மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
மேலும், (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்தி விடுவார்களானால் (பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! ஏனெனில்,) உமக்கு முன்னர் (வந்த) தூதர்களும் பொய்ப்படுத்தப் பட்டனர், அன்றியும் அல்லாஹ்விடமே சகல காரியங்களும் மீட்டுக் கொண்டு வரப்படும்.
And if they belie you (O Muhammad صلى الله عليه وسلم), so were Messengers belied before you. And to Allâh return all matters (for decision).
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களைத்திட்டமாக ஏமாற்றி விட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுகிறவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களைத் திட்டமாக (மோசடியில் ஆக்கி) ஏமாற்றிவிட வேண்டாம்.
O mankind! Verily, the Promise of Allâh is true. So let not this present life deceive you, and let not the chief deceiver (Satan) deceive you about Allâh.
إِنَّ ٱلشَّيْطَـٰنَ لَكُمْ عَدُوٌّ فَٱتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُوا۟ حِزْبَهُۥ لِيَكُونُوا۟ مِنْ أَصْحَـٰبِ ٱلسَّعِيرِ
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாக இருக்கின்றான், ஆகவே, அவனை நீங்களும் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தனக்கு வழிபட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்.
Surely, Shaitân (Satan) is an enemy to you, so take (treat) him as an enemy. He only invites his Hizb (followers) that they may become the dwellers of the blazing Fire.
ٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
(ஷைத்தானைப் பின்பற்றி உண்மையை) நிராகரிக்கின்றார்களே அத்ததகையோர்-அவர்களுக்கு கடினமான வேதனையுண்டு. மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மன்னிப்பும், (மிகப்) பெரிய (நற்)கூலியும் உண்டு.
Those who disbelieve, theirs will be a severe torment; and those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and do righteous good deeds, theirs will be forgiveness and a great reward (i.e. Paradise).
أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنًا ۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَٰتٍ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَصْنَعُونَ
எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கின்றாரோ அவரா? (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?) ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான், தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான், ஆகவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய் விடவேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
Is he, then, to whom the evil of his deeds is made fair-seeming, so that he considers it as good (equal to one who is rightly guided)? Verily, Allâh sends astray whom He wills, and guides whom He wills. So destroy not yourself (O Muhammad صلى الله عليه وسلم) in sorrow for them. Truly, Allâh is the All-Knower of what they do!
وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَـٰحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَـٰهُ إِلَىٰ بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ
மேலும், அல்லாஹ் எத்தகையவனென்றால், காற்றுகளை அவன் அனுப்புகிறான், அவை மேகங்களைக் கிளறுகின்றன, பின்னர், நாம் அவைகளை இறந்து போன ஊருக்கு (மழையாகப் பொழிவிக்க) இழுத்துச் செல்கிறோம், அப்போது அதனைக் கொண்டு பூமியை அது (வறண்டு) இறந்துபோன பின் உயிர்ப்பிக்கின்றோம். (மரணித்தோர் மறுமையில்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறுதான்.
And it is Allâh Who sends the winds, so that they raise up the clouds, and We drive them to a dead land, and revive therewith the earth after its death. As such (will be) the Resurrection!
مَن كَانَ يُرِيدُ ٱلْعِزَّةَ فَلِلَّهِ ٱلْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ ٱلْكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلْعَمَلُ ٱلصَّـٰلِحُ يَرْفَعُهُۥ ۚ وَٱلَّذِينَ يَمْكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَمَكْرُ أُو۟لَـٰٓئِكَ هُوَ يَبُورُ
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும், தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன, நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது, மேலும், (நபியே!) தீமைகளுக்குச் சதி செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு, இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அது அழிந்தே போகும்.
Whosoever desires honour, (power and glory), then to Allâh belong all honour, power and glory [and one can get honour, power and glory only by obeying and worshipping Allâh (Alone)]. To Him ascend (all) the goodly words, and the righteous deeds exalt it (i.e. the goodly words are not accepted by Allâh unless and until they are followed by good deeds), but those who plot evils, theirs will be severe torment. And the plotting of such will perish.
وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَٰجًا ۚ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِۦٓ إِلَّا فِى كِتَـٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
மேலும் அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து -பின்னர் (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான், அவன் அறிவைக்கொண்டே தவிர எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதும் இல்லை, அவள் பிரசவிப்பதும் இல்லை, வயதானவரின் வயது அதிகப்படுத்தப்படுவதும், அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை, நிச்சயமாக இ(வை யாவற்றையும் செய்வ)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
And Allâh did create you (Adam) from dust, then from Nutfah (male and female discharge semen drops i.e. Adam’s offspring), then He made you pairs (male and female). And no female conceives or gives birth but with His Knowledge. And no aged man is granted a length of life nor is a part cut off from his life (or another man’s life), but is in a Book (Al-Lauh Al-Mahfûz ) Surely, that is easy for Allâh.