9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 539

/ 604
Page 539

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

57. Al-Hadidسورة الحديد

57:12

يَوْمَ تَرَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَـٰنِهِم بُشْرَىٰكُمُ ٱلْيَوْمَ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

(நபியே!) விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் நீர் காணும் (அந்) நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறங்களிலும் விரைந்து (சென்று) கொண்டிருக்கும், “இன்றைய தினம் உங்களுக்கு நன்மாராயம் சுவனங்களாகும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் நீங்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்று மலக்குகள் கூறுவார்கள்).

On the Day you shall see the believing men and the believing women: their light running forward before them and by their right hands. Glad tidings for you this Day! Gardens under which rivers flow (Paradise), to dwell therein forever! Truly, this is the great success!

57:13

يَوْمَ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلْمُنَـٰفِقَـٰتُ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱنظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ٱرْجِعُوا۟ وَرَآءَكُمْ فَٱلْتَمِسُوا۟ نُورًا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَـٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ

(வேஷதாரிகளான-) முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் விசுவாசங்கொண்டவர்களிடம், “நீங்கள் (முன் செல்லாது எங்களுக்காகச் சிறிது தாமதித்து) எங்களைப் பாருங்கள், உங்களுடைய பிரகாசத்திலிருந்து நாங்கள் (கொஞ்சம் ஒளியை) எடுத்துக்கொள்கிறோம்” என்று கூறும் நாளில், (அவர்களிடம்,) “நீங்கள் உங்கள் பின்புறம் (திரும்பிச்) சென்று பிராகசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறப்படும், அப்பொழுது அவர்களுக்கிடையில் ஒரு தடுப்பு எழுப்பப்படும். அதற்கு வாசலும் இருக்கும், (விசுவாசிகள் இருக்கக்கூடிய) அதன் உட்புறம் -அதில் (அல்லாஹ்வின்) அருளும், அதன் வெளிப்புறம்-அதன் பக்கமிருந்து வேதனையும் இருக்கும்.

On the Day when the hypocrites - men and women - will say to the believers: "Wait for us! Let us get something from your light!" It will be said: "Go back to your rear! Then seek a light!" So a wall will be put up between them, with a gate therein. Inside it will be mercy, and outside it will be torment."

57:14

يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ وَلَـٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

இவர்கள் (உலகத்தில்) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (விசுவாசிகளாகிய) அவர்களை அழைப்பார்கள், (அதற்கு) அவர்கள், (இவர்களிடம்) “மெய்தான்! ஆயினும், நீங்களே உங்களை (நயவஞ்சகத்தால்) துன்பத்திற்குள்ளாகிக் கொண்டீர்கள், அன்றியும், (நாங்கள் அழிக்கப்படுவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (அல்லாஹ்வின் ஏகத்துவத்திலும், நபியின் தூதிலும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டுமிருந்தீர்கள், அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும்வரையில், (உங்களுடைய) பேராசைகள் உங்களைச் சதிசெய்தும் விட்டன, மேலும், ஏமாற்றுகிறவ(னாகிய ஷைத்தா)ன், அல்லாஹ்வைப்பற்றி உங்களை ஏமாற்றியும் விட்டான்.

(The hypocrites) will call the believers: "Were we not with you?" The believers will reply: "Yes! But you led yourselves into temptations, you looked forward for our destruction; you doubted (in Faith) and you were deceived by false desires, till the Command of Allâh came to pass. And the chief deceiver (Satan) deceived you in respect of Allâh."

57:15

فَٱلْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ مَأْوَىٰكُمُ ٱلنَّارُ ۖ هِىَ مَوْلَىٰكُمْ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

ஆகவே, இன்றையத் தினம் உங்களிடமிருந்தோ, அல்லது நிராகரித்தவர்களிடமிருந்தோ (நீங்கள் அடையவேண்டிய தண்டனைக்குப் பதிலாக) யாதொரு நஷ்ட ஈடும் எடுக்கப்படமாட்டாது, நீங்கள் தங்குமிடம் நரகந்தான், அதுதான் உங்களுக்குத் துணை, சென்றடையும் இடமான அது மிகக்கெட்டது (என்று கூறப்படும்).

So this Day no ransom shall be taken from you (hypocrites), nor of those who disbelieved, (in the Oneness of Allâh - Islâmic Monotheism). Your abode is the Fire. That is your maulâ (friend - proper place), and worst indeed is that destination.

57:16

۞ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلْحَقِّ وَلَا يَكُونُوا۟ كَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ ٱلْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَـٰسِقُونَ

விசுவாசங்கொண்டிருந்தோருக்கு, அவர்களது இதயங்கள், அல்லாஹ்வையும், உண்மையிலிருந்து இறங்கிய (வேதத்)தையும் நினைவு கூர்வதற்காக, பயந்து நடுங்கக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? மேலும், இவர்களுக்கு முன்னர் வேதங்கொடுக்கப்பட்டோரைப் போன்று இவர்களும் ஆகிவிடவேண்டாம், பின்னர், அவர்கள் மீது (நபிமார்கள் வருகையின்) ஒரு காலம் நீண்டுவிட்டது, ஆகவே, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகள்.

Has not the time come for the hearts of those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) to be affected by Allâh’s Reminder (this Qur’ân), and that which has been revealed of the truth, lest they become as those who received the Scripture [the Taurât (Torah) and the Injeel (Gospel)] before (i.e. Jews and Christians), and the term was prolonged for them and so their hearts were hardened? And many of them were Fâsiqûn (the rebellious, the disobedient to Allâh).

57:17

ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ், பூமியை-அது (வறண்டு) இறந்ததன் பின்னர் அவன் உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக நிச்சயமாக (நம்முடைய) வசனங்களை நாம் உங்களுக்குத் தெளிவாக்கியிருக்கின்றோம்.

Know that Allâh gives life to the earth after its death! Indeed We have made clear the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) to you, if you but understand.

57:18

إِنَّ ٱلْمُصَّدِّقِينَ وَٱلْمُصَّدِّقَـٰتِ وَأَقْرَضُوا۟ ٱللَّهَ قَرْضًا حَسَنًا يُضَـٰعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ

நிச்சயமாக தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், அல்லாஹ்வுக்காக(ப் பிறருக்குப் பொருளை) அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும்-அவர்களுக்கு அது இரு மடங்காக (அதன் பலன்) ஆக்கப்படுகின்றது, இன்னும் அவர்களுக்கு மிக்க கண்ணியமான (நற்)கூலியும் உண்டு.

Verily, those who give Sadaqât (i.e. Zakât and alms), men and women, and lend Allâh a goodly loan, it shall be increased manifold (to their credit), and theirs shall be an honourable good reward (i.e. Paradise).