8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 3

/ 604
Page 3

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

2. Al-Baqarahسورة البقرة

2:6

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

(நபியே!) நிச்சயமாக நிராகரிக்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு, நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாதிருப்பதும், அவர்களுக்குச் சமமே. அவர்கள் விசுவாசங் கொள்ள மாட்டார்கள்.

Verily, those who disbelieve, it is the same to them whether you (O Muhammad صلى الله عليه وسلم) warn them or do not warn them, they will not believe.

2:7

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰٓ أَبْصَـٰرِهِمْ غِشَـٰوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

அவர்களுடைய இதயங்களின் மீதும், அவர்களுடைய செவிப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும், அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிருக்கிறது;மேலும், அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.

Allâh has set a seal on their hearts and on their hearing, (i.e. they are closed from accepting Allâh’s Guidance), and on their eyes there is a covering. Theirs will be a great torment.

2:8

وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ

இன்னும், “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவோர் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்; அவர்களோ விசுவாசங்கொண்டவர்களல்லர்.

And of mankind, there are some (hypocrites) who say: "We believe in Allâh and the Last Day" while in fact they believe not.

2:9

يُخَـٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَمَا يَخْدَعُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ

அவர்கள் அல்லாஹ்வையும், விசுவாசங்கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.

They (think to) deceive Allâh and those who believe, while they only deceive themselves, and perceive (it) not!

2:10

فِى قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْذِبُونَ

அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. அகவே, (அந்)நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்திவிட்டான். மேலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.

In their hearts is a disease (of doubt and hypocrisy) and Allâh has increased their disease. A painful torment is theirs because they used to tell lies.

2:11

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

மேலும், அவர்களிடம், “நீங்கள் பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று கூறப்பட்டால் அ(தற்க)வர்கள் “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோர் தாம் (குழப்பவாதிகளல்ல,)” எனக்கூறுகிறார்கள்.

And when it is said to them: "Make not mischief on the earth," they say: "We are only peace-makers."

2:12

أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ

தெரிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பம் செய்பவர்கள், எனினும் (இதை) அவர்கள் உணர மாட்டர்கள்.

Verily! They are the ones who make mischief, but they perceive not.

2:13

وَإِذَا قِيلَ لَهُمْ ءَامِنُوا۟ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓا۟ أَنُؤْمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُ ۗ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَـٰكِن لَّا يَعْلَمُونَ

மேலும், அவர்களிடம், “(குர்ஆனைச் செவியுற்று) மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால், அ(தற்க)வர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல், நாங்கள் விசுவாசங் கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இவர்கள் தான் மூடர்கள்; எனினும், (அதைப்பற்றி) அவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

And when it is said to them (hypocrites): "Believe as the people (followers of Muhammad صلى الله عليه وسلم, Al-Ansâr and Al-Muhajirûn) have believed," they say: "Shall we believe as the fools have believed?" Verily, they are the fools, but they know not.

2:14

وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ إِلَىٰ شَيَـٰطِينِهِمْ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُونَ

இன்னும், அவர்கள் விசுவாசங்கொண்டோரை சந்தித்தால், “நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங்கொண்டிருகிறோம்” எனக்கூறுகிறார்கள்; மேலும், அவர்கள் தங்களின் (இனத்தவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டால், “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் விசுவாசிகளைப்) பரிகாசம் செய்யகூடியவர்கள்தாம்” எனக் கூறுகின்றனர்.

And when they meet those who believe, they say: "We believe," but when they are alone with their Shayâtîn (devils - polytheists, hypocrites), they say: "Truly, we are with you; verily, we were but mocking."

2:15

ٱللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ

அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களுடைய வழிகேட்டில் கபோதிகளாக அவர்களை(த்தட்டழியும்படி) விட்டு வைத்திருக்கிறான்.

Allâh mocks at them and gives them increase in their wrong-doing to wander blindly.

2:16

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَـٰلَةَ بِٱلْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَـٰرَتُهُمْ وَمَا كَانُوا۟ مُهْتَدِينَ

இத்தகையோர்தான் நேர்வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்; ஆகவே இவர்களுடைய (இந்த) வியாபாரம், இலாபமளிக்கவில்லை. மேலும், இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இலர்.

These are they who have purchased error for guidance, so their commerce was profitless. And they were not guided.