மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
سَلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ كَمْ ءَاتَيْنَـٰهُم مِّنْ ءَايَةٍۭ بَيِّنَةٍ ۗ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
தெளிவான அத்தாட்சியிலிருந்து எத்தனையை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீர் கேட்பீராக, (அவ்வாறிருக்க அவர்களில்) எவர் அல்லாஹ்வுடைய அருட்கொடையை- அது தம்மிடம் வந்ததன் பின் மாற்றிவிடுகிறாரோ அப்பொழுது அவரை தண்டனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன்.
Ask the Children of Israel how many clear Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) We gave them. And whoever changes Allâh’s Favour after it had come to him, [e.g. renounces the Religion of Allâh (Islâm) and accepts Kufr (disbelief)] then surely, Allâh is Severe in punishment.
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۘ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
நிராகரித்து விட்டார்களே அத்தகையவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்காரமாக்கப் பட்டிருக்கின்றது. (அதனால் மமதை கொண்டு) அவர்கள் விசுவாசங் கொண்டிருந்தோரை பரிகசிக்கவும் செய்கிறார்கள். (ஆனால் அல்லாஹ்வை பயந்து நடந்தார்களே, அத்தகையவர்கள் மறுமை நாளில் இவர்களுக்கு மேலாகவும் இருப்பார்கள். மேலும், அல்லாஹ் தான் நாடியவருக்குக் கணக்கின்றியே அளிப்பான்.
Beautified is the life of this world for those who disbelieve, and they mock at those who believe. But those who obey Allâh’s Orders and keep away from what He has forbidden, will be above them on the Day of Resurrection. And Allâh gives (of His Bounty, Blessings, Favours, Honours on the Day of Resurrection) to whom He wills without limit.
كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (யாவரும்) ஒரே கூட்டத்தராகவே இருந்தனர். பிறகு (நன்மை செய்வோருக்கு) நன்மாராயங்கூறக்கூடியவர்களாகவும் தீமை செய்வோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும், அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும், அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதில் அவன் தீர்ப்புச் செய்வதற்காக, அவர்களோடு சத்தியத்தைக் கொண்டுள்ள வேதத்தையும் இறக்கி வைத்தான். மேலும், அவர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் தம்மிடையே உள்ள பொறாமையின் காரணமாக அதைக் கொடுக்கப் பட்டவர்கள் தவிர (மற்றெவரும்) அதில் மாறுபடவில்லை. ஆகவே, உண்மையிலிருந்து எதில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ அதன் பக்கம் தன் அனுமதி கொண்டு அல்லாஹ் விசுவாசங்கொண்டோருக்கு நேர் வழி காட்டினான். இன்னும், தான் நாடியவரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
Mankind were one community and Allâh sent Prophets with glad tidings and warnings, and with them He sent down the Scripture in truth to judge between people in matters wherein they differed. And only those to whom (the Scripture) was given differed concerning it after clear proofs had come unto them through hatred, one to another. Then Allâh by His Leave guided those who believed to the truth of that wherein they differed. And Allâh guides whom He wills to the Straight Path.
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன் சென்று விட்டார்களே, அத்தகையோரின் உதாரணம்: (சோதனை நிறைந்த நிலைகள்) உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாமென்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன. தூதரும் அவருடன் விசுவாசங்கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வந்து சேரும்) என்று கூறும்வரை அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக்கழிக்கப்பட்டு விட்டார்கள், “தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது” (என்று கூறப்பட்டது).
Or think you that you will enter Paradise without such (trials) as came to those who passed away before you? They were afflicted with severe poverty and ailments and were so shaken that even the Messenger and those who believed along with him said, "When (will come) the Help of Allâh?" Yes! Certainly, the Help of Allâh is near!
يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
(நபியே) “எதை யாருக்குச் செலவு செய்வது?” என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: “(நன்மையை நாடி) நீங்கள் பொருளிலிருந்து செலவு செய்வது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உரியதாகும். இன்னும் நன்மையிலிருந்து எதையும் நீங்கள் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்.
They ask you (O Muhammad صلى الله عليه وسلم) what they should spend. Say: Whatever you spend of good must be for parents and kindred and orphans and Al-Masâkîn (the poor) and the wayfarer, and whatever you do of good deeds, truly, Allâh knows it well.