(எனினும்) நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர், (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோர்-அவர்களின் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” (எனக் கூறுவார்கள்).
Verily, those who say: "Our Lord is Allâh (Alone)," and then they stand firm,1 on them the angels will descend (at the time of their death) (saying): "Fear not, nor grieve! But receive the glad tidings of Paradise which you have been promised!
In Arabic Istaqâmû: Stand firm i.e. they followed (really) the religion of Islamic Monotheism, believed in the Oneness of Allâh, and worshipped none but Him (Alone), and performed all that was ordained by Allâh (good deeds) and abstained from all that was forbidden by Allâh (sins and evil deeds).
நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள், அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு, இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு.
"We have been your friends in the life of this world and are (so) in the Hereafter. Therein you shall have (all) that your inner-selves desire, and therein you shall have (all) for which you ask.
எவர் அல்லாஹ் அளவில் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ, அவரைவிடச் சொல்லால் மிக்க அழகானவர் யார்?
And who is better in speech than he who [says: "My Lord is Allâh (believes in His Oneness)," and then stands firm (acts upon His Order), and] invites (men) to Allâh’s (Islâmic Monotheism), and does righteous deeds, and says: "I am one of the Muslims."
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது (ஆதலால், நபியே!) எது மிக அழகானதோ அதைக்கொண்டு (தீமையை) தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர், உம்முடைய உற்ற சிநேகிதரைப் போல் ஆகிவிடுவார்.
The good deed and the evil deed cannot be equal. Repel (the evil) with one which is better (i.e. Allâh orders the faithful believers to be patient at the time of anger,[2] and to excuse those who treat them badly) then verily he, between whom and you there was enmity, (will become) as though he was a close friend.
பொறுமையாய் இருந்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு) எவரும் அதனை அடையமாட்டார்கள், மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர, (மற்ற) எவரும் அதனை அடையமாட்டார்கள்.
But none is granted it (the above quality) except those who are patient - and none is granted it except the owner of the great portion (of happiness in the Hereafter i.e. Paradise and of a high moral character) in this world.
மேலும், (நபியே!) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசாட்டம் உம்மைத் தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லாஹ்விடத்தில் நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவரையும்) செவியேற்பவன், நன்கறிபவன்.
And if an evil whisper from Shaitân (Satan) tries to turn you away (O Muhammad صلى الله عليه وسلم) (from doing good), then seek refuge in Allâh. Verily, He is the All-Hearer, the All-Knower.
இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (அல்லாஹ்வைப்பற்றி அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸஜ்தா செய்யவேண்டாம், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்விற்கே ஸஜ்தா செய்யுங்கள்.
And from among His Signs are the night and the day, and the sun and the moon. Prostrate yourselves not to the sun nor to the moon, but prostrate yourselves to Allâh Who created them, if you (really) worship Him.