9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 542

/ 604
Page 542

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

58. Al-Mujadilaسورة المجادلة

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

58:1

قَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّتِى تُجَـٰدِلُكَ فِى زَوْجِهَا وَتَشْتَكِىٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَآ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ

(நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, (அதைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளே அத்தகையவளுடைய கூற்றை (முறையீட்டை)த் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுக்கொண்டான், அல்லாஹ் உங்களிருவரின் (வாக்கு) வாதத்தையும் செவியேற்றான், நிச்சயமாக அல்லாஹ் மிக செவியேற்கிறவன், (அனைத்தையும்) பார்க்கிறவன்.

Indeed Allâh has heard the statement of her (Khaulah bint Tha‘labah) that disputes with you (O Muhammad صلى الله عليه وسلم) concerning her husband (Aus bin As-Sâmit), and complains to Allâh. And Allâh hears the argument between you both. Verily, Allâh is All-Hearer, All-Seer.

58:2

ٱلَّذِينَ يُظَـٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَـٰتِهِمْ ۖ إِنْ أُمَّهَـٰتُهُمْ إِلَّا ٱلَّـٰٓـِٔى وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ ٱلْقَوْلِ وَزُورًا ۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ

உங்களில் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு (நீ என் மீது என் தாயைப் போன்றவள் எனக்) கூறிவிடுகிறார்களே அத்தகையோர் (ஒப்பிட்டுக் கூறப்பட்ட மனைவியரான) அவர்கள் (ஒப்பிட்டுக் கூறிய) அவர்களுடைய தாய்மார்களல்லர், அவர்களைப் பெற்றெடுத்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு எவரும்) அவர்களுடைய தாய்மார்களல்லர், மேலும், நிச்சயமாக (தம் மனைவியரைத் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் சொல்லால் வெறுக்கத்தக்கதையும், பொய்யையும் கூறுகின்றனர், மேலும், நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிகவும் பொறுப்பவன், மிக்க மன்னிப்பவன்.

Those among you who make their wives unlawful to them by (Zihâr الظهار)1 (i.e. by saying to them "You are like my mother’s back,") they cannot be their mothers. None can be their mothers except those who gave them birth. And verily, they utter an ill word and a lie. And verily, Allâh is Oft-Pardoning, Oft-Forgiving.

  1. Az-Zihâr الظهار is the saying of a husband to his wife: You are to me like the back of my mother (i.e. unlawful for me to approach).

58:3

وَٱلَّذِينَ يُظَـٰهِرُونَ مِن نِّسَآئِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا۟ فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَآسَّا ۚ ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِۦ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

மேலும், தங்கள் மனைவியரைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக்கூறி, பின்னர் தாம் கூறியவற்றிலிருந்து (திரும்பி தாம்பத்திய வாழ்க்கையில்) மீண்டு கொள்வார்களே அத்தகையோர்-அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர், (பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும், இது (அல்லாஹ்வின் சட்டமாகும்) இதனைக் கொண்டு நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.

And those who make unlawful to them their wives by Zihâr and wish to free themselves from what they uttered, (the penalty) in that case is the freeing of a slave before they touch each other. That is an admonition to you (so that you may not repeat such an ill thing). And Allâh is All-Aware of what you do.

58:4

فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَآسَّا ۖ فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ۚ ذَٰلِكَ لِتُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ۚ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ ۗ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ

பின்னர், (அடிமையை-) எவர் பெற்றிருக்கவில்லையோ அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் (அதற்குள்ள பரிகாரம்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பதாகும், (இவ்வாறு நோன்பு நோற்க) எவர் சக்தி பெறவில்லையோ, அப்பொழுது அவர் அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) ஆகாரமளித்தலாகும், இது அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் விசுவாசங்கொள்வதற்காக (இவ்வாறு இலேசாக்கி வைத்தான்), இன்னும், இவைகள் அல்லாஹ்வுடைய வரம்புகளாகும், நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.

And he who finds not (the money for freeing a slave) must fast two successive months before they both touch each other. And he who is unable to do so, should feed sixty Miskîns (poor). That is in order that you may have perfect Faith in Allâh and His Messenger. These are the limits set by Allâh. And for disbelievers, there is a painful torment.

58:5

إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُوا۟ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ وَقَدْ أَنزَلْنَآ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ ۚ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ مُّهِينٌ

நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவாக்கப் பட்டது போன்றே அவர்கள் இழிவாக்கப்படுவார்கள், மேலும், திட்டமாக (இதைப்பற்றித்) தெளிவான வசனங்களை நாம் இறக்கியிருக்கின்றோம், நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.

Verily, those who oppose Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم)1 will be disgraced, as those before them (among the past nation) were disgraced. And We have sent down clear Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.). And for the disbelievers is a disgracing torment.

  1. See the footnote of (V.3:85).

58:6

يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓا۟ ۚ أَحْصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அவன் அறிவிப்பான், அல்லாஹ் (அவர்கள் செய்த) அவற்றைக் கணக்கிட்டுவைத்துள்ளான், (ஆனால்,) அவர்களோ அவற்றை மறந்து விட்டார்கள். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.

On the Day when Allâh will resurrect them all together (i.e. on the Day of Resurrection) and inform them of what they did. Allâh has kept account of it, while they have forgotten it. And Allâh is Witness over all things.