9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 401

/ 604
Page 401

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

29. Al-'Ankabutسورة العنكبوت

29:39

وَقَـٰرُونَ وَفِرْعَوْنَ وَهَـٰمَـٰنَ ۖ وَلَقَدْ جَآءَهُم مُّوسَىٰ بِٱلْبَيِّنَـٰتِ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ وَمَا كَانُوا۟ سَـٰبِقِينَ

காரூனையும், ஃபிர் அவ்னையும், ஹாமானையும் (நாம் அழித்து விட்டோம்), நிச்சயமாக மூஸா, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருந்தார், பின்னர் அவர்கள் (அவரை நிராகரித்து விட்டு,) பூமியில் பெருமை கொண்டு நடந்தனர், (அதனால் நம் வேதனையிலிருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்பவர்களாகவும் இருக்கவில்லை.

And (We destroyed also) Qârûn (Korah), Fir‘aun (Pharaoh), and Hâmân. And indeed Mûsâ (Moses) came to them with clear Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), but they were arrogant in the land, yet they could not outstrip Us (escape Our punishment).

29:40

فَكُلًّا أَخَذْنَا بِذَنۢبِهِۦ ۖ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ ٱلصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ ٱلْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

ஆகவே, (அவர்கள்) ஒவ்வொருவரையும், அவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்துக்கொண்டோம், அவர்களில் எவர் மீது (கடும்புயல்காற்றின் மூலமாக) நாம் கல்மாரியை அனுப்பினோமோ அவர்களும் உள்ளனர், மேலும், அவர்களில் எவரைப் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டதோ அவர்களும் உள்ளனர், இன்னும், அவர்களில் (காரூன் போன்று) எவரைப் பூமிக்குள் நாம் அழுந்தச் செய்துவிட்டோமோ அவர்களும் உள்ளனர், மேலும், அவர்களில் (ஃபிர் அவ்ன், ஹாமான் போன்று கடலில்) நாம் மூழ்கடித்தவர்களும் உள்ளனர், அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை, எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநியாயம் இழைத்துக் கொள்பவர்களாக இருந்தனர்.

So We punished each (of them) for his sins; of them were some on whom We sent Hâsib (a violent wind with shower of stones) [as on the people of Lût (Lot)], and of them were some who were overtaken by As-Saihah [torment - awful cry. (as Thamûd or Shu‘aib’s people)], and of them were some whom We caused the earth to swallow [as Qârûn (Korah)], and of them were some whom We drowned [as the people of Nûh (Noah), or Fir‘aun (Pharaoh) and his people]. It was not Allâh Who wronged them, but they wronged themselves.

29:41

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்து கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும்; அது ஒரு வீட்டை எடுத்து கொண்டது, இன்னும், நிச்சயமாக வீடுகளில் மிகப்பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும்; (இதை) அவர்கள் அறிவார்களாயின் (தாங்கள் அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டதன் தீமையை அறிவர்.)

The likeness of those who take (false deities as) Auliyâ’ (protectors, helpers) other than Allâh is the likeness of a spider who builds (for itself) a house; but verily, the frailest (weakest) of houses is the spider’s house - if they but knew.

29:42

إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِن دُونِهِۦ مِن شَىْءٍ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

அவனையன்றி அவர்கள் எதனை அழைக்கின்றார்களோ, அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிவான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.

Verily, Allâh knows what things they invoke instead of Him. He is the All-Mighty, the All-Wise.1

  1. See the footnote of (V.2:165).

29:43

وَتِلْكَ ٱلْأَمْثَـٰلُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۖ وَمَا يَعْقِلُهَآ إِلَّا ٱلْعَـٰلِمُونَ

மேலும், இவ்வுதாரணங்கள் -மனிதர்களுக்காக இவற்றை நாம் கூறுகிறோம், (சிந்தித்தறியக்கூடிய) அறிவுடையவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனை விளங்கிக்கொள்ளவுமாட்டார்கள்.

And these similitudes We put forward for mankind; but none will understand them except those who have knowledge (of Allâh and His Signs).

29:44

خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّلْمُؤْمِنِينَ

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டு படைத்தான் விசுவாசங்கொண்டோருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.

(Allâh says to His Prophet Muhammad صلى الله عليه وسلم): "Allâh (Alone) created the heavens and the earth with truth (and none shared Him in their creation)." Verily! Therein is surely a sign for those who believe.

29:45

ٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِنَ ٱلْكِتَـٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَ ۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنْهَىٰ عَنِ ٱلْفَحْشَآءِ وَٱلْمُنكَرِ ۗ وَلَذِكْرُ ٱللَّهِ أَكْبَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

(நபியே! குர் ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக, தொழுகையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவு கூருவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரியதாகும், இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான்.

Recite (O Muhammad صلى الله عليه وسلم) what has been revealed to you of the Book (the Qur’ân), and perform As-Salât (Iqamât-as-Salât). Verily, As-Salât (the prayer) prevents from Al-Fahshâ’ (i.e. great sins of every kind, unlawful sexual intercourse) and Al-Munkar (i.e. disbelief, polytheism, and every kind of evil wicked deed)1 and the remembering2 (praising) of (you by) Allâh (in front of the angels) is greater indeed [than your remembering (praising) of Allâh in prayers. And Allâh knows what you do.

  1. It is said by Ibn ‘Abbâs and ‘Abdullâh bin Mas‘ûd رضي الله عنهم: If the Salât (prayer) of anyone does not prevent him from Al-Fâhshâ’ and Al-Munkar (all kinds of evil, illegal and sinful deeds), then his Salât (prayer) increases him in nothing but loss, and to be far away from his Lord (Allah) [Tafsir Al-Qurtubi].

  2. See the footnotes of (V.13:28) and also (B) of (V.2:152).