8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 123

/ 604
Page 123

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

5. Al-Ma'idahسورة المائدة

5:91

إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ

நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவிலும், சூதாட்டத்திலும் (அதன் மூலம்) உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை (நிறைவேற்றுவதை) விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?

Shaitân (Satan) wants only to excite enmity and hatred between you with intoxicants (alcoholic drinks) and gambling, and hinder you from the remembrance of Allâh and from As-Salât (the prayer). So, will you not then abstain?

5:92

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (மாறு செய்யாது) எச்சரிக்கையாகவுமிருங்கள், எனவே, (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், அப்போது நிச்சயமாக நம் தூதர் மீது கடமையெல்லாம் (நம் கட்டளைகளை உங்களுக்குத்) தெளிவாக எத்தி வைப்பது தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்,

And obey Allâh and the Messenger (Muhammad صلى الله عليه وسلم), and beware (of even coming near to drinking or gambling or Al-Ansâb, or Al-Azlâm, etc.) and fear Allâh. Then if you turn away, you should know that it is Our Messenger’s duty to convey (the Message) in the clearest way.

5:93

لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தவர்கள் மீது அவர்கள் பயந்து விசுவாசங்கொண்டு (அதன்மீது நிலைத்திருந்து) நற்செயல்கள் புரிந்து பின்னர், அவர்கள் (அல்லாஹ்வை) பயந்து விசுவாசங்கொண்டு பிறகும் (அல்லாஹ்வை) பயந்து (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (தடுக்கப்பட்டவற்றிலிருந்து முன்னர்) அவர்கள் சாப்பிட்டதில் எவ்வித குற்றமுமில்லை, அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கிறான்.!

Those who believe and do righteous good deeds, there is no sin on them for what they ate (in the past), if they fear Allâh (by keeping away from His forbidden things), and believe and do righteous good deeds, and again fear Allâh and believe, and once again fear Allâh and do good deeds with Ihsân (perfection). And Allâh loves the good-doers.

5:94

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ

விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில்) உங்களுடைய கரங்களும், உங்களுடைய ஈட்டிகளும், எதனை எளிதில் அடையுமோ, அத்தகைய வேட்டைப்பிராணிகளில் ஏதாவதொன்றைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான், மறைவில் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடுவதற்காகவே (இவ்வாறு செய்கிறான்), ஆகவே, இதற்குப் பின்னர் எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

O you who believe! Allâh will certainly make a trial of you with something in (the matter of) the game that is well within the reach of your hands and your lances, that Allâh may test him who fears Him unseen. Then whoever transgresses thereafter, for him there is a painful torment.

5:95

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًۢا بَـٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّـٰرَةٌ طَعَامُ مَسَـٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள், மேலும், உங்களில் எவரேனும், வேண்டுமென்றே அதனைக் கொன்றுவிட்டால், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) பிராணிகளிலிருந்து அவர் கொன்றுவிட்டதற்குச் சமமானது (அதற்கு) தண்டனையாகும், உங்களில் நீதியுடைய இருவர் அதற்குத் தீர்ப்பளிக்கும் பொருளை நீங்கள் ஈடாகக் கொடுக்க வேண்டும், (அது) ‘கஅபா’வை அடையவேண்டிய குர்பானியாகும், அல்லது (அதன் கிரயத்தில்,) ஏழைகளுக்கு ஆகாரமளிப்பது அதற்கு பரிகாரமாகும், அல்லது தான் செய்த காரியத்தின் தண்டனையை அவன் அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும், முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்து விட்டான், (இத்தகைய குற்றம் செய்ய) எவரும் (பின்னும்) மீண்டால் அப்போது அல்லாஹ் அவரை தண்டனை செய்வான்; இன்னும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தண்டித்தலையுடையவன்.

O you who believe! Kill not the game while you are in a state of Ihrâm [for Hajj or ‘Umrah (pilgrimage)], and whosoever of you kills it intentionally, the penalty is an offering, brought to the Ka‘bah, of an eatable animal (i.e. sheep, goat, cow) equivalent to the one he killed, as adjudged by two just men among you; or, for expiation, he should feed Masâkîn (poor persons), or its equivalent in Saum (fasting), that he may taste the heaviness (punishment) of his deed. Allâh has forgiven what is past, but whosoever commits it again, Allâh will take retribution from him. And Allâh is All-Mighty, All-Able of Retribution.