8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 17

/ 604
Page 17

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

2. Al-Baqarahسورة البقرة

2:106

۞ مَا نَنسَخْ مِنْ ءَايَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَآ أَوْ مِثْلِهَآ ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால், அல்லது அதை மறக்கச் செய்துவிட்டால்; அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றவற்றை நாம் கொண்டுவருவோம்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா?

Whatever a Verse (revelation) do We abrogate or cause to be forgotten, We bring a better one or similar to it. Know you not that Allâh is able to do all things?

2:107

أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ

நிச்சயமாக அல்லாஹ்- அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? (விசுவாசங்கொண்டோரே) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் எவ்வித உதவியாளரும் இல்லை.

Know you not that it is Allâh to Whom belongs the dominion of the heavens and the earth? And besides Allâh you have neither any Walî (protector or guardian) nor any helper.

2:108

أَمْ تُرِيدُونَ أَن تَسْـَٔلُوا۟ رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبْلُ ۗ وَمَن يَتَبَدَّلِ ٱلْكُفْرَ بِٱلْإِيمَـٰنِ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ

விசுவாசங்கொண்டோரே! இதற்கு முன்னர் மூஸா(விடம்) கேள்விகள் கேட்கப்பட்டமாதிரி நீங்களும் உங்கள் தூதரிடம் (வீணான கேள்விகளைக்) கேட்க நாடுகிறீர்களா? எவர் (இவ்வாறு கேள்விகளைக் கேட்டுத்) தன்னுடைய ஈமானை நிராகரிப்பை (குப்ரை)க் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியை திட்டமாகத் தவறவிட்டு விட்டார்.

Or do you want to ask your Messenger (Muhammad صلى الله عليه وسلم) as Mûsâ (Moses) was asked before (i.e. show us openly our Lord)? And he who changes Faith for disbelief, verily, he has gone astray from the Right Way.

2:109

وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ لَوْ يَرُدُّونَكُم مِّنۢ بَعْدِ إِيمَـٰنِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْحَقُّ ۖ فَٱعْفُوا۟ وَٱصْفَحُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

வேதத்தையுடையோரில் அநேகர், உண்மை அவர்களுக்கு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமையின் காரணமாக நீங்கள் ஈமான் கொண்ட பிறகும் உங்களை நிராகரிப்போராக திருப்பிவிட வேண்டுமென்று ஆசை வைக்கிறார்கள், ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவரும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விடுங்கள்; பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

Many of the people of the Scripture (Jews and Christians) wish that if they could turn you away as disbelievers after you have believed, out of envy from their ownselves, even after the truth (that Muhammad صلى الله عليه وسلم is Allâh’s Messenger) has become manifest unto them. But forgive and overlook, till Allâh brings His Command.1 Verily, Allâh is Able to do all things.

  1. The provision of this verse has been abrogated by the (V.9:29). (Tafsir At-Tabari)

2:110

وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

நீங்கள் தொழுகையையும் நிறைவேற்றுங்கள்; ‘ஜகாத்’ தையும் கொடுங்கள், உங்களுக்காக நீங்கள் எந்த நன்மையை முற்படுத்தி வைக்கின்றீர்களோ அதனை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.

And perform As-Salât (Iqâmat-as-Salât), and give Zakât and whatever of good (deeds that Allâh loves) you send forth for yourselves before you, you shall find it with Allâh. Certainly, Allâh is All-Seer of what you do.

2:111

وَقَالُوا۟ لَن يَدْخُلَ ٱلْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَـٰرَىٰ ۗ تِلْكَ أَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوا۟ بُرْهَـٰنَكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

(நபியே) யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ ஆகியவரைத் தவிர (வேறெவரும்) சுவர்க்கம் பிரவேசிக்கவே மாட்டார்கள் என அவர்கள் கூறுகிறார்கள், இது அவர்களுடைய வீண் எண்ணமேயாகும்; (ஆகவே, உங்கள் கூற்றில்) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தை கொண்டு வாருங்கள்” என (நபியே!) நீர் கூறுவீராக.

And they say, "None shall enter Paradise unless he be a Jew or a Christian." These are their own desires. Say (O Muhammad صلى الله عليه وسلم), "Produce your proof if you are truthful."

2:112

بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

ஆம்! எவர் தன் முகத்தை அவர் நன்மை செய்து கொண்டிருக்கிற நிலையில் அல்லாஹ்வுக்காக ஒப்படைக்கிறாரோ – அவருடைய நற்கூலி அவருடைய இரட்சகனிடம் அவருக்குண்டு, (இத்தகையோர்) அவர்கள் மீது எத்தகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.

Yes, but whoever submits his face (himself) to Allâh (i.e. follows Allâh’s Religion of Islâmic Monotheism) and he is a Muhsin 1 then his reward is with his Lord (Allâh), on such shall be no fear, nor shall they grieve. [See Tafsir Ibn Kathîr ].

  1. "Muhsin" a good-doer who performs good deeds totally for Allâh’s sake only without any show off or to gain praise or fame, etc., and in accordance with the Sunnah of Allâh’s Messenger Muhammad صلى الله عليه وسلم.