மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرٌّ دَعَوْا۟ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ
மனிதர்களை ஏதேனுமொரு தீங்கு தொட்டுவிடுமானால் அவர்கள் தங்கள் இரட்சகனை-(கலப்பற்ற இதயத்துடன் அவனுக்கு இணையளார்களை ஆக்காது) அவன் பாலே திரும்பியவர்களாக (அவனை மட்டும் பிரார்த்தித்து) அழைக்கின்றார்கள், பின்னர், அவன் (அத்தீங்கை நீக்கி) அவர்களை தன்னிடமிருந்துள்ள அருளை சுவைக்கும்படிச் செய்தால், அப்பொழுது அவர்களிலிருந்து ஒரு பிரிவினர், தங்களுடைய இரட்சகனுக்கே இணை வைக்கின்றனர்.
And when harm touches men, they cry sincerely only to their Lord (Allâh), turning to Him in repentance; but when He gives them a taste of His Mercy, behold, a party of them associates partners in worship with their Lord.
لِيَكْفُرُوا۟ بِمَآ ءَاتَيْنَـٰهُمْ ۚ فَتَمَتَّعُوا۟ فَسَوْفَ تَعْلَمُونَ
நாம் அவர்களுக்குக் கொடுத்ததை அவர்கள் நிராகரிப்பதற்காக (இணை வைக்கிறார்கள்) ஆகவே, நீங்கள் (இவ்வுலகில்) சுகமனுபவியுங்கள், (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
So as to be ungrateful for the graces which We have bestowed on them. Then enjoy (your short life); but you will come to know.
أَمْ أَنزَلْنَا عَلَيْهِمْ سُلْطَـٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوا۟ بِهِۦ يُشْرِكُونَ
அல்லது (வணக்கத்தில் இணையாக்கும்) இவர்களுக்கு யாதோர் சான்றை நாம் இறக்கி வைத்திருக்கிறோமோ? அப்போது அது, அவர்கள் எதைக் கொண்டு இணைவைத்து (அவர்கள் வணங்கி)க் கொண்டிருக்கிறார்களோ அது பற்றிகூறும், (ஆனால் அவ்வாறு எதுவுமில்லை).
Or have We revealed to them an authority (a Scripture), which speaks of that which they have been associating with Him?
وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةً فَرِحُوا۟ بِهَا ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ
இன்னும் நாம் மனிதர்களுக்கு (நம்முடைய) அருளைச்சுவைக்கச் செய்தால், அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், அவர்களுடைய கைகள் முற்படுத்தியவற்றின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீ்ங்கேற்பட்டால், அப்பொழுது அவர்கள் நிராசையடைந்து விடுகிறார்கள்.
And when We cause mankind to taste of mercy, they rejoice therein; but when some evil afflicts them because of (evil deeds and sins) that their (own) hands have sent forth, behold, they are in despair!
أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரங்களை விசாலமாக்குகிறான், (தான் நாடியவர்களுக்கு) அளவோடு (சுருக்கியும்) கொடுக்கிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? விசுவாசங்கொண்ட சமூகத்தாருக்கு, நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Do they not see that Allâh enlarges the provision for whom He wills and straitens (it for whom He wills). Verily, in that are indeed signs for a people who believe.
فَـَٔاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ ۚ ذَٰلِكَ خَيْرٌ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
ஆகவே (நபியே! உமது பொருளில்) உறவினருக்கு-அவருடைய உரிமையை கொடுத்துவிடுவீராக! (அவ்வாறே) ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவர்களுடைய பாத்தியதையைக் கொடுத்துவிடுவீராக!) அல்லாஹ்வுடைய திரு முகத்தை நாடுகிறவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும், மேலும் இத்தகையோர் தாம் வெற்றியாளர்கள்.
So give to the kindred his due, and to Al-Miskîn (the poor) and to the wayfarer. That is best for those who seek Allâh’s Countenance; and it is they who will be successful.
وَمَآ ءَاتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَا۟ فِىٓ أَمْوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرْبُوا۟ عِندَ ٱللَّهِ ۖ وَمَآ ءَاتَيْتُم مِّن زَكَوٰةٍ تُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய பொருட்களில் (சேர்ந்து உங்கள் பொருள்களும்) பெருகி (வளர்ந்து) விடுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கிறீர்களே அது அல்லாஹ்விடத்தில் (பெருகி) வளர்வதில்லை, அன்றியும், அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தை நாடியவர்களுக்கு ஜகாத்திலிருந்து எதை நீங்கள் கொடுக்கின்றீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளரும்.) இத்தகையோர்தாம் (தம் கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவர்.
And that which you give in gift1 (to others), in order that it may increase (your wealth by expecting to get a better one in return) from other people’s property, has no increase with Allâh; but that which you give in Zakât (sadaqa - charity etc.) seeking Allâh’s Countenance, then those, they shall have manifold increase.
See Tafsîr Ibn Kathir
ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۖ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَفْعَلُ مِن ذَٰلِكُم مِّن شَىْءٍ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் உங்களைப் படைத்தான், பின்னர் அவன் உங்களுக்கு வாழ்வாதாரங்களைக் கொடுத்தான், பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான், பிறகு அவன் உங்களை உயிர்ப்பிப்பான், அவற்றில் எதையேனும் ஒன்றைச் செய்பவர்கள் உங்கள் இணையாளர்களில் (எவரேனும்) உண்டா? அவன் தூயவன், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அவனே மிகவும் உயர்ந்தவன்.
Allâh is He Who created you, then provided food for you, then will cause you to die, then (again) He will give you life (on the Day of Resurrection). Is there any of your (so-called) partners (of Allâh) that do anything of that? Glory be to Him! And Exalted be He above all that (evil) they associate (with Him).
ظَهَرَ ٱلْفَسَادُ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِى ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ ٱلَّذِى عَمِلُوا۟ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு-) குழப்பம் வெளிப்பட்டுவிட்டதும், அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதிக்கிறான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்.
Evil (sins and disobedience to Allâh) has appeared on land and sea because of what the hands of men have earned (by oppression and evil deeds), that He (Allâh) may make them taste a part of that which they have done, in order that they may return (by repenting to Allâh, and begging His Pardon).