8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 26

/ 604
Page 26

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

2. Al-Baqarahسورة البقرة

2:170

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۗ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ

மேலும், (இவ்வேதமாகிய) அல்லாஹ், இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை! நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதன்மீது கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர்; அவர்களுடைய மூதாதையர்கள் எதையுமே விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அப்படியே பின்பற்றுவார்கள்?)

When it is said to them: "Follow what Allâh has sent down." They say: "Nay! We shall follow what we found our fathers following." (Would they do that!) even though their fathers did not understand anything nor were they guided?

2:171

وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءً وَنِدَآءً ۚ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَعْقِلُونَ

(மூதாதையர்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்போருக்கு உதாரணம் வெறும் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர வேறெதையும் கேட்காத (பிராணிகளைக்) கூவி அழைப்பவனின் உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (மேலும், அவர்கள்) செவிடர்கள் (உண்மையைக் கேட்கவே மாட்டார்கள்), ஊமையர்கள் (உண்மையைப் பேசவே மாட்டார்கள்), குருடர்கள் (அவர்களுக்கு பயன் தரக்கூடியவற்றைப் பார்க்கவே மாட்டார்கள்.) ஆதலால் அவர்கள் எதையும் அறிந்துணர மாட்டார்கள்.

And the example of those who disbelieve is as that of him who shouts to those (flock of sheep) that hears nothing but calls and cries. (They are) deaf, dumb and blind. So they do not understand. (Tafsîr Al-Qurtubi )

2:172

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு (வணக்கத்திற்குரிய! அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் - நன்றி செலுத்துங்கள்.

O you who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism)! Eat of the lawful things that We have provided you1 with, and be grateful to Allâh, if it is indeed He Whom you worship.

  1. Narrated An-Nu‘mân bin Bashîr رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "Both legal and illegal things are evident but in between them there are doubtful (unclear) things, and most of the people have no knowledge about them. So… Show more

    Narrated An-Nu‘mân bin Bashîr رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "Both legal and illegal things are evident but in between them there are doubtful (unclear) things, and most of the people have no knowledge about them. So whoever saves himself from these unclear things, he saves his religion and his honour. And whoever indulges in these unclear things is like a shepherd who grazes (his animals) near the Himâ (private pasture) of someone else, and at any moment he is liable to get in it. (O people!) Beware! Every king has a Himâ and the Himâ of Allâh عز وجل on the earth is His illegal (forbidden) things. Beware! There is a piece of flesh in the body if it becomes good (reformed), the whole body becomes good, but if it gets spoilt, the whole body gets spoilt and that is the heart." (Sahih Al-Bukhâri, Vol.1, Hadîth No.49).

2:173

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

உங்களின்மீது (அல்லாஹ்வாகிய) அவன் ஹராம் (என்று தடை) ஆக்கியிருப்பதெல்லாம் (தானாகச்) செத்ததையும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவருக்காக (அறுப்புப் பிராணிகளில்) எதற்கு பெயர் கூறப்பட்டு விடப்பட்டதோ அதையும்தான். ஆகவே எவரேனும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் வரம்பு மீறாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப் பட்டுவிட்டால் அவர்மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்.

He has forbidden you only the Maitah (dead animals), and blood, and the flesh of swine, and that which is slaughtered as a sacrifice for others than Allâh (or has been slaughtered for idols, on which Allâh’s Name has not been mentioned while slaughtering). But if one is forced by necessity without wilful disobedience nor transgressing due limits, then there is no sin on him. Truly, Allâh is Oft-Forgiving, Most Merciful.

2:174

إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۙ أُو۟لَـٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு, அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தையும் வாங்குகின்றனரே அத்தகையோர் - அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதனையும்) உட்கொள்வதில்லை. – மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; (அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு.)

Verily, those who conceal what Allâh has sent down of the Book, and purchase a small gain therewith (of worldly things), they eat into their bellies nothing but fire. Allâh will not speak to them on the Day of Resurrection, nor purify them, and theirs will be a painful torment.

2:175

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَـٰلَةَ بِٱلْهُدَىٰ وَٱلْعَذَابَ بِٱلْمَغْفِرَةِ ۚ فَمَآ أَصْبَرَهُمْ عَلَى ٱلنَّارِ

இத்தகையோர்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் மன்னிப்புக்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். ஆகவே, (நரக) நெருப்பின்மீது அவர்களை சகிக்கச் செய்தது எதுவோ?

Those are they who have purchased error at the price of Guidance, and torment at the price of Forgiveness. So how bold they are (for evil deeds which will push them) to the Fire.

2:176

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِى ٱلْكِتَـٰبِ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ

இது (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கி வைத்துள்ளான் என்பதினாலாகும். மேலும், நிச்சயமாக இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (உண்மையைவிட்டுத்) தூரமான பிளவிலேயே இருக்கிறார்கள்.

That is because Allâh has sent down the Book (the Qur’ân) in truth. And verily, those who disputed as regards the Book are far away in opposition.