8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 397

/ 604
Page 397

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

29. Al-'Ankabutسورة العنكبوت

29:7

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ

இன்னும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்- அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் நீக்கிவிடுவோம், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூலியாகவும் கொடுப்போம்.

Those who believe [in the Oneness of Allâh (Monotheism) and in Messenger Muhammad صلى الله عليه وسلم , and do not give up their faith because of the harm they receive from the polytheists], and do righteous good deeds, surely, We shall expiate from them their evil deeds and shall reward them according to the best of that which they used to do.1

  1. See the footnote of (V.9:121).

29:8

وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًا ۖ وَإِن جَـٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ فَلَا تُطِعْهُمَآ ۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

மேலும், தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம், அன்றியும் எதைப் பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே!) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம், என்னிடமே உங்களின் மீளுதல் இருக்கிறது, அது சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

And We have enjoined on man to be good and dutiful to his parents; but if they strive to make you join with Me (in worship) anything (as a partner) of which you have no knowledge, then obey them not. Unto Me is your return and I shall tell you what you used to do.

29:9

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى ٱلصَّـٰلِحِينَ

மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம்.

And for those who believe (in the Oneness of Allâh and the other articles of Faith)1 and do righteous good deeds, surely, We shall make them enter with (in the entrance of) the righteous (in Paradise).

  1. See the footnote (b) of (V.3:85)

29:10

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِىَ فِى ٱللَّهِ جَعَلَ فِتْنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِ وَلَئِن جَآءَ نَصْرٌ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمْ ۚ أَوَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِمَا فِى صُدُورِ ٱلْعَـٰلَمِينَ

இன்னும் மனிதர்களில், “அல்லாஹ்வை நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம்” என்று கூறுகின்ற சிலர் இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் துன்புறுத்தப்பட்டால், மனிதர்களால் ஏற்படும் (அத்)துன்பத்தை, அல்லாஹ்வுடைய வேதனையைப் போலாக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்கின்றனர். உமதிரட்சகனிடமிருந்து (உங்களுக்கு) ஏதேனும் உதவி வந்து விட்டாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம்” என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?

Of mankind are some who say: "We believe in Allâh." But if they are made to suffer for the sake of Allâh, they consider the trial of mankind as Allâh’s punishment; and if victory comes from your Lord, (the hypocrites) will say: "Verily we were with you (helping you)." Is not Allâh Best Aware of what is in the breasts of the ‘Âlamîn (mankind and jinn).

29:11

وَلَيَعْلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَيَعْلَمَنَّ ٱلْمُنَـٰفِقِينَ

(ஆகவே,) விசுவாசங்கொண்டிருப்போரையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளையும், நிச்சயமாக அவன் நன்கறிவான்.

Verily, Allâh knows those who believe, and verily, He knows the hypocrites [i.e. Allâh will test the people with good and hard days to discriminate the good from the wicked, although Allâh knows all that before putting them to test].

29:12

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبِعُوا۟ سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَـٰيَـٰكُمْ وَمَا هُم بِحَـٰمِلِينَ مِنْ خَطَـٰيَـٰهُم مِّن شَىْءٍ ۖ إِنَّهُمْ لَكَـٰذِبُونَ

நிராகரிப்போ(ரில்பல)ர் விசுவாசிகளிடம், “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள், (அதனால் ஏதும் குற்றம் ஏற்பட்டால்,) உங்களுடைய குற்றங்களையும் நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்றும் கூறுகின்றனர், அன்றியும், அவர்களுடைய குற்றங்களிலிருந்து எதனையுமே இவர்கள் சுமந்து கொள்பவர்களாக இல்லை- நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!

And those who disbelieve say to those who believe: "Follow our way and we will verily bear your sins." Never will they bear anything of their sins. Surely, they are liars.

29:13

وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَّعَ أَثْقَالِهِمْ ۖ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ عَمَّا كَانُوا۟ يَفْتَرُونَ

அன்றியும், அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளையும் தம் (பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பாவச்) சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள், இன்னும் அவர்கள் இட்டுகட்டிகொண்டிருந்தவைகளைப் பற்றியும் நிச்சயமாக மறுமை நாளில் (விசாரித்துக்) கேட்கப்படுவார்கள்.

And verily, they shall bear their own loads, and other loads besides their own; and verily, they shall be questioned on the Day of Resurrection about that which they used to fabricate.

29:14

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمْ ظَـٰلِمُونَ

இன்னும், (நபி) நூஹை (நம்முடைய தூதராக) அவருடைய சமூகத்தார்பால் திட்டமாக நாம் அனுப்பிவைத்தோம், அவர் ஐம்பது ஆண்டுகள் நீங்கலாக ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே தங்கியிருந்தார். பின்னர் அவர்கள் (விசுவாசங்கொள்ளாது) அநியாயக்காரர்களாக இருந்தநிலையில் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

And indeed We sent Nûh (Noah) to his people, and he stayed among them a thousand years less fifty years [inviting them to believe in the Oneness of Allâh (Monotheism), and discard the false gods and other deities]; and the Deluge overtook them while they were Zâlimûn (wrong-doers, polytheists, disbelievers).