9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 442

/ 604
Page 442

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

36. Ya-Sinسورة يس

36:28

۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ

மேலும், அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர், அவருடைய சமூகத்தவர் மீது வானத்திலிருந்து (அவர்களை அழிக்க) யாதொரு படையையும் நாம் இறக்கிவைக்கவில்லை, (அவ்வாறு) இறக்கிவைப்பவர்களாகவும் நாம் இல்லை.

And We sent not against his people after him a host from the heaven, nor was it needful for Us to send (such a thing).

36:29

إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَـٰمِدُونَ

(அவர்களின் அழிவு) ஒரே ஒரு பயங்கர சப்தத்தைத் தவிர வேறு இல்லை, அப்பொழுது அவர்கள் நூர்ந்து (சாம்பலாகி)விட்டவர்கள் ஆயினர்.

It was but one Saihah (shout) and lo! they (all) were still (silent,dead,destroyed).

36:30

يَـٰحَسْرَةً عَلَى ٱلْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

அடியார்கள் மீதுள்ள கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதரும் -அவரை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டவர்களாக இருந்தேயல்லாது வருவதில்லை.

Alas for mankind! There never came a Messenger to them but they used to mock at him.

36:31

أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ

“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலை முறையினரை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக (அழிந்துவிட்ட) அவர்கள் இவர்கள் பால் திரும்பமாட்டார்கள்” என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

Do they not see how many of the generations We have destroyed before them? Verily, they will not return to them.

36:32

وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ

மேலும், அவர்கள் அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்பட்டு நம்மிடம் முன்னிலைப்படுத்தப்படுபவர்களே தவிர வேறில்லை.

And surely, all - everyone of them will be brought before Us.

36:33

وَءَايَةٌ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَـٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ

இறந்த (பொட்டலான) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதனை நாம் (மழையைக் கொண்டு) உயிர்ப்பிக்கிறோம், இன்னும், அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம், அப்போது அதிலிருந்து(தான்) அவர்கள் உண்ணுகின்றார்கள்.

And a sign for them is the dead land. We give it life, and We bring forth from it grains, so that they eat thereof.

36:34

وَجَعَلْنَا فِيهَا جَنَّـٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَـٰبٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ ٱلْعُيُونِ

இன்னும், அதில் நாம் பேரீச்சை, திராட்சைகளிலிருந்து தோட்டங்களை அமைத்தோம், அதில் நீரூற்றுகளைப் பீறிட்டு ஓடவும் செய்கின்றோம்.

And We have made therein gardens of date-palms and grapes, and We have caused springs of water to gush forth therein.

36:35

لِيَأْكُلُوا۟ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ

அதன் கனி(வர்க்கங்)களிலிருந்து அவர்கள் உண்ணுவதற்காக (இவைகளைப் படைத்தோம்), அவர்களுடைய கைகள் அதைச் செய்யவில்லை, ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?

So that they may eat of the fruit thereof - and their hands made it not. Will they not, then, give thanks?

36:36

سُبْحَـٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை-அவை ஒவ்வொன்றையும் படைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.

Glory be to Him Who has created all the pairs of that which the earth produces, as well as of their own (human) kind (male and female), and of that which they know not.

36:37

وَءَايَةٌ لَّهُمُ ٱلَّيْلُ نَسْلَخُ مِنْهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ

இரவும் அவர்களுக்கோர் அத்தாட்சியாகும், அதிலிருந்து பகலை நாம் கழற்றுகின்றோம், அப்போது இவர்கள் இருளில் ஆகிவிடுகிறார்கள்.

And a sign for them is the night. We withdraw therefrom the day, and behold, they are in darkness.

36:38

وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ

சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்.

And the sun runs on its fixed course for a term (appointed). That is the Decree of the All-Mighty, the All-Knowing.

36:39

وَٱلْقَمَرَ قَدَّرْنَـٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلْعُرْجُونِ ٱلْقَدِيمِ

இன்னும், சந்திரனை-(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சங்குலையின் குச்சி போல் அது மீண்டுவிடும் வரையில், அதற்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

And the moon, We have measured for it mansions (to traverse) till it returns like the old dried curved date stalk.

36:40

لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ ۚ وَكُلٌّ فِى فَلَكٍ يَسْبَحُونَ

சூரியன்-அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்கமுடியாது, இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன.

It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.