மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَـٰهَدَ عَلَيْهُ ٱللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
(நபியே!) நிச்சயமாக (ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது குரைஷியரின் தாக்குதலை எதிர்த்து போர் செய்வதற்காக) உம்மிடம் (பைஅத்) வாக்குறுதி செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்கள் (பைஅத்) வாக்குறுதி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான், அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கின்றது, ஆகவே, எவர் (அவ்வாக்குறுதியை) முறித்துவிடுகின்றரோ, அவர் தனக்குக் கேடாகவே (அதனை) முறித்து விடுகின்றார், இன்னும், எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியைப் பூர்த்தியாக்கி வைக்கின்றாரோ அப்பொழுது அவருக்கு அல்லாஹ் மகத்தான (நற்) கூலியை (நிச்சயமாகக்) கொடுப்பான்.
Verily, those who give Bai‘ah (pledge) to you (O Muhammad صلى الله عليه وسلم) they are giving Bai‘ah (pledge) to Allâh. The Hand of Allâh is over their hands. Then whosoever breaks his pledge, breaks it only to his own harm; and whosoever fulfils what he has covenanted with Allâh, He will bestow on him a great reward.
سَيَقُولُ لَكَ ٱلْمُخَلَّفُونَ مِنَ ٱلْأَعْرَابِ شَغَلَتْنَآ أَمْوَٰلُنَا وَأَهْلُونَا فَٱسْتَغْفِرْ لَنَا ۚ يَقُولُونَ بِأَلْسِنَتِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۚ قُلْ فَمَن يَمْلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًۢا ۚ بَلْ كَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۢا
(அரபிகளிலுள்ள) நாட்டுப்புறத்து வாசிகளில் (நபியே! உம்முடன் போர் செய்ய வராது) பின் தங்கிவிட்டவர்கள் உம்மிடம் (வந்து “நாங்கள் உங்களுடன் போருக்குவராமல்) எங்களுடைய செல்வங்களும், எங்களுடைய குடும்பமும் எங்களைப் பராக்காக்கிவிட்டன, எனவே (அல்லாஹ்விடம்) நீர் எங்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக!” என்று கூறுவார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளைத் தங்கள் நாவுகளினால் அவர்கள் கூறுகின்றனர், (ஆகவே, நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உங்களுக்கு ஒரு இடரை நாடினால் அல்லது அவன் உங்களுக்கு ஒரு பலனை நாடினால் (அதில்) எதையும் அல்லாஹ்விலிருந்து உங்களுக்கு(த் தடுத்துவிடக்கூடிய) அதிகாரம் பெற்றிருப்பவர் யார்? (ஒருவரும்) இல்லை! நீங்கள் செய்பவற்றை, அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Those of the bedouins who lagged behind will say to you: "Our possessions and our families occupied us, so ask forgiveness for us." They say with their tongues what is not in their hearts. Say: "Who then has any power at all (to intervene) on your behalf with Allâh, if He intends you hurt or intends you benefit? Nay, but Allâh is Ever All-Aware of what you do.
بَلْ ظَنَنتُمْ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلْمُؤْمِنُونَ إِلَىٰٓ أَهْلِيهِمْ أَبَدًا وَزُيِّنَ ذَٰلِكَ فِى قُلُوبِكُمْ وَظَنَنتُمْ ظَنَّ ٱلسَّوْءِ وَكُنتُمْ قَوْمًۢا بُورًا
(உங்கள் கூற்றைபோல்) அல்ல! (அல்லாஹ்வுடைய) தூதரும், (அவரை) விசுவாசங்கொண்டவர்களும் (யுத்தத்திலிருந்து) தங்கள் குடும்பத்தினரிடம் ஒரு போதும் திரும்பி வரவே மாட்டார்களென்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள், (ஆதலால்தான் யுத்தத்திற்கு நீங்கள் வரவில்லை) அ(வ்வாறு எண்ணிய)து உங்களுடைய இதயங்களில் அலங்கரமாக்கபட்டுமிருந்தது, நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டுமிருந்தீர்கள், (அதனால்,) நீங்கள் தாம் அழிந்து விடும் சமூகத்தவராகவும் ஆகிவிட்டீர்கள் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
"Nay, but you thought that the Messenger (صلى الله عليه وسلم) and the believers would never return to their families, and that was made fair-seeming in your hearts, and you did think an evil thought and you became a useless people going for destruction."
وَمَن لَّمْ يُؤْمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ سَعِيرًا
அல்லாஹ்வை மற்றும் அவன் தூதரை விசுவாசங் கொள்ளவில்லையே அவர், (நிராகரிப்பவர்தான், ஆகவே,) அத்தகைய நிராகரிப்போருக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
And whosoever does not believe in Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم), then verily, We have prepared for the disbelievers a blazing Fire.1
See the footnote of (V.3:85).
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
மேலும், வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான், அவன் நாடியவர்களை வேதனையும் செய்கிறான், மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கிறான்.
And to Allâh belongs the sovereignty of the heavens and the earth. He forgives whom He wills, and punishes whom He wills. And Allâh is Ever Oft-Forgiving, Most Merciful.
سَيَقُولُ ٱلْمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقْتُمْ إِلَىٰ مَغَانِمَ لِتَأْخُذُوهَا ذَرُونَا نَتَّبِعْكُمْ ۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُوا۟ كَلَـٰمَ ٱللَّهِ ۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ ٱللَّهُ مِن قَبْلُ ۖ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا
(நபியே!) பின்தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களின் பால்-அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் செல்லும்போது, “எங்களை விடுங்கள், நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று கூறுவார்கள், இவர்கள், அல்லாஹ்வுடைய வாக்குறுதியை மாற்றி விடவே நாடுகின்றார்கள், (ஆகவே, அவர்களிடம்,) “நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம், (இதற்கு) முன்னர் இவ்வாறே அல்லாஹ் கூறிவிட்டான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அதற்கு) அவர்கள், “இல்லை, நீங்கள் தான் நம்மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” என்று கூறுவார்கள், அன்று! அவர்கள் சொற்பமாகவே அன்றி விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.
Those who lagged behind will say, when you set forth to take the spoils, "Allow us to follow you." They want to change Allâh’s Words. Say: "You shall not follow us; thus Allâh has said beforehand." Then they will say: "Nay, you envy us." Nay, but they understand not except a little.