9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 246

/ 604
Page 246

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

12. Yusufسورة يوسف

12:87

يَـٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَـٰفِرُونَ

“என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! நிச்சயமாக (அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்ற) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்” (என்றும் கூறினார்.)

"O my sons! Go you and enquire about Yûsuf (Joseph) and his brother, and never give up hope of Allâh’s Mercy. Certainly no one despairs of Allâh’s Mercy, except the people who disbelieve."

12:88

فَلَمَّا دَخَلُوا۟ عَلَيْهِ قَالُوا۟ يَـٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا ٱلضُّرُّ وَجِئْنَا بِبِضَـٰعَةٍ مُّزْجَىٰةٍ فَأَوْفِ لَنَا ٱلْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَآ ۖ إِنَّ ٱللَّهَ يَجْزِى ٱلْمُتَصَدِّقِينَ

பிறகு, அவர்கள் (எகிப்துக்கு வந்து யூஸுஃபாகிய) அவர்பால் நுழைந்து அவரிடம் (எகிப்திய அரசின்) “அமைச்சரே” எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் (பஞ்சத்தின்) கொடுமை பீடித்துக் கொண்டது, (எங்களிடமிருந்த) அற்பப்பொருளையே நாங்கள் கொணடு வந்திருக்கிறோம், ஆகவே, (அதனைப் பெற்றுக்கொண்டு) எங்களுக்கு வேண்டிய (தானியத்)தைப் பூரணமாக அளந்து கொடுத்து (மேற்கொண்டும்) எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்வோருக்கு நற்கூலி அளிப்பான்” என்று கூறினார்கள்.

Then, when they entered unto him [Yûsuf (Joseph)], they said: "O ruler of the land! A hard time has hit us and our family, and we have brought but poor capital, so pay us full measure and be charitable to us. Truly, Allâh does reward the charitable."

12:89

قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنتُمْ جَـٰهِلُونَ

(அச்சமயம் அவர்,) “நீங்கள் அறிவீனர்களாக இருந்தபோது, யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்.

He said: "Do you know what you did with Yûsuf (Joseph) and his brother, when you were ignorant?"

12:90

قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ ۖ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَـٰذَآ أَخِى ۖ قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ ۖ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

அ(தற்க)வர்கள் (திடுக்கிட்டு) “நிச்சயமாக நீர்தான், யூஸுஃபா,” என்று கேட்டார்கள், அ(தற்க)வர், “நான்தான் யூஸுஃப், இவர் என் சகோதரர், திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான், (ஏனென்றால்,) அது நிச்சயமாக எவர் பயபக்தியுடன் இருந்து (கஷ்டங்களையும் சகித்துப்) பொறுத்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தோரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்” என்று கூறினார்.

They said: "Are you indeed Yûsuf (Joseph)?" He said: "I am Yûsuf (Joseph), and this is my brother (Benjamin). Allâh has indeed been gracious to us. Verily, he who fears Allâh with obedience to Him (by abstaining from sins and evil deeds, and by performing righteous good deeds), and is patient, then surely, Allâh makes not the reward of the Muhsinûn (good-doers - see V.2:112) to be lost."

12:91

قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيْنَا وَإِن كُنَّا لَخَـٰطِـِٔينَ

அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்கு பெரும்) தவறிழைத்தவர்களாக இருப்பினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட(பெருங்கிருபை கொண்டு) உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்” என்று கூறினார்கள்.

They said: "By Allâh! Indeed Allâh has preferred you above us, and we certainly have been sinners."

12:92

قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ ٱلْيَوْمَ ۖ يَغْفِرُ ٱللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

அ(தற்க)வர் “இன்றையத்தினம் உங்கள் மீது யாதொரு நிந்தனையும் இல்லை, அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மகாக்கிருபையாளன்” என்று கூறினார்.

He said: "No reproach on you this day; may Allâh forgive you, and He is the Most Merciful of those who show mercy!1

  1. Narrated Abu Hurairah رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "Verily Allâh created mercy. The day He created it, He made it into one hundred parts. He withheld with Him ninety-nine parts, and sent its one part to all His creatures.… Show more

    Narrated Abu Hurairah رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "Verily Allâh created mercy. The day He created it, He made it into one hundred parts. He withheld with Him ninety-nine parts, and sent its one part to all His creatures. Had a disbeliever known of all the mercy which is in the Hands of Allâh, he would not have lost hope of entering Paradise, and had a believer known of all the punishment which is present with Allâh, he would not have considered himself safe from the Hell-fire." (Sahih Al-Bukhari, Vol.8, Hadith No.476).

12:93

ٱذْهَبُوا۟ بِقَمِيصِى هَـٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِى يَأْتِ بَصِيرًا وَأْتُونِى بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

“நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டுபோய் என் தந்தை முகத்தின் மீது போடுங்கள், (அதனால், உடனே) அவர் பார்வையுடையவராக(த்திரும்பி) வருவார், பின்னர், நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள யாவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி (அனுப்பி)னார்.

"Go with this shirt of mine, and cast it over the face of my father, he will become clear-sighted, and bring me all your family."

12:94

وَلَمَّا فَصَلَتِ ٱلْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّى لَأَجِدُ رِيحَ يُوسُفَ ۖ لَوْلَآ أَن تُفَنِّدُونِ

(அவர்களுடைய) ஒட்டகக்கூட்டம் (எகிப்திலிருந்து) பிரிந்த சமயமே அவர்களின் தந்தை “(இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன், (முதுமையின் காரணமாக) அறிவு மங்கிப் பேசுவதாக என்னை நீங்கள் கூறாதிருக்க வேண்டுமே!” என்றார்.

And when the caravan departed, their father said: "I do indeed feel the smell of Yûsuf (Joseph), if only you think me not a dotard (a person who has weakness of mind because of old age)."

12:95

قَالُوا۟ تَٱللَّهِ إِنَّكَ لَفِى ضَلَـٰلِكَ ٱلْقَدِيمِ

(இதனைச் செவியுற்ற அவருடைய ஏனைய மக்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம்முடைய பழைய வழிகேட்டில்தான் இருக்கிறீர்” என்று கூறினார்கள்.

They said: "By Allâh! Certainly, you are in your old error."