this world and in the Hereafter, and will be one of those who are near to Allâh."