9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 387

/ 604
Page 387

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

28. Al-Qasasسورة القصص

28:14

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسْتَوَىٰٓ ءَاتَيْنَـٰهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் (நற்) கூலி வழங்குவோம்.

And when he attained his full strength, and was perfect (in manhood), We bestowed on him Hukm (Prophethood and right judgement of the affairs) and religious knowledge [of the religion of his forefathers i.e. Islâmic Monotheism]. And thus do We reward the Muhsinûn (i.e. good doers. See the footnote of V.9:120).

28:15

وَدَخَلَ ٱلْمَدِينَةَ عَلَىٰ حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَـٰذَا مِن شِيعَتِهِۦ وَهَـٰذَا مِنْ عَدُوِّهِۦ ۖ فَٱسْتَغَـٰثَهُ ٱلَّذِى مِن شِيعَتِهِۦ عَلَى ٱلَّذِى مِنْ عَدُوِّهِۦ فَوَكَزَهُۥ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ ۖ قَالَ هَـٰذَا مِنْ عَمَلِ ٱلشَّيْطَـٰنِ ۖ إِنَّهُۥ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِينٌ

அந்நகரத்தில்- அதைச்சார்ந்தோர் பாராமுகமாக (அயர்ந்து தூக்கத்தில்) இருந்த சமயத்தில் (மூஸாவாகிய) அவர் நுழைந்தார், அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களை அதில் அவர் கண்டார், இ(தில் ஒரு)வன் அவருடைய கூட்டத்தைச் சார்ந்தவன், இ(ன்னொரு)வன் அவருடைய பகைவனைச் சார்ந்தவன். அப்போது அவர் இனத்தைச் சேர்ந்தவன், அவருடைய பகைவனைச் சார்ந்தவனக்கு எதிராக உதவி செய்யுமாறு அவரிடத்தில் கோரினான், (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தினார், அவன் காரியத்தை முடித்துவிட்டார். (அவன் இறந்துவிட்டதை அறிந்த மூஸா,) “இதை ஷைத்தானுடைய செயலில் உள்ளதாகும், நிச்சயமாக அவன் பகிரங்கமாக வழி கெடுக்கக்கூடிய விரோதி” எனக் கூறினார்.

And he entered the city at a time of unawareness of its people: and he found there two men fighting, - one of his party (his religion - from the Children of Israel), and the other of his foes. The man of his (own) party asked him for help against his foe, so Mûsâ (Moses) struck him with his fist and killed him. He said: "This is of Shaitan’s (Satan) doing: verily, he is a plain misleading enemy."

28:16

قَالَ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

அவர் “என் இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்துவிட்டேன், ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! என்று (பிரார்த்தித்துக்) கூறினார். அப்போது (அல்லாஹ்வாகிய) அவன் அவரை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவனே மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்கிறவன்.

He said: "My Lord! Verily, I have wronged myself, so forgive me." Then He forgave him. Verily, He is the Oft-Forgiving, the Most Merciful.

28:17

قَالَ رَبِّ بِمَآ أَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ

“என் இரட்சகனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக, (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன்” என்று அவர் கூறினார்.

He said: "My Lord! For that with which You have favoured me, I will never more be a helper of the Mujrimûn (criminals, disbelievers, polytheists, sinners)!"

28:18

فَأَصْبَحَ فِى ٱلْمَدِينَةِ خَآئِفًا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِى ٱسْتَنصَرَهُۥ بِٱلْأَمْسِ يَسْتَصْرِخُهُۥ ۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِىٌّ مُّبِينٌ

பின்னர் (மறுநாள்) காலையில் அந்நகரத்தில் (தமக்கு என்ன ஏற்படுமோ என்று) பயந்தவராக (அங்கும் இங்குமாக அவர் கவனித்துக்கொண்டிருந்த அச்சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன், (பின்னர் தனக்கு உதவி கேட்டு) கூச்சலிட்டு இவரை அழைத்தான்; அதற்கு மூஸா அவனிடம், “நீ பகிரங்கமான அழிச்சாட்டியக்காரனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.

So he became afraid, looking about in the city (waiting as to what will be the result of his crime of killing), when behold, the man who had sought his help the day before, called for his help (again). Mûsâ (Moses) said to him: "Verily, you are a plain misleader!"

28:19

فَلَمَّآ أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِٱلَّذِى هُوَ عَدُوٌّ لَّهُمَا قَالَ يَـٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقْتُلَنِى كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِٱلْأَمْسِ ۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارًا فِى ٱلْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلْمُصْلِحِينَ

பின்னர், தம்மிருவருக்கும் விரோதியாயிருந்தவனைப் பிடிக்க (மூஸாவாகிய) அவர் நாடியபோது, (மூஸாவுடைய கூட்டத்தைச் சார்ந்தவன், அதைத்தவறாக புரிந்துகொண்டு) “மூஸாவே! நேற்றையத்தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல், என்னையும் நீர் கொலை செய்ய நாடுகிறீரா? பூமியில் வம்பனாக ஆவதைத் தவிர (வேறு எதனையும்) நீர் நாடவில்லை, இன்னும், சீர்திருத்துவோரில் உள்ளவராவதையும் நீர் நாடவில்லை” என்று அவன் கூறினான்.

Then when he decided to seize the man who was an enemy to both of them, the man said: "O Mûsâ (Moses)! Is it your intention to kill me as you killed a man yesterday? Your aim is nothing but to become a tyrant in the land, and not to be one of those who do right."

28:20

وَجَآءَ رَجُلٌ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَـٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّـٰصِحِينَ

மேலும், பட்டணத்தின் கோடியிலிருந்து மனிதர் விரைவாக (ஓடி) வந்து, “மூஸாவே! நிச்சயமாக உம்மைக் கொலை செய்துவிட, (இந்நகர) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்; ஆதலால், நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும்; நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன்” என்று கூறினார்.

And there came a man running, from the farthest end of the city. He said: "O Mûsâ (Moses)! Verily, the chiefs are taking counsel together about you, to kill you, so escape. Truly, I am one of the good advisers to you."

28:21

فَخَرَجَ مِنْهَا خَآئِفًا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

ஆகவே, அவர் பயந்தவராக (தன்னைப்பற்றி கவலைப்பட்டு அங்குமிங்கும் திரும்பி) கவனித்தவராக அ(வ்வூரான)தைவிட்டு வெளியேறி, “என் இரட்சகனே! அநியாயக்காரர்களின் கூட்டத்திலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!” என்று கூறினார்.

So he escaped from there, looking about in a state of fear. He said: "My Lord! Save me from the people who are Zâlimûn (polytheists and wrong-doers)!"